இறந்த மனைவியின் சடலத்துடன் மூன்று நாள் வசித்த கணவர்...
மேற்கு வங்காளத்தின் நாடியா மாவட்டத்தில் ஒரு நபர் தனது மனைவியின் சடலத்துடன் மூன்று நாட்கள் வசித்து வந்த சம்பவம் தற்போது நாட்டு மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.
மேற்கு வங்காளத்தின் நாடியா மாவட்டத்தில் ஒரு நபர் தனது மனைவியின் சடலத்துடன் மூன்று நாட்கள் வசித்து வந்த சம்பவம் தற்போது நாட்டு மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.
தனது மனைவியின் சடலத்துடன் வசித்து வந்த கணவர் குறித்து அவரது அண்டை வீட்டார் கண்டறிந்த பிறகே இந்த விஷயம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
50 வயது கடந்த நிலையிலும், கல்லீரல் வியாதிகளால் பாதிக்கப்பட்டிருந்த பாரதி சந்தா என்ற பெண் கடந்த வாரம் இறந்ததாக தெரிகிறது. காவல்துறையினரின் கூற்றுப்படி, உடலின் நிலை குறைவு காரணமாகவே சில நாட்களுக்கு முன்பு அவர் இறந்துள்ளதாக கூறப்படுகிறது.
பாரதியை கடைசியாக பார்த்தது திங்களன்று என்று அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக அவரை அக்கம் பக்கத்தினர் பார்க்காத நிலையில் சந்தேகம் அடைந்து, வியாழக்கிழமை அவரது வீட்டிற்குச் செல்வதற்கு முன்பு அவரது கணவர் பச்சு சந்தாவிடம் விசாரித்துள்ளனர். பின்னர் சந்தேகத்தின் அடிப்படையில் அக்கப்பக்கத்தினர் காவல்துறையினரின் உதவியை நாடியுள்ளனர்.
இதனையடுத்து சம்பவயிடத்திற்கு வந்த காவல்துறையினர் சடத்தை மீட்டு, பச்சுவின் மனநிலை மதிப்பாய்வு செய்தனர்.
இதுபோன்ற சம்பவங்கள் கொல்கத்தாவில் நடப்பது இது முதல் முறை அல்ல, ஏற்கனவே இதுபோன்ற சம்பவம் கொல்கத்தாவில் நிகழ்ந்துள்ளது.
இந்த மாத தொடக்கத்தில், நகரின் தெற்கு புறநகரில் உள்ள பெஹாலாவில் உள்ள ஒரு வீட்டில் இருந்து ஒரு முதியவரின் அரை சிதைந்த உடலை காவல்துறையினர் கண்டுபிடித்தனர், அங்கு அவரது மகன் சடலத்துடன் ஐந்து நாட்கள் வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக ஜூன் 2015-ல், ஒரு நடுத்தர வயது மனிதர் தனது மூத்த சகோதரி மற்றும் இரண்டு செல்ல நாய்களின் எலும்புக்கூடுகளுடன் தெற்கு கொல்கத்தாவின் ராபின்சன் தெருவில் ஆறு மாதங்கள் வாழ்ந்து வந்தார் என்ற வழக்கு வெளிச்சத்திற்கு வந்தது குறிப்பிடத்தக்கது.