தங்கள் பிராண்டை ஊக்குவிக்க ஒரு தனித்துவமான வழியை இந்த பெண்கள் கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் வெளியிட்டுள்ள முதல் நடன வீடியோ வைரலாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஷாருக் கான் மற்றும் ராணி முகர்ஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து 2005 ஆம் ஆண்டு வெளியான பஹேலி (Paheli) திரைப்படத்தின் "kangna re, kangna re" பாடலுக்கு சேலை கட்டி இந்த பெண்கள் ஆடும் நடனம் மனதை மயக்குகிறது.


சிறுவயது முதல் நண்பர்களாக இருந்த இந்த பெண்கள் ஒன்றிணைந்து குழுவை அமைத்துள்லனர். பாரம்பரிய உடைகளில் தங்கள் நடன வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இவர்கள் நடனத் திறனை வெளிப்படுத்துவதற்காக, நடன வீடியோவை வெளியிடவில்லை. தங்கள் சேலைகளின் பிராண்டை அறிமுகப்படுத்தும் விதத்தில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர்.



The Indian Ethnic Co என்ற நிறுவனத்தின் இணை நிறுவனரான Lekhinee Desai இந்த  நடனக் குழுவை வழிநடத்துகிறார். லெக்கினி (Lekhinee Desai) மற்றும் அவரது குழந்தை பருவ நண்பர்களான அபூர்வா டானி, சார்வி புத்தேயோ மற்றும் சகோதரி டுவாரா தேசாய் ஆகியோர் பாரம்பரிய ஒடிஸி நடனத்தை கற்றவர்கள்.


Also Read | ரோஜர் பெடரரின் உலக சாதனையை முறியடித்த நோவக் ஜோகோவிச் 


இவர்கள் இணைந்து தங்கள் நிறுவனத்தையும், பிராண்டையும் பிரபலமாக்குவதற்காக நடனத்தை பயன்படுத்துகின்றனர். இது குறித்து கூறும் லெக்கினி, “ஒரு பிராண்ட் என்ற முறையில் எங்கள் உடைகளை அறிமுகப்படுத்துவதற்கு வேறு எந்த மாதிரியையும் எடுக்க நாங்கள் விரும்பவில்லை, ஏனென்றால் எங்கள் பிராண்ட் உண்மையான பெண்களை ஊக்குவிப்பதில் நம்பிக்கை கொண்டுள்ளது. நாங்கள் வணிகத்தைத் தொடங்கியபோது, ஆன்லைனில் புடவைகளை விற்கும் பலர் இருப்பதால் சந்தையில் எங்கள் அடையாளத்தை எவ்வாறு உருவாக்குவது என்று நாங்கள் யோசித்துக்கொண்டிருந்தோம்" என்று கூறினார்.


“மேலும், எங்கள் நடன திறமையையும், நாங்கள் விற்கும் புடவைகளையும் ஒன்றிணைக்கலாம் என்று முடிவு செய்து ஒரு சிறிய நடன வீடியோவை உருவாக்கி அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டோம், அது ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றது. அதன் அடிப்படையில் அதே உத்தியை பயன்படுத்தத் தொடங்கிவிட்டோம். புதிய கைவினை பொருளை அல்லது புடவையை அறிமுகப்படுத்தும்போது அதை எங்கள் நடனம் மூலம் செய்வோம்” என்று தெரிவித்தார்.


Also Read | கைக் குழந்தையுடன் கடமையாற்றும் போக்குவரத்து கான்ஸ்டபிள் Viral Video


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR