உடல் எடை கூடுவதற்கும் குறைவதற்கும் பல காரணங்கள் இருக்கின்றன. மதியானத்தில் உறங்கும் பழக்கத்தை கொண்டிருப்பவர்களுக்கு, இதனால் உடல் எடை அதிகரிக்குமா என்ற சந்தேகம் அதிகமாகவே உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எடை அதிகரிப்பும்..மதிய தூக்கமும்..


உடல் எடை அதிகரிப்பதற்கு நாம் தினசரி செய்யும் நடவடிக்கைகள், வழிவழியாக இருக்கும் ஜீன்கள் என பல காரணங்கள் இருக்கலாம். அது மட்டுமன்றி, நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகள் மற்றும் உடலில் ஏற்படும் நோய்களாலும் உடல் எடை ஏறலாம். ஆனால், தினசரி மதியானத்தில் உறங்கும் பழக்கம் கொண்டவர்களுக்கு உடல் எடை ஏறி விடுமோ என்ற பயம் இருக்கிறது. 


எப்படி தூங்கினால் உடல் எடை அதிகரிக்கும்..


நாம் உறங்கும் போது உடலில் உள்ள மெட்டபாலிச சக்தி 10 சதவிகிதம் குறையும். ஆனால், பகலில் மெட்டபாலிச சத்துக்கள் அதிக அளவில் இருக்கும். இதனால் பகலில் உறங்கும் போது ஆக்டிவாக இருக்க வேண்டிய சமயத்திலேயே மெட்டபாலிச சக்தி குறைய தொடங்கும். குறிப்பாக சாப்பிட்டவுடன் தூங்கும் போது இன்னும் குறைவாகும். இதனால், தொப்பை போடுவது, உடல் எடை கூடுவது போன்றவை நிகழும். மதியத்தில் தூங்குவதை தவிர்க்க, இரவில் சீக்கிரமாக உறங்க செல்வது, மிகவும் நல்லது. தினசரி 7-8 மணி நேரம் தூங்கி உடலை ஆக்டிவாக வைத்திருந்தால் கண்டிப்பாக மதிய நேரத்தில் தூங்குவதை  தவிர்க்கலாம். 


மேலும் படிக்க | தொள தொள தொப்பை.. மளமளன்னு குறையணுமா? அப்போ இந்த மேஜிக் விதைகளை சாப்பிடுங்க


சக்தியை கூட்டும் பவர் நேப்..


மதிய நேரத்தில் தூங்குவது உடல் எடை அதிகரிப்பதற்கு வழிவகுக்கும் என்று ஒரு தரப்பு மருத்துவ ஆராய்ச்சிகள் கண்டுபிடித்திருந்தாலும், ஒரு சிலர் மதியத்தில் தூங்குவது நமது மூளை சிறப்பாக செயல்பட வழிவகை செய்யும் என குறிப்பிடுகின்றனர். மதிய வேளையில், களைப்பாக உணரும் போது 10-15 நிமிடங்கள் உறங்க வேண்டுமாம். அப்படி தூங்குவதால் நாம் விழிப்புடன் இருக்க முடியும் என்றும், அதற்கடுத்து செய்யும் வேலைகளை விரைந்து முடிக்க முடியும் என்றும் கூறப்படுகிறது. இதனால் நினைவாற்றல் திறன் அதிகரிக்கவும் உடல் நலன் சிறப்பாகவும் வாய்ப்புகள் உள்ளது. 


எப்படி தூங்க கூடாது..? 


மதியத்தில் தூங்கினாலும் வெயிட் போடாமல் இருக்க சில வழிகள் இருக்கின்றன. வயிறு முழுக்க சாப்பிட்ட பிறகு கண்டிப்பாக தூங்க கூடாது. இதனால் உடல் எடை அதிகரிக்கும் அபாயம் அதிகம். மதியத்தில், 30 நிமிடங்களுக்கு மேல் தூங்க கூடாது. அதையும் மீறி அதற்கு மேல் தூங்கினால் அந்த நாளை ஓட்டுவதற்கான ஆற்றலை இழந்து விடுவோம். 1-2 மணி நேரம் தூங்குவதால் அந்த நாள் முழுவதும் சோர்வடைந்து காணப்படுவீர்கள்.


மேலும் படிக்க | 40 வயதிற்கு பிறகு காதலிப்பது எப்படி? இதாே ஈசியான 5 டேட்டிங் டிப்ஸ்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ