North Korea jeans ban : வடகொரியாவில் கடும் ஆடைக் கட்டுப்பாடுகள் இருக்கின்றன. அந்நாட்டைச் சேர்ந்தவர்கள் யாரும் ஜீன்ஸ் அணியக்கூடாது. ஏனெனில் அவை மேற்கத்திய கலாச்சாரம் மற்றும் கிளர்ச்சியை அடையாளப்படுத்துவதாக அந்நாட்டில் பார்க்கப்படுகிறது. இதனை கண்காணிக்க 'பேஷன் போலீஸ்' நியமிக்கப்பட்டுள்ளது. சரி, இந்த ஆடைக்கு மட்டும் வட கொரியாவில் தடை என்ற கேள்வி உங்களுக்கு எழலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வட கொரியர்கள் ஏன் ஜீன்ஸ் அணிய முடியாது என்பதைப் புரிந்து கொள்ள, நீங்கள் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிக்கு செல்ல வேண்டும். கொரியா இரண்டு தனித்தனி நாடுகளாக, வட கொரியா, தென் கொரியா என பிரிக்கப்பட்டது. கிம் இல்-சங் தலைமையிலான வட கொரியா, சோவியத் யூனியனுடனும் பின்னர் சீனாவுடனும் வலுவான உறவுகளுடன் கம்யூனிச சித்தாந்தங்களால் வடிவமைக்கப்பட்டது. மறுபுறம், அமெரிக்கா, தென் கொரியாவின் உறுதியான நட்பு நாடாக மாறியது. 


மேலும் படிக்க | நெய்யின் மூலம் உங்கள் தலைமுடியை பளபளப்பாக மாற்றலாம்! எப்படி தெரியுமா?


இதனால் இயல்பாகவே அமெரிக்கா, வடகொரியாவின் எதிர்ப்பு நாடாக மாறியது. ஜீன்ஸ் அமெரிக்காவின் கலாச்சார உடையாக மாறியது. அவை வெறும் பேண்ட் அல்ல; அவை மேற்கத்திய தனித்துவம், சுதந்திரம் மற்றும் கிளர்ச்சியின் அடையாளமாக காணப்பட்டன. அதனால் இந்த ஆடையை தடை செய்தது வடகொரியா. வட கொரியாவில், ஃபேஷன் என்பது தனிப்பட்ட ஒருவரின் சுதந்தரமாக பார்க்கப்படுவதில்லை. இது ஆட்சியின் சித்தாந்தத்தின் பிரதிபலிப்பாக பார்க்கப்படுகிறது. இதனால், மக்கள் செய்யும் வேலைகள் முதல் அவர்கள் உடுத்தும் உடைகள் வரை வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் அரசாங்கம் கட்டுப்படுத்துகிறது. 


நாட்டின் சோசலிச இலட்சியங்களைப் பிரதிபலிக்கும் பாரம்பரிய கொரிய ஆடைகள் மற்றும் உடைகள் பெரிதும் ஊக்குவிக்கப்படுகின்றன, அதே நேரத்தில் மேற்கத்திய பாணி ஆடைகள் வெறுக்கப்படுகின்றன, அவை முற்றிலும் தடை செய்யப்படுகின்றன. ஏனெனில் ஆடை கிளர்ச்சியிலிருந்து கலாச்சார மாற்றம் வரை அனைத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என நம்புகிறது வட கொரியா. குறிப்பாக ஜீன்ஸ் ஆடை கலாச்சாரத்தை பெருமளவு மாற்றியிருக்கிறது என்பதால் இந்த ஆடையை அந்நாடு தடை செய்திருக்கிறது. 


ஜீன்ஸ் உடைக்கு பின்னால் இருக்கும் அரசியல்


ஜீன்ஸ் உடைக்கு பின்னால் அரசியலும் இருக்கிறது. வரலாற்றில் ஆடைக்கட்டுப்பாட்டுக்கு எதிராக உடையாக முன் வைக்கப்பட்டது ஜீன்ஸ். 1960 மற்றும் 70களில் கலாச்சார கட்டுப்பாடுகளுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களில் எல்லாம் ஜீன்ஸ் என்ற உடையை கிளர்ச்சியாளர்கள் பிரதானப்படுத்தினர். குறிப்பாக ஐரோப்பா கண்டத்தில் ஆடை சுதந்திரத்தை வலியுறுத்தி நடைபெற்ற அனைத்து கூட்டம், போராட்டங்களில் ஜீன்ஸ் உடையை முன்னிறுத்தி எதிர்ப்பின் அடையாளமாக பதிவு செய்தனர். இதை வைத்து தான் வடகொரியாவில் ஜீன்ஸ் உடை தடை செய்யப்பட்டது. இதை மீறுபவர்களுக்கு கடும் தண்டனைகளும் கொடுக்கப்பட்டன. 


வடகொரியா எப்படி கண்காணிக்கிறது? 


வடகொரியாவில் இருக்கும் இந்த விதியை யாரும் மீறுவதில்லை என்பதை வடகொரியா எப்படி உறுதி செய்கிறது என்றால் நாட்டின் கடுமையான ஆடைக் கட்டுபாடுகளை செயல்படுத்த தெருக்களில் ரோந்து செல்லும் சிறப்புப் பிரிவான "ஃபேஷன் போலீஸ்"ஐ வைத்திருக்கிறது. இந்த அதிகாரிகள் ஜீன்ஸ் அணிவது உட்பட ஏதேனும் விதிமீறல்கள் இருக்கிறதா என்பதை கண்காணிப்பார்கள். ஒருவேளை யாராவது ஆடை கட்டுப்பாட்டை மீறினால் அவர்கள் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் - அபராதம், பொது அவமானம் அல்லது சிறைத்தண்டனை கூட விதிக்கப்படுவார்கள்.


மேலும் படிக்க | இந்த 4 விஷயங்களை செய்தால் ஒவ்வொரு நாள் அதிகாலையும் மகிழ்ச்சியாக விடியும்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ