வயிற்று தொப்பையை 1 மாதத்தில் குறைக்க உதவும் உணவுகள்!
வயிற்றில் உள்ள கொழுப்பை எளிதாக குறைக்க தினமும் சில விதிகளை சாப்பிட்டு வந்தால் போது. ஒரு மாதத்தில் உடல் எடையில் பெரிய மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.
பலருக்கும் உடல் எடை அதிகரிப்பு பிரச்சனை தற்போது இருந்து வருகிறது. உடல் எடை அதிகரிப்பால் பல்வேறு உடல்நல கோளாறுகளும் ஏற்படுகிறது. என்னதான் உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாட்டுடன் இருந்தாலும் உடல் எடை குறைவதில்லை. இன்றைய காலக்கட்டத்தில் உடல் பருமன் மற்றும் வயிற்று பகுதியில் சேரும் கூடுதல் கொழுப்பு பொதுவான ஒரு பிரச்சனையாக உருவாகி உள்ளது. தவறான வாழ்க்கை முறை, உணவு பழக்கம் தான் இதற்கு முக்கிய காரணமாக அமைகிறது. சரியான நேரத்தில் சாப்பிடாதது, ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவது தான் இதற்கு காரணமாக கூறப்படுகிறது. வயிற்றில் சேரும் கூடுதல் கொழுப்பு அன்றாட வாழ்க்கையிலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
மேலும் படிக்க | மளமளனு எடை குறைய காலையில் இந்த சூப்பர் பானங்களை குடிங்க போதும்
ஒருமுறை உடல் எடை ஏறிவிட்டால் அதனை குறைப்பது மிகவும் கடினம். ஆனால் சரியான முறையில் உணவுகளை எடுத்து கொண்டால் உடல் எடையை எளிதாக குறைக்க முடியும். வயிற்று பகுதியில் சேரும் கொழுப்புகளை குறைக்க சில பிரத்யேக விதைகள் அதிகம் உதவும். உடை எடையை குறைக்க சியா விதைகள் அதிகம் உதவுகிறது. இவற்றில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இவை உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது. காலையில் சியா விதைகளை சாப்பிடும் போது நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வு இருக்கும். இதனால் அதிகம் சாப்பிடுவது கட்டுப்படுத்தப்படுகிறது. மேலும் சியா விதைகள் செரிமான அமைப்பை அதிகப்படுத்துகிறது. அதே சமயம் வளர்சிதை மாற்றத்தையும் அதிகப்படுத்துகின்றன. இவற்றை சாப்பிடுவதால் வயிற்றில் இருக்கும் கூடுதல் கொழுப்பை கரைக்க முடியும்.
சியா விதைகளை போல சூரியகாந்தி விதைகளும் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. சூரியகாந்தி விதைகள் முடி ஆரோக்கியம், சரும பாதுகாப்பிற்கு உதவுகிறது. மேலும் உடல் எடையை கட்டுக்குள் வைக்கின்றன. சூரியகாந்தி விதைகளில் உள்ள பண்புகள் உடலில் உள்ள கூடுதல் கொழுப்பை குறைக்க உதவுகிறது. சூரியகாந்தி விதைகள் தினசரி சாப்பிடும் போது செரிமான அமைப்பும் மேம்படுகிறது, தொப்பை கொழுப்பை எரிக்க உதவியாக இருக்கும். ஆளி விதையிலும் உடலுக்குத் தேவையான பல சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ளது. இவை உடலில் உள்ள கூடுதல் கொழுப்பை வெளியேற்றுகிறது. மேலும் ஆளி விதிகளில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்து, இரும்பு சத்து உடல் ஆற்றலுக்கு உதவுகிறது. இது தவிர ஆளி விதைகளை காய்கறிகள் போன்றவற்றிலும் பயன்படுத்தலாம்.
பூசணி விதைகளும் உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது. இவற்றில் வைட்டமின்கள், தாதுக்கள் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளது. இவை உடலை வலுப்படுத்துவதோடு, தேவையற்ற தொப்பையை குறைக்க உதவுகின்றன. பூசணி விதைகள் உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகப்படுத்தி கூடுதல் கொழுப்பை சரி செய்ய உதவுகிறது. அதே சமயம் இவை செரிமான அமைப்பையும் மேம்படுத்துகிறது. உடல் எடையை குறைப்பது மட்டுமின்றி பூசணி விதைகளை தினமும் சாப்பிட்டு வந்தால் உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை. )
மேலும் படிக்க | மறதி நோய் முதல் புற்றுநோய் வரை...வியக்க வைக்கும் மஞ்சள் மகிமை..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ