இன்றைய இளம் தலைமுறையினர் பாதி நேரத்தை இணையத்தில் செலவிடுகின்றனர். தெரியாத தகவல்கள் மற்றும் தேவைப்படும் தகவல்கள் என எதுவாக இருந்தாலும் முதலில் செல்வது இணையத்திற்கு தான். ஏனென்றால், தகவல் களஞ்சியமாக இருக்கும் இணையத்தில் இல்லாத தகவல்களே இல்லை என்று கூறிவிடலாம். உதாரணமாக, பிடித்த ஒருவரிடம் நட்பாக பழகுவது முதல் காதலை தெரிவிப்பது, காதலை கண்டுபிடிப்பது, காதலிக்கு சர்பிரைஸாக என்ன பரிசு கொடுக்கலாம் என்பது வரை அனைத்தையும் இணையத்தில் படித்து தெரிந்து கொள்ளலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Money Tips: பர்ஸில் இவற்றை வைத்தால் பணம் விரைவில் காலியாவிடும்


ஆண்களைப் போலவே பெண்களும் தங்களுக்கு தேவையான, அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்களுக்கு இணையத்தை தான் முதலில் பயன்படுத்துகின்றனர். வேலை வாய்ப்பு, உடல் பருமன், அழகு குறிப்புகள் உள்ளிட்ட விஷயங்களை பொதுவாக தேடும் பெண்கள், இன்னும் சில விஷயங்களை கூடுதலாக அதிகம் கவனம் கொடுத்து தேடுகின்றனராம். இந்த விஷயம் லேட்டஸ்டாக எடுக்கப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. 


இது தொடர்பாக அண்மையில் வெளியாகியிருக்கும் ஆய்வு ஒன்றில் நாடு முழுவதும் சுமார் 150 மில்லியன் பேர் இணையத்தை பயன்படுத்துகின்றனர். அதில் 20 மில்லியன் பெண்கள் சராசரியாக இணையத்தை பயன்படுத்துகிறார்களாம். அவர்களில் 15 முதல் 34 வயதுக்குட்பட்டவர்கள் 75 சதவீதம் பேர். 31 விழுக்காடு பதின் பருவ பெண்கள் இணையத்தில் உணவு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை குறித்த தகவல்களை தேடுகிறார்களாம். 17 விழுக்காடு பெண்கள் உடலுறவு, மனச்சோர்வு, போதைப்பொருள் தொடர்பான தகவல்களை அதிகம் தேடுகின்றனர்.


மேலும் படிக்க | HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய செய்தி: நீங்கள் செலுத்தும் EMI அதிகரிக்கலாம்


இந்த தகவல்களைத் தவிர, தொழில் தொடங்குவது எப்படி?, வாழ்க்கையில் சாதிப்பது எப்படி?, பெண்களுக்கு சமுதாயத்தில் இருக்கும் வாய்ப்புகள் குறித்த தகவல்களையும் குறைந்த அளவில் தேடி இருக்கின்றனர். உடல் பருமன், உடல் பருமனை குறைப்பது எப்படி?, கூந்தல் அழகை மேம்படுத்துவது, முகத்தை பொலிவாக வைத்திருப்பது எப்படி? என்பது உள்ளிட்ட தகவல்களையும் அதிகம் தேடுவதாக அந்த ஆய்வு குறிப்பிட்டுள்ளது. ஹேர் கட் மற்றும் டிசைன் தொடர்பான தேடல்கள் அதிகம் இருப்பதாகவும் அந்த ஆய்வு கூறியுள்ளது. 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR