தைராய்டு பிரச்சனையில் இருந்து விடுபட..... செய்ய வேண்டியதும்... செய்யக்கூடாததும்...!

தைராய்டு என்பது, கழுத்தின் நடுவில் அமைந்துள்ள ஒரு சிறிய பட்டாம்பூச்சி வடிவிலான சுரப்பி. இது ஒரு சிறிய உறுப்பு என்றாலும், நம் உடல் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. 

தைராய்டு நோய்களில் இரண்டு முக்கிய வகைகள் உள்ளன. அவை ஹைப்போ தைராய்டிசம் என்னும் குறைவான ஹார்மோன்கள் உற்பத்தி நிலை, மற்றும் ஹைப்பர் தைராய்டிசம் என்னும் அதிக ஹார்மோன்கள் உற்பத்தி நிலை ஆகும். தவறான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள் தைராய்டு பிரச்சனையை அதிகரிக்கின்றன. 

1 /8

கழுத்தின் நடுவில் அமைந்துள்ள ஒரு சிறிய பட்டாம்பூச்சி வடிவிலான சுரப்பி உற்பத்தி குறையும் போது அல்லது கூடும் போது, உடலில் பாதிப்பு ஏற்படுகிறது. தைராய்டு பிரச்சனை காரணமாக, உடல் எடை வேகமாக அதிகரிக்கத் தொடங்குகிறது. மறுபுறம், தைராய்டு காரணமாக உடலின் வளர்சிதை மாற்றம் பாதிக்கப்படுகிறது.

2 /8

கொத்தமல்லி தைராய்டை கட்டுப்படுத்த மிகவும் பயனுள்ள மருந்து. இதற்கு தினமும் கொத்தமல்லி தண்ணீர் குடிக்கலாம். கொத்தமல்லியுடன் சீரகத்தை சேர்த்துக் கொண்டால், பலன் இரட்டிப்பாகும். கொத்தமல்லி மற்றும் சீரகம் தலா 1 டீஸ்பூன் எடுத்து இரவு முழுவதும் தண்ணீரில் வைக்கவும். இதை வடிகட்டி காலையில் குடித்து வந்தால், தைராய்டில் இருந்து நிறைய நிவாரணம் கிடைக்கும்.

3 /8

கற்றாழையை தினமும் எடுத்துக் கொள்வது நமது தைராய்டு அளவை கட்டுக்குள் வைத்திருக்கும். உண்மையில், தைராய்டு பிரச்சனை வாத, பித்தம் மற்றும் கபத்தின் நிலையை பாதிப்பதாக கருதப்படுகிறது. கற்றாழை இதனை சமன் செய்வதுடன், உடலில் தைராய்டு அளவையும் சாதாரணமாக வைத்திருக்கும்.

4 /8

தைராய்டு பிரச்சனை இருந்தால், உணவில் ஒமேகா-3 நிறைந்த உணவை உண்ணுங்கள். ஒமேகா-3 அதிகம் உள்ள உணவில் சோயாபீன்ஸ், முட்டை, வால்நட்ஸ் மற்றும் மீன் போன்றவை அடங்கும். ஒமேகா-3 நிறைந்த உணவு தைராய்டை கட்டுப்படுத்த உதவுகிறது. மறுபுறம், ஒமேகா -3 நிறைந்த பொருட்களை உட்கொண்டால், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியும் வலுவடைகிறது.  

5 /8

ப்ரோக்கோலி, காலிஃபிளவர் மற்றும் முட்டைக்கோஸ் போன்றவை தைராய்டு பிரச்சனையை அதிகரிக்கும் என்பதால், இந்த காய்கறிகளை தவிர்க்க வேண்டும். இந்த காய்கறிகள் உடலில் தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தியைக் குறைக்கும்.

6 /8

உடற்பயிற்சி உடலுக்கு மிகவும் அவசியம். உடற்பயிற்சி செய்வதன் மூலம், உடல் கட்டுக்கோப்பாக இருப்பதுடன், மனநலமும் ஆரோக்கியமாக இருக்கும். தைராய்டு பிரச்சனை இருந்தால்,  தினமும் உடற்பயிற்சி செய்வதை பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள். உடற்பயிற்சி செய்வதால் தைராய்டு சுரப்பி சிறப்பாக செயல்படுவதோடு, உடல் எடையையும் குறைக்க உதவுகிறது.

7 /8

உடலில் பல வித பிரச்சனைகளுக்கு யோகாசனம் தீர்வை தருகிறது. இந்நிலையில்ம் தைராய்டு பிரச்சனையை தீர்க்க உதவும் யோகாசனங்களை முறையாக பயின்று செய்வதன் மூலம் தைராய்டு பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

8 /8

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.