புது டெல்லி: Fastag Mandatory: உங்கள் வாகனத்தில் நீங்கள் இன்னும் FASTag ஐ நிறுவவில்லை என்றால், அதை இப்போதே செய்து விடவும். FASTag பற்றி பல வகையான கேள்விகள் இன்னும் மக்களின் மனதில் உள்ளன. அடிக்கடி கேட்கப்படும் இதுபோன்ற பல கேள்விகளுக்கு (FAQs) தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பதில்களை அளித்துள்ளது. அவற்றை இங்கே காணலாம்:


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

FASTag கட்டணத்தில் ஏதாவது தள்ளுபடிகிடைக்குமா?
FASTag மூலம் டோல் பிளாசாவில் பணம் செலுத்தும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் 10% கேஷ்பேக் (Cashback) கிடைக்கிறது. இந்த கேஷ்பேக் தொகை ஒரு வாரத்திற்குள் அவர்களின் FASTag கணக்கில் சேர்க்கப்படும்.


ஒவ்வொரு வாகனத்திற்கும் வெவ்வேறு FASTag எடுக்க வேண்டியது அவசியமா?
ஆம், ஒவ்வொரு வாகனத்திற்கும் வெவ்வேறு Fastag எடுக்க வேண்டும்.


ALSO READ | FASTag கட்டாயமாக்கப்பட்டது, இனி சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும் அச்சம்


ஒரு வாகனத்தின் FASTag ஐ மற்றொரு வாகனத்தில் பயன்படுத்த முடியுமா?
இல்லை, ஒவ்வொரு வாகனத்திற்கும் KYC ஆவணங்களை சமர்ப்பித்த பிறகு FASTag வழங்கப்படுகிறது. ஒரு FASTag ஒரு காருக்காக வாங்கப்பட்டு ஒரு டிரக்கில் பயன்படுத்தப்பட்டதாக வைத்துக்கொள்வோம், பின்னர் அத்தகைய FASTag தடுப்புப்பட்டியலில் சேர்க்கப்படும். பயனர்கள் இப்படி எல்லாம் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.


எனது FASTag ஐ நான் இழந்து விட்டால், அதில் உள்ள கணக்கு இருப்புக்கு என்ன ஆகும்? 
நீங்கள் விரைவாக FASTag வழங்கும் நிறுவனத்தின் கஸ்டமர் கேரை அழைத்து அதைத் பிளாக் செய்ய வேண்டும். பின்னர், நீங்கள் ஒரு புதிய கணக்கை உருவாக்கும்போது, ​​நிறுவனம் உங்கள் நிலுவைத் தொகையை புதிய கணக்கிற்கு மாற்றும். அதாவது உங்கள் தொகை பாதுகாப்பாக இருக்கும்.


எனது கணக்கிலிருந்து சரியான பணம் கழிக்கப்பட்டுள்ளதா என்று எனக்கு எப்படித் தெரியும்?
உங்கள் FASTag கணக்கிலிருந்து பணம் கழிக்கப்படும் போதெல்லாம், உங்கள் மொபைலில் ஒரு SMS வரும். இது தவிர, எந்த சுங்கச்சாவடியில் (Toll Plaza) என்ன கட்டணம் என்பதைக் காட்டும் ஒரு டிஸ்ப்ளே வைக்கப்படுகிறது. அதில் கட்டணம் குறித்த முழுமையான தகவல்கள் கிடைக்கின்றன.


நான் ஒரு சுங்கச்சாவடியிலிருந்து 10 கி.மீ தூரத்திற்குள் வசிக்கிறேன். நான் FASTag எடுக்க வேண்டுமா?
ஆம், நீங்களும் FASTag ஐ எடுக்க வேண்டும். நீங்கள் FASTag பாதையைப் பயன்படுத்த வேண்டும் என்றாலும், கேஷ்பேக் பெற விரும்பினாலும் கண்டிப்பாக FASTag எடுக்க வேண்டும்.


ALSO READ | FASTag பெறுவதற்கான காலக்கெடு மேலும் நீட்டிக்கப்படுமா


நான் வேறு நகரத்திற்கு மாறினால் என்ன செய்வது?
FASTag நாடு முழுவதும் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் இயங்கும். நீங்கள் நகரத்தை மாற்றும்போது, FASTag வழங்கும் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவையை அழைத்து உங்கள் முகவரியைப் புதுப்பிக்க வேண்டும்.


ஒரு காரில் ஒன்றுக்கு மேற்பட்ட FASTag ஐ பயன்படுத்த முடியுமா?
இதை நீங்கள் செய்ய முடியாது. அப்படி செய்வது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. ஒரு வாகனத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட FASTag பயன்படுத்தப்பட்டால், பயனர்கள் சிக்கல்களை சந்திக்க நேரிடும்.


நான் எனது காரை விற்றால் அல்லது மாற்றினால் என்ன செய்வது?
நீங்கள் உங்கள் காரை விற்றிருந்தால் அல்லது அதை வேறு ஒருவர் பெயருக்கு அதை மாற்றினால், FASTag வழங்கும் நிறுவனத்திற்கு அதை தெரிவிக்க வேண்டும்.


தேசிய நெடுஞ்சாலை தவிர வேறு எங்கும் FASTag பயன்படுத்த முடியுமா?
FASTag பயன்பாட்டை மாநில நெடுஞ்சாலைக்கும் நீட்டிக்க திட்டம் உள்ளது. மேலும் பார்க்கிங் கட்டணங்கள் மற்றும் பிற சாலையோர வசதிகளுக்கான பயன்பாட்டை FASTag மூலம் அதிகரிப்பது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகின்றது.


ALSO READ | FASTag இல் தள்ளுபடி வேண்டுமா? இதோ எளிதான Tips!


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR