உலகின் மலிவான BIS சான்றளிக்கப்பட்ட ஹெல்மெட்டை தயாரித்ததாக இந்திய நிறுவனமான டெடெல் (Detel) தெரிவித்துள்ளது. புதிய ஹெல்மெட்டான Detel TRED-ஐ நிறுவனம் BIS சான்றுக்கு ஏற்ற முறைகளில் உருவாக்கியுள்ளது. இதன் விலை வெறும் ரூ .699 ஆக நிர்ணயிக்கப்படுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமீபத்தில், மோட்டார் வாகனச் சட்டம், இரு சக்கர வாகன ஓட்டுநர்கள் மற்றும் பின்னால் உட்காருபவர்களுக்கு BIS சான்றிதழ் பெற்ற தலைக்கவசங்களை மட்டுமே தயாரித்து விற்பனை செய்வதை கட்டாயமாக்கியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், இந்த புதிய ஹெல்மெட் சந்தையில் உள்ள மற்ற நிறுவனங்களுக்கு கடுமையான போட்டியைக் கொடுக்கக்கூடும்.


இந்த ஹெல்மெட்டை இங்கிருந்து வாங்கலாம்


இந்த ஹெல்மெட் (Helmet) வசதி மற்றும் வலிமையை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது என்று நிறுவனம் கூறுகிறது. பொது வாடிக்கையாளர் விரும்பினால், அதை Detel-ன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.detel-india.com இல் வாங்கலாம். அமேசான் (Amazon) வலைத்தளத்திலும் வாங்கலாம். நீங்கள் மொத்தமாக வாங்கும் வாடிக்கையாளராக இருந்தால், www.B2BAdda.com ஐப் பார்வையிட்டு அங்கு வாங்கலாம்.


ALSO READ: பைக் சவாரி இன்னும் பாதுகாப்பானது; BIS அல்லாத ஹெல்மெட் விற்பனைக்கு தடை..!


வாடிக்கையாளர்களுக்கு மலிவான மற்றும் பாதுகாப்பான தலைக்கவசங்கள்


ஹெல்மெட் உற்பத்தி துறையில் வேகமாக வளர்ந்து வரும் நிறுவனமான Detel தயாரித்துள்ள இந்த ஹெல்மெட் வாடிக்கையாளர்களுக்கு மலிவானதாகவும் பாதுகாப்பானதாகவும் இருக்கும் என்று TRED ஹெல்மெட்டை வெளியிட்ட சந்தர்ப்பத்தில், Detel-ன் யோகேஷ் பாட்டியா கூறினார். பல வாடிக்கையாளர்கள் சாலையோரத்தில் கிடைக்கும் மோசமான தரமற்ற தலைக்கவசங்களை நம்பத் தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக பாதுகாப்புக்கான நோக்கம் நிறைவேறாமல் மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது.


அகற்றக்கூடிய உட்புறத்துடன் ஹெல்மெட் பொருத்தப்பட்டுள்ளது


மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் தரத்தைப் பயன்படுத்தி, இந்த ஹெல்மெட் நீடித்த, நவநாகரீக, மலிவு விலையில் பெண்கள் மற்றும் ஆண்கள் இருவருக்கும் பயன்படுத்தப்படும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. பைக் ரைடர்ஸின் அன்றாட பயன்பாட்டை மனதில் வைத்து இது உருவாக்கப்பட்டுள்ளது.


இது இந்திய தரநிலைகள் (BIS) சான்றளித்த, அகற்றக்கூடிய உட்புரத்துடன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஹெல்மட்டின் வைஸர் கீறல் படாத வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இரவில் பைக்கை ஓட்டும் போது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அதில் ரிஃப்ளெக்டர்கள் வைக்கப்பட்டுள்ளன.


ALSO READ: Vi-ன் REDX Family Plan: 150GB data, OTT இலவச சந்தா, இன்னும் பல சலுகைகள்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR