ரயில் விபத்து ஏற்பட்ட உடனே பயணிகள் என்ன செய்ய வேண்டும்?
Indian Railways : ரயில் விபத்துகள் ஏற்பட்டவுடன் பயணிகள் என்ன செய்ய வேண்டும், உடனடி நிவாரணம் பெறுவது எப்படி என்பதை அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.
Indian Railways News : நாடு முழுவதும் இப்போது ரயில் விபத்துகள் அதிகம் நடந்து கொண்டிருக்கிறது. ரயில்கள் தடம் புரள்வது, ஒரே பாதையில் இரு ரயில்கள் நேருக்கு நேராக மோதிக் கொள்வதும் அன்றாட செய்திகளாக மாறிக் கொண்டிருக்கின்றன. இதுகுறித்து ரயில்வே துறையிம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக ரயில் விபத்துகளை தவிர்க்கவும், ரயில் விபத்து ஏற்பட்ட இடத்தில் உடனடியாக மீட்பு பணிகளை மேற்கொள்ளவும் ரயில்வே துறை சார்பில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில், ரயில் பயணிகளின் பாதுகாப்புக்காக இந்திய ரயில்வே போக்குவரத்துத் துறை சார்பில் ரயில் ரக்ஷக் தளத்தை அமைத்துள்ளது.
இந்த திட்டம் இப்போது வடமேற்கு ரயில்வே மண்டலத்தில் செயல்பாட்டில் உள்ளது. நாட்டில் அதிகரித்து வரும் ரயில் விபத்துகளை கருத்தில் கொண்டு இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. அதாவது, ஏதேனும் ரயில் விபத்து ஏற்பட்டால், பயணிகள் உடனடியாக 'ரயில் பாதுகாப்புக் குழு' உதவியுடன் மீட்புப் பணிகளில் ஈடுபடுவார்கள். விபத்து நடந்த இடத்துக்கு 'ரயில்வே பாதுகாப்புக் குழு' உடனடியாக வந்து மீட்புப் பணிகளை மேற்கொள்ளும்.
மேலும் படிக்க | விவாகரத்து பெற்ற பெண்கள் கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் பெறுவது எப்படி?
ரயில்வே காவலர் குழுவின் பலன் என்ன?
அண்மைக்காலமாக ரயில் தடம் புரண்ட சம்பவங்கள் அடிக்கடி காணப்படுகின்றன. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். மீட்புப் பணிகள் குறித்த நேரத்தில் நடைபெறாததும், ரயிலில் இடையூறும் ஏற்படுவதும் இதற்கு ஒரு காரணம். அதற்காகவே இந்த அணி அமைக்கப்பட்டுள்ளது. ரயில் விபத்துகளுக்குப் பிறகு, மீட்புப் பணிகளை மேற்கொள்ள பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அதிக நேரம் எடுக்கும். இதுபோன்ற சூழ்நிலையில், பயணிகளுக்கு உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. ஆனால் ரயில்வே காவலர் குழு விபத்து நடந்த இடத்திற்கு உடனடியாக சென்று மீட்புப் பணிகளை மேற்கொள்ள முடியும். இதன் மூலம் உடனடி நிவாரணப் பணிகள் சாத்தியமாகும்.
ரயில் விபத்து ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
ரயில் விபத்து ஏற்பட்டாலோ அல்லது பயணத்தின் போது விபத்து குறித்த செய்தி கிடைத்தாலோ, பாதுகாப்பு உதவி எண்ணான 182 என்ற இலவச எண்ணை அழைக்கலாம். இது தவிர, ரயில்வே உதவி எண் 1091-ஐயும் அழைக்கலாம். இந்த எண்களின் மூலம் பயணிகள் ரயில் விபத்து குறித்த விவரங்களை தெரிவித்து நிவாரணம் பெறலாம்.
மேலும் படிக்க | லவ் பார்ட்னர் உங்களுடன் சண்டை போடுவதே இல்லையா... உடனே உஷார் ஆகுங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ