Woman Rights: இந்தியாவில் பெண்களுக்கு இருக்க கூடிய 10 சிறப்பு சட்டங்கள்!
Woman Rights In India: இந்தியாவில் பெண்களுக்கு பல சிறப்பு சட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு இந்தியப் பெண்ணும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய 10 பாதுகாப்பு சட்டங்கள்.
உலகம் முழுவதுமே தினமும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்து கொண்டு தான் உள்ளது. இந்தியாவிலும் அடிக்கடி இது நடந்து கொண்டு தான் இருக்கிறது. முன்பு இருந்த அளவில் தற்போது இல்லை என்றாலும், முழுவதும் இல்லை என்று சொல்லிவிட முடியாது. இது இந்தியாவில் பெண்களின் பாதுகாப்பை பற்றி சிந்திக்க வைக்கிறது. பெண்களுக்கு என பல சட்ட உரிமைகள் இருந்தபோதிலும், இந்தியாவில் பெண்கள் பல சோதனைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் சில உரிமை மீறல்கள் நடக்கிறது. 2005 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்து வாரிசுரிமை சட்டத்தின் முக்கிய திருத்தம், மூதாதையர் சொத்துக்களில் பெண்களுக்கு சம உரிமைகள் வழங்குவது என சில சட்ட திருத்தங்கள் பெண்களுக்கு சம உரிமையை நிலைநாட்டி உள்ளன.
பெண்களுக்கு கண்ணியம் உரிமை உண்டு
பெண்களுக்கான இந்த சட்டத்தின்படி, இந்தியாவில் ஒரு பெண்ணை மற்றொரு பெண் இல்லாத நிலையில் ஒரு ஆணால் மருத்துவ பரிசோதனை செய்ய முடியாது.
பெண்களுக்கு இலவச சட்ட உதவி பெற உரிமை உண்டு
1987 சட்டத்தின்படி, பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் சட்ட அதிகாரிகளிடமிருந்து இலவச சட்ட உதவியை பெரும் உரிமை உண்டு.
பெண்களுக்கு கருக்கலைப்பு செய்யும் உரிமை உண்டு
இந்தியாவில் பெண்கள் 24 வாரங்களுக்குள் அவர்களது திருமண நிலையை பொருட்படுத்தாமல் கருக்கலைப்பு செய்ய உரிமை உண்டு.
பெண்களை இரவில் கைது செய்ய உரிமை இல்லை
ஒரு வழக்கில் மாஜிஸ்திரேட்டின் உத்தரவு இல்லை என்றால், இந்தியாவில் பெண்களை இரவு நேரத்தில் கைது செய்ய முடியாது. அது மட்டும் இல்லாமல், ஒரு பெண் கான்ஸ்டபிள் முன்னிலையில் மட்டுமே அவரை விசாரிக்க உரிமை உண்டு.
பெண்கள் ஆன்லைனில் புகார்களை பதிவு செய்யலாம்
இந்திய அரசியலமைப்பு சட்டம் மூலம் ஒரு பெண் மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது பதிவு செய்யப்பட்ட தபால் மூலமாகவோ புகார்களை பதிவு செய்வதற்கான உரிமை உள்ளது. ஒரு பெண் நேரடியாக காவல்நிலையத்திற்கு செல்ல முடியாத நிலையில் இருந்தால், SHO ஒரு பெண் காவலரை அவரது இல்லத்திற்கு அனுப்பி புகாரைப் பதிவு செய்யலாம்.
குடும்ப வன்முறைக்கு எதிராக பெண்களுக்கு உரிமை
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 498வது பிரிவின் படி, இந்திய பெண்கள் தனது கணவர், காதலன் அல்லது ஏதேனும் குடும்ப உறுப்பினர்களால் பொருளாதார ரீதியாக, உணர்ச்சி ரீதியாக மற்றும் பாலியல் ரீதியாக சொந்தரவு ஏற்பட்டால் அதனை கேட்க உரிமை உள்ளது.
தொந்தரவு செய்பவர்களுக்கு எதிராக பெண்களுக்கு உரிமை உண்டு
ஐபிசியின் 354டி பிரிவின்படி, பெண்களை தேவையில்லாமல் தொந்தரவு செய்யும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கலாம். இது தேவையில்லாமல் பெண்கள் பின்னால் சென்றால் கூட செல்லுபடியாகும்.
பெண்களுக்கு ஜீரோ எஃப்ஐஆர் உரிமை உண்டு
ஒரு பெண் குற்றம் நடந்த இடம் அல்லது குறிப்பிட்ட அதிகார வரம்பை பொருட்படுத்தாமல் எந்தவொரு காவல் நிலையத்திலும் எஃப்ஐஆர் பதிவு செய்யலாம். இது ஜீரோ எஃப்.ஐ.ஆர் என்று கூறப்படுகிறது. பின்னர் அந்தந்த காவல் நிலையத்திற்கு வழக்கு மாற்றப்படும்.
பணியிடத்தில் துன்புறுத்தலுக்கு எதிராக பெண்களுக்கு உரிமை
வேலை பார்க்கும் இடத்தில் பெண்களுக்கு ஏதேனும் பாலியல் தொல்லைகள் இருந்தால், 2013 சட்ட விதிகளின் படி, பெண்கள் தங்கள் பணியிடத்தில் எந்தவொரு பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராகவும் புகார் செய்யலாம்.
பெண்களுக்கு சம ஊதியம் பெற உரிமை உண்டு
1976 ஆம் ஆண்டின் சம ஊதியச் சட்டத்தின்படி, ஒரு நிறுவனத்தில் சம்பளத்தை பொறுத்தவரை பாலின அடிப்படையில் பாகுபாடு காட்ட முடியாது. எனவே, ஆண்களுக்கு எவ்வளவு சம்பளம் தரபடுகிறதோ அதே அளவு சம்பளத்தை பெண்களும் கேட்ட சம உரிமை உள்ளது.
மேலும் படிக்க | RBI 5 புதிய சிபில் விதிகள்: குஷியில் கஸ்டமர்ஸ்... வங்கிகளுக்கு இனி அதிக வேலை!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ