காலை அல்லது மாலை? காபி குடிக்க சரியான சிறந்த நேரம் எது?
Coffee Side Effects: பொதுவாக அனைவருக்கும் காலையில் எழுந்ததும் சோம்பலை தவிர்க்க காபி அல்லது டீ குடிப்பதை வழக்கமாக கொண்டு உள்ளனர்.
சிலர் காலை, மாலை மற்றும் தூங்கும் போது காபி அல்லது டீ குடிக்க விரும்புகின்றனர். ஒரு சிலருக்கு காபி குடிப்பது ஒரு அடிக்ட் ஆகவும் உள்ளது. சில நேரத்தில் காபி குடிப்பது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். காபி அதிகம் குடிப்பதால் தூக்கமின்மை போன்ற பிரச்சனை ஏற்படலாம். சரியான தூக்கம் இல்லை என்றால், இதய நோய், புற்றுநோய், ஹார்மோன் பிரச்சனைகள் போன்ற பல கடுமையான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தினமும் காலையில் எழுந்ததும் காபி குடிப்பதால் உடலில் உள்ள இயற்கையான சக்திகள் குறைகிறது. வெறும் வயிற்றில் காபி குடிப்பதால் அசிடிட்டி பிரச்சனைகள் ஏற்படும். சாப்பிடுவதற்கு முன் காபி குடிப்பது உடலுக்கு ஆபத்தானது.
மேலும் படிக்க | Hair Care Tips: இளவயதிலேயே நரை முடியா? இந்த காய் இருந்தால், நோ டென்ஷன்
காபி குடிக்க சரியான நேரம்
நமது மன அழுத்தத்திற்கு கார்டிசோல் இன்றியமையாததாகக் கருதப்படுகிறது. கார்டிசோல் தான் தினசரி உடலில் உள்ள ஆற்றல் நிலைகளையும் மன அழுத்த அளவையும் தீர்மானிக்கிறது. காலையில் எழுந்தவுடன், உடலில் கார்டிசோலின் அளவு அதிகரிக்கிறது. காலையில் காபி குடித்தால், உடலில் உள்ள இயற்கையான சக்திகள் குறைகிறது, இதனால் தான் காலையில் காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இது தவிர வெறும் வயிற்றில் காபி குடித்தால் அசிடிட்டி பிரச்சனைகள் ஏற்படும். இதனால் நெஞ்செரிச்சல் பிரச்சனை வரும். காலையில் எழுந்தவுடன் 1-2 மணிநேரம் கழித்து காபி குடிப்பது நல்லது. இது தவிர, சாப்பிடும் முன் காபி குடிப்பதும் உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.
அதிகமாக காபி குடிப்பதால்
நீங்கள் பிபி நோயாளியாக இருந்து, அதிக அளவு காபி குடித்தால் பிபி பிரச்சனையை மேலும் அதிகரிக்க செய்யும். இதனால் உடலில் மாரடைப்பு ஏற்படும் அபாயமும் உருவாகலாம். எனவே காஃபின் உள்ள பொருட்களை தவிர்ப்பது நல்லது. குளிர்காலத்தில் உடலை சூடாக வைத்திருக்க பலர் தேவைக்கு அதிகமாக காபி குடிப்பார்கள். அத்தகைய சூழ்நிலையில் உங்கள் செரிமானம் கெட்டு, இதனால் மலச்சிக்கல் மற்றும் வாயு பிரச்சனைகள் ஏற்படலாம். அளவுக்கு அதிகமாக காபி குடிப்பது எலும்புகளை பாதிக்கிறது. இதன் காரணமாக, உங்கள் மூட்டுகளில் கடுமையான வலி உணர்வு ஏற்படலாம். நீங்கள் அடிக்கடி தூக்கம் இன்மையால் அவதிப்பட்டால் காபி குடிப்பதை நிறுத்துங்கள். இதில் உள்ள காஃபின் தூக்கத்தை பாதிக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், அதிகப்படியான காபி குடிப்பது ஆரோக்கியத்திற்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.
காஃபின் மக்களை மிகவும் விழிப்பூட்டுவதாக அறியப்படுகிறது. இது சோர்வை ஏற்படுத்தும் அடினோசினின் செயல்களைத் தடுப்பதன் மூலம் செயல்படுகிறது. காபி அதிகம் குடித்தால் இதன் விளைவாக நடுக்கம் மற்றும் பதட்டம் ஏற்படலாம். அதிக அளவு காபி மன அழுத்தத்தை அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காபி, டீ போன்ற பானங்கள் ஆற்றலை அதிகரிப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், காஃபின் உங்கள் உடலை விட்டு வெளியேறிய பிறகு மீண்டும் சோர்வை ஏற்படுத்துவதன் மூலம் அவை தலைகீழ் விளைவை ஏற்படுத்தக்கூடும். காஃபின் பொதுவாக பெரும்பாலான மக்களை இதய நோய் அல்லது பக்கவாதத்திற்கு ஆளாக்குவதாகத் தெரியவில்லை. இருப்பினும், நரம்பியல் அமைப்பில் அதன் தூண்டுதல் விளைவுகளின் காரணமாக, இரத்த அழுத்தத்தை அதிகரிக்க இது பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. உயர் இரத்த அழுத்தம் இறுதியில் தமனிகளை சேதப்படுத்தும் மற்றும் உங்கள் இதயம் மற்றும் மூளைக்கு இரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்தலாம் என்பதால், இது மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.
மேலும் படிக்க | கீல்வாதம், மூட்டுவலி, யூரிக் அமில பாதிப்பா? உருளைக்கிழங்கும் சேனைக்கிழங்கும் நல்லது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ