விவாகரத்து பெற்ற பெண்கள் கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் பெறுவது எப்படி?

Alimony : விவாகரத்து சட்டப்படி பெண்கள் எவ்வளவு ஜீவனாசம் பெற முடியும், சட்டம் இது குறித்து சொல்வது என்ன? என்பதை தெரிந்துகொள்வோம்.

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 25, 2024, 02:42 PM IST
  • விவாகரத்து ஆன பெண்களுக்கான டிப்ஸ்
  • கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் பெறுவது எப்படி?
  • நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்
விவாகரத்து பெற்ற பெண்கள் கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் பெறுவது எப்படி? title=

திருமண வாழ்க்கையில் இருந்து விவாகரத்து பெறும்போது, கணவர் தனக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என மனைவி நீதிமன்றத்தில் முறையிட முடியும். இதில் வருமானம், சொத்து உள்ளிட்ட பல்வேறு காரணிகளை ஆராய்ந்து நீதிமன்றம் விவாகரத்து பெற்ற மனைவிக்கு எவ்வளவு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்பதை தீர்மானித்து உத்தரவிடும். 

வேலைக்கு செல்லும் பெண்கள் ஜீவனாம்சம் பெற முடியுமா?

வேலைக்கு செல்லும் பெண்கள் கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் பெற முடியாது என்ற பொதுபுத்தி இருக்கும் நிலையில், குற்றவியல் நடைமுறைச்சட்டம் 125ன்படி பணிக்கு செல்லும் பெண்களும் ஜீவனாம்சம் பெற முடியும். வேலைக்கு செல்வதால் கிடைக்கும் பணம் மூலம் தன்னை பராமரிக்க முடியாது, கணவருக்கு தன்னைவிட அதிக ஊதியம் கிடைக்கிறது என்பதை நிரூபித்தால்போதும். 

மேலும் படிக்க | லவ் பார்ட்னர் உங்களுடன் சண்டை போடுவதே இல்லையா... உடனே உஷார் ஆகுங்கள்!

எவ்வளவு ஜீவனாம்சம் தொகை கிடைக்கும்?

ஜீவனாம்சம் தொகையை பொறுத்தவரை நீதிமன்றங்களே தீர்மானிக்கும். ஆணின் வருமானம், சொத்துகள் ஆகியவற்றை ஆராய்ந்து முடிவெடுக்கும். கணவன் அவரின் தாய் பெயரில் எல்லா சொத்துகளையும் வாங்கி வைத்திருக்கிறார் என்றால், அப்போது கணவன், மனைவி இருவரும் அசையும், அசையா சொத்துகளை பட்டியலிட்டு ஆவணங்கள் மூலம் ஜீவனாம்சம் தொகையை நீதிமன்றத்தின் மூலம் பெற்றுக் கொள்ளலாம். 

ஜீவனாம்சம் தொகையை நிறுத்த முடியுமா?

விவாகரத்துக்கு முன்பே ஜீவனாம்சம் கொடுத்து விவாகரத்து பெறலாம், வழக்கு மூலம் விவாகரத்து பெற்ற பின்னரும் ஜீவனாசம் பெற முடியும். தகாத உறவில் இருப்பவர்களுக்கு ஜீவனாம்சம் கிடைக்காது. வேறு திருமணம் செய்து கொண்டால், கணவன் தான் வழங்கும் ஜீவனாம்சம் தொகையை நிறுத்த அனுமதிகோரியும் மனு தாக்கல் செய்யலாம். இருவருக்கும் பிறந்த குழந்தைக்கு தொடர்ந்து இருவரும் ஆதரவு கொடுக்க வேண்டியது கட்டாயம். 

ஜீவனாம்சம் தொகையை நிறுத்தினால் அபராதம்

போதிய காரணங்கள் தெரிவிக்காமல் திடீரென ஜீவனாம்சம் செலுத்தி வந்ததை நிறுத்தினால், நீதிமன்ற அவமதிப்புக்குள்ளாக நேரிடும். இதற்காக அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். மாஜிஸ்திரேட் வாரண்ட் பிறப்பிக்கூட வாய்ப்பு இருக்கிறது. எத்தனை மாதங்கள் ஜீவனாம்சம் தொகை வழங்கப்படவில்லையோ அத்தனை மாதங்களுக்கும் ஏற்ப சிறை தண்டனையும் விதிக்கப்படும். 10 மாதங்கள் என்றால் 10 மாதங்கள் சிறைவாசம் அனுபவிக்க வேண்டியிருக்கும். 

ஆண்கள் ஜீவனாம்சம் கோர முடியுமா?

ஆண்களும் பெண்களிடம் ஜீவனாம்சம் கோரி மனு தாக்கல் செய்ய முடியும். இந்து திருமணச் சட்டம் 1955ன்படி, உடல் நிலை காரணமாக தன்னால் சம்பாதிக்க முடியவில்லை என நிரூபித்தால் ஜீவனாம்சம் பெறலாம். அதற்கு திருமணம் 1954 சிறப்பு திருமண சட்டத்தின்படி நடந்திருக்க வேண்டும்.

மேலும் படிக்க | பகல் முழுவதும் ஏசி அறையில் இருப்பவரா நீங்கள்? இந்த விஷயத்தில் ஜாக்கிரதை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News