What To Do With Fermented Batter : இந்திய இல்லங்களில், பெரும்பாலானோர் அரிசி மாவை பேக்கெட்டுகளாகவும், கிலோ கணக்கிலும் கடையில் இருந்து வாங்கி வைத்துக்கொள்வர். ஒரு சிலர், கிலோ கணக்கில் அரிசியை ஊற வைத்து மாவாக அறைத்துக்கொள்வர். கடையில் விற்கப்படும் மாவு, ஏற்கனவே தாேசை அல்லது இட்லி ஊற்றும் பதத்திற்கு வந்து விடும். ஆனால், அந்த மாவை மிச்சம் வைத்து விட்டால் அது விரைவில் புளித்து விடவும் செய்யும். வீட்டில் அறைத்த மாவு, குளிர் சாதன பெட்டியில் வைத்திருந்தால், சில நாட்களுக்கு புளிக்காமல் இருக்கும். ஆனால், அதுவும் ஒரு சில நாட்கள்தான். இப்படி, மாவு புளித்துப்போனால் அதை தோசையாகவோ அல்லது இட்லியாகவாே செய்தால், அது வாயில் வைக்க முடியாத அளவிற்கு இருக்கும். அப்படி இருக்கும் சமயங்களில் அந்த மாவை என்ன செய்யலாம்? இதோ சில டிப்ஸ்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புளிப்பை குறைக்க டிப்ஸ்:


>புளித்த மாவில், பொடிப்பொடியாக அறிந்த சின்ன வெங்காயத்தை சேர்த்து அதனுடன் கொஞ்சம் பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து ஊத்தப்பம் செய்யலாம். இதனால், அந்த புளிப்பு சுவை கொஞ்சம் மங்கி போகும். 


>புளிக்காத மாவுடன் புளித்த மாவை கொஞ்சமாக சேர்த்து அந்த புளிப்பு சுவையை குறைக்கலாம். 


>உளுந்து சேர்க்காத பச்சரிசி மாவை மட்டும் அறைத்து, புளித்த மாவுடன் சேர்க்கலாம். 


>குழி பனியாரம் செய்ய, புளித்த மாவு உகந்ததாக இருக்கும். இதில் கடுகு, உளுந்து, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை தாளித்து சேர்த்து,  குழிப்பனியார சட்டியில் ஊற்றினால் ரெடியாகிவிடும். 


மாவு புளித்து விட்டால் என்ன செய்யலாம்? 


எந்த ஒரு உணவு பாெருளாக இருந்தாலும் அதை வீணடிக்க கூடாது என்று முன்னோர்களும் பெரியவர்களும் கூறுவர். அப்படி, மாவு புளித்து விட்டால் அதை கொஞ்சம் கொஞ்சமாக கரைத்து, வீட்டில் வளர்க்கும் செடிகளுக்கு ஊற்றலாம். அப்படி இல்லையென்றாலும், வீட்டில் மாடு வளர்த்தால் அதற்கு கழநீர் தண்ணீரில் கலந்தும் இதை வைக்கலாம். 


மேலும் படிக்க | Kitchen Hacks: வாழைப்பழம் நீண்ட நாட்களுக்கு பிரெஷ்ஷாக இருக்க..!!


புளித்த மாவை வைத்து, அதிகம் பத்து படிந்த பாத்திரங்களை கூட பளிச்சென சுத்தமாக்கலாம். இதில், லாக்டோபேசிலஸ் இருக்கிறது. இதனால்தான் மாவு புளிக்கவும் செய்கிறது. எனவே, இதை வைத்து எண்ணெய் பிசுகு படிந்த பாத்திரம் அல்லது, கிச்சன் மேடைகள், ஸ்டவ் ஆகியவற்றை சுத்தம் செய்யலாம். அதன் பிறகு அவற்றை சோப்பு போட்டு கழுவினால், அனைத்தும் சுத்தமாகி விடும். 


உப்பு கறைய அகற்றவும் கூட, புளித்த மாவை உபயோகிக்கலாம். ஸ்டீல் பாத்திரங்கள் அல்லது குழாய்களில் அவ்வப்போது உப்பு கறை படியும். இதை நீக்க, புளித்த மாவை வைத்து ப்ரஷ் போட்டு தேய்க்கலாம். பாத்திரம் தேய்க்கும் சிங்கை சுத்தம் செய்ய கூட, இந்த புளித்த மாவை நாம் உபயோகிக்கலாம். 


சரும பராமரிப்பிற்கு..


தங்கள் சருமத்தை பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள நினைக்கும் பலருக்கும் இந்த விஷயம் முன்கூட்டியே தெரிந்திருக்கும். அரிசியை ஒரு இரவில் ஊற வைத்து, அதை அரைத்து எடுத்து முகத்தில் தடவுவதால் முகம் பொலிவு பெறும் என்பது பலரது பியூட்டி டிப்ஸாக இருக்கிறது. அதே போல, புலித்த மாவில், கொஞ்சமாக புதிய மாவை கலந்து முகத்தில் தேய்த்து வந்தால் சருமம் பொலிவுரும் என கூறப்படுகிறது. ஆனால், இதை செய்யும் முன்பு தகுந்த அறிவுரைகளுடன் கவனமாக செய்யவும். உங்கள் சருமத்திற்கு இது ஒவ்வாமையை ஏற்படுத்துமா இல்லையா என்பதையும் பார்த்துக்கொள்ளவும். 


மேலும் படிக்க | Business Idea: இட்லி, தோசை மாவு தொழில் மூலம் இவ்வளவு லாபம் பார்க்கலாமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ