இந்த நேரத்தில்தான் டெங்கு கொசுக்கள் அதிகம் கடிக்கும்: பாதுகாப்பாய் இருப்பது எப்படி?

Dengue Fever: டெங்கு காய்ச்சல் பலருக்கு சாதாரணமான காய்ச்சல் போல சில நாட்களில் குணமாகிவிடும். எனினும் சிலருக்கு இது கடுமையான விளைவுகளையும் ஏற்படுத்தும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 31, 2024, 01:43 PM IST
  • இந்த நேரத்தில் டெங்கு கொசுக்கள் ஆக்டிவாக இருக்கும்.
  • டெங்கு கொசுக்களிடமிருந்து தப்பிப்பது எப்படி?
  • இந்த மருந்துகளை உட்கொள்ள வேண்டாம்.
இந்த நேரத்தில்தான் டெங்கு கொசுக்கள் அதிகம் கடிக்கும்: பாதுகாப்பாய் இருப்பது எப்படி? title=

Dengue Fever: நாடு முழுதும் நாளுக்கு நாள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகின்றது. பொதுவாகவே மழைக்காலத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவும். இந்த ஆண்டும் அதற்கு விதிவிலக்கல்ல. டெங்கு கொசுக்கடியால் பரவும் ஒரு வைரஸ் தொற்று. டெங்கு நோயாளியை கடிக்கும் கொசு மற்றவர்களையும் கடிக்கும்போது இது பரவுகிறது. டெங்கு நோயாளிகள் அதிகம் உள்ள இடங்களில் இருப்பவர்கள் மட்டுமல்லாமல், இந்த காலத்தில் அனைவருமே கொசுக்களிடமிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்வது நல்லது. 

கடுமையான டெங்கு பாதிப்பு

டெங்கு காய்ச்சல் பலருக்கு சாதாரணமான காய்ச்சல் போல சில நாட்களில் குணமாகிவிடும். எனினும் சிலருக்கு இது கடுமையான விளைவுகளையும் ஏற்படுத்தும். டெங்குவின் தீவிர நிலை, டெங்கு ரத்தக்கசிவு காய்ச்சல் (Dengue Hemorrhagic Fever) அல்லது டெங்கு அதிர்ச்சி நோய்க்குறி  (Dengue Shock Syndrome) என்றும் அழைக்கப்படுகிறது. கடுமையான டெங்குவினால் இரத்தப்போக்கு, இரத்த பிளேட்லெட்டுகள் குறைதல், ஆபத்தான முறையில் குறையும் இரத்த அழுத்தம், இரத்த பிளாஸ்மாவின் கசிவு, உறுப்பு செயலிழப்பு ஆகியவை ஏற்படக்கூடும். நிலைமை இன்னும் தீவிரமானால், சிலருக்கு மரணமும் சம்பவிக்கலாம். 

இந்த மருந்துகளை உட்கொள்ள வேண்டாம்

டெங்குவுக்கு குறிப்பிட்ட சிகிச்சை என்று எதுவும் இல்லை. எனினும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் எசிட்டமினோஃபென் (Acetaminophen) (பாராசிட்டமால்) போன்ற வலிநிவாரணிகள் மூலம் வீட்டிலேயே சிகிச்சை செய்துகொள்ளலாம். இபுப்ரூஃபன் மற்றும் ஆஸ்பிரின் போன்ற நான்-ஸ்டெராய்டல், ஏண்டி-இன்ஃப்ளமேடரி மருந்துகளை தவிர்க்க வேண்டும். ஏனெனில், இவை இரத்தப்போக்கு அபாயத்தை அதிகரிக்கக்கூடும். டெங்குவால் கடுமையான முறையில் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவது நல்லது. 

இந்த நேரத்தில் டெங்கு கொசுக்கள் ஆக்டிவாக இருக்கும்

PSRI மருத்துவமனையின் எமர்ஜென்சி பிரிவின் HOD டாக்டர். பிரஷாந்த் சின்ஹா, சுத்தமான தண்ணீரில் டெங்கு கொசுக்கள் செழித்து வளரும் என்றும் இந்த கொசுக்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அதிகம் செயல்படும் என்றும் கூறியுள்ளார். காலை வேளையிலும் மாலையில் சூரிய அஸ்தமனத்திற்கு முன்னரும் இந்த கொசுக்கள் அதிகம் கடிக்கின்றன. மாலை 4 முதல் 5 மணி வரை இவை அதிக சுறுசுறுப்பாக இருக்கும்.

டெங்கு கொசுக்களிடமிருந்து தப்பிப்பது எப்படி?

- தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

- கொசுக்களை விரட்டும் மஸ்கிடோ ரிபெல்லெண்டுகளை பயன்படுத்தலாம்.

- கொசுவலை, கை, கால்களை முழுவதுமாக மூடும் உடைகள், ஆகியவற்றை பயன்படுத்தலாம்.

- நோய் எதிர்ப்புச் சக்தி வலுவாக இருக்கும் வகையில் சத்தான உணவுகளை உட்கொள வேண்டும். 

மேலும் படிக்க | கல்லீரலை கவனமாய் பாதுகாக்க உதவும் அற்புதமான 5 உணவுகள்

டெங்கு அறிகுறிகள்:

பொதுவாக டெங்குவின் அறிகுறிகள் கொசு கடித்த 4-14 நாட்களுக்குப் பிறகுதான் தோன்றும். டெங்குவால் பாதிக்கப்பட்டால் தென்படும் முக்கிய அறிகுறிகள் பற்றி இங்கே காணலாம்.

- அதிக காய்ச்சல் (104°F / 40°C)
- கடுமையான தலைவலி
- உடல் வலி (தசைகள், எலும்புகள் அல்லது மூட்டுகளில் வலி)
- வாந்தி சங்கடம், குமட்டல்
- கண்களை அசைக்கும்போது உணரப்படும் வலி
- சுரப்பிகளில் வீக்கம்
- மார்பு மற்றும் மேல் மூட்டுகளில் தட்டம்மை போன்ற சொறி
- தோலில் அரிப்பு
- பசியின்மை 
- சுவையின் உணர்வில் பாதிப்பு

திரவ உணவுகள் அவசியம்

டெங்கு கொசு கடித்து, டெங்கு நோயால் பாதிக்கப்பட்டால், வெளியே செல்வதை தவிர்க்கவும். வீட்டில் இருந்தபடியே திரவ உணவுகளை அதிகம் எடுத்துக் கொண்டால் மட்டுமே டெங்குவை குணப்படுத்த முடியும். இளநீர் போன்றவற்றை தொடர்ந்து உட்கொள்ளலாம். காய்கள், பழங்கள், அதிக காரம், மசாலா இல்லாத உணவுகளை உட்கொள்ள வேண்டும். எனினும், இவை அனைத்தும் வீட்டு வைத்தியங்கள்தான். டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் முதன்மையாக, உடனடியாக மருத்துவரை அணுகி தேவையான பரிசோதனை செய்துகொண்டு அவர் பரிந்துரைக்கும் சிகிச்சையை எடுத்துக்கொள்ள வேண்டும். 

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை. )

மேலும் படிக்க | மளமளனு எடை குறைய காலையில் இந்த சூப்பர் பானங்களை குடிங்க போதும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News