Indigo: விமானம் ரத்தா? டோண்ட் வொர்ரி என்று சொல்லும் இண்டிகோ! plan B
கனமழை மற்றும் மோசமான வானிலை காரணமாக விமானம் ரத்தாகும் என்ற கவலையா? கவலைப்பட வேண்டாம் என்று ஆறுதல் அளிக்கிறது இண்டிகோ விமான நிறுவனத்தின் பிளான் பி.
கனமழை மற்றும் மோசமான வானிலை காரணமாக விமானம் ரத்தாகும் என்ற கவலையா? கவலைப்பட வேண்டாம் என்று ஆறுதல் அளிக்கிறது இண்டிகோ விமான நிறுவனத்தின் பிளான் பி.
மோசமான வானிலை அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் உங்கள் விமானம் ரத்து செய்யப்பட்டால், இண்டிகோ ஏர்லைன்ஸின் பிளான் பி திட்டம் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மோசமான வானிலை அல்லது கனமழை காரணமாக தற்போது பெரும்பாலான விமானங்கள் ரத்து (Air Travel) செய்யப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், உங்களுக்கான அடுத்த விமானத்தைக் கண்டுபிடிப்பது மிகவும் சிரமமாக இருக்கிறது.
கடைசி நிமிடத்தில் விமானப் பயணத்திற்கு முன்பதிவு செய்யும்போது, பயணத்திற்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கிறது. எனவே, இண்டிகோ பிளான் பி என்ற திட்டத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.
ALSO READ | விமான டிக்கெட் முன்பதிவுக்கு பிறகும் பயணத் தேதியை இலவசமாக மாற்றலாம்
பிளான் பி என்றால் என்ன?
இந்த கேள்விக்கு இண்டிகோ விமான நிறுவனத்தின் இணையதளத்தில் தகவல் கிடைக்கிறது. "உங்கள் விமானம் ரத்து செய்யப்பட்டாலோ அல்லது எங்களால் மீண்டும் திட்டமிடப்பட்டாலோ, நீங்கள் கவலைப்படத் தேவையில்லை.
உங்களுக்கான பிளான் பி எங்களிடம் உள்ளது. இந்த பிளான் பி மூலம் நீங்கள் உங்கள் விமான நேரத்தை தேர்வு செய்யலாம் அல்லது தேதிகளை மாற்றிக் கொள்ளலாம்.
நீங்கள் விரும்பினால், உங்கள் விமான டிக்கெட்டை (Flight Ticket) ரத்து செய்துவிட்டு பணத்தைத் திரும்பப் பெற விண்ணப்பிக்கலாம். இதற்கு நீங்கள் கூடுதல் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை" என்று அதிகாரபூர்வ டிவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோசமான வானிலை காரணமாக, ஸ்ரீநகரில் இருந்து வாரணாசி செல்லும் இண்டிகோ விமானங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
ALSO READ | விமான டிக்கெட்டுகளில் மாபெரும் தள்ளுபடி
இதுபோன்ற மாறும் வானிலையால், வாடிக்கையாளர்களுக்கு தேவையான தகவல்களை தெரிந்துக் கொள்வதற்காக லைவ் அப்டேட் இணைப்பையும் விமான நிறுவனங்கள் கொடுத்துள்ளன, வாடிக்கையாளர் விரும்பினால், பிளான் பியையும் பயன்படுத்தலாம் என்று இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
எந்த சூழ்நிலையில் பிளான் பி பயன்படும்?
ஏதேனும் காரணத்தால் உங்கள் விமானம் ரத்து செய்யப்பட்டால், பயணிகள் இண்டிகோவின் பிளான் பி வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று இண்டிகோ தெரிவித்துள்ளது. இது தவிர, விமானப் பயணம் 1 மணி நேரத்திற்கு முன்னதாகவோ அல்லது திட்டமிடப்பட்ட நேரத்திற்கு 2 மணி நேரம் தள்ளிப்போடப்பட்ட்டாலும், IndiGo இன் பிளான் பி வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
எப்படி உபயோகிப்பது?
இண்டிகோ விமானம் ரத்து செய்யப்பட்டால், வாடிக்கையாளர்களுக்கு அது தொடர்பான செய்தி கிடைக்கும். உங்கள் விமானம் இண்டிகோவின் பிளான் பிக்கு தகுதி பெற்றிருந்தால், அதற்கான இணைப்பும் உங்களுக்கு வழங்கப்படும். இந்த இணைப்பின் உதவியுடன், நீங்கள் உங்கள் விமானத்தை ரத்து செய்யலாம் அல்லது மீண்டும் திட்டமிடலாம்.
இந்த திட்டம், விமானப் பயணங்களுக்காக முன்பதிவு செய்திருப்பவர்களுக்கு ஆறுதல் கொடுக்கும் செய்தியாக இருக்கிறது.
ALSO READ | 1000 ரூபாய்க்கும் குறைவான விலையில் விமான டிக்கெட்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR