இந்தியாவில் ஓமிக்ரான் அச்சம் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இது பயணிகள் மத்தியில் பயணம் செய்ய தயக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இந்தியாவில் (India ) உள்ள உள்நாட்டு விமான நிறுவனங்கள், விடுமுறைக் காலத்தில் பயணிகளை கவரும் வகையில் கவர்ச்சிகரமான விற்பனைச் சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளன. இந்த புத்தாண்டு விடுமுறை காலத்தில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விமான பயணிகளுக்கு சலுகைகளை வழங்கும் நிறுவனங்களில் ஸ்பைஸ்ஜெட் மற்றும் ஏர் ஏசியா இந்தியா ஆகிய இரண்டும் சிறப்பு சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளன.
ஸ்பைஸ்ஜெட் (SpiceJet) தனது உள்நாட்டு நெட்வொர்க்கில் உள்ள சென்னை-பெங்களூரு, பெங்களூரு-சென்னை, சென்னை-ஹைதராபாத், ஜம்மு-ஸ்ரீநகர் போன்ற வழித்தடங்களுக்கு ரூ.1,122 (அனைத்தும் உட்பட) என்ற மிகக்குறைந்த தொகை முதல், ஒரு வழி கட்டணத்தின் (one-way fares) விற்பனை சலுகைகளை அறிமுகப்படுத்தியது. டிசம்பர் 27 முதல் 31 வரையிலான முன்பதிவுகளுக்கு இந்த விற்பனைச் சலுகை செல்லுபடியாகும். இந்த முன்பதிவுகளுக்கான பயணக் காலம் ஜனவரி 15, 2022 முதல் ஏப்ரல் 15, 2022 வரை ஆகும்.
"பயணத் திட்டங்களுக்கு நெகிழ்வுத்தன்மையை சேர்க்கும் வகையில், ஸ்பைஸ்ஜெட், விற்பனைக் கட்டண டிக்கெட்டுகளில் மாற்றக் கட்டணத்தை ஒரு முறை தள்ளுபடி செய்வதில் மகிழ்ச்சி அடைகிறது. விற்பனைக் கட்டணத்தின் கீழ் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் பயணிகள், பயணத் திட்டத்தில் மாற்றம் ஏற்பட்டால் தங்கள் விமானத் தேதியை மாற்றிக்கொள்ள முடியும்." என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
"பூஜ்ஜிய மாற்றக் கட்டணத்தைப் (zero change fee) பெற, விமானம் புறப்படும் தேதிக்கு குறைந்தது இரண்டு நாட்களுக்கு முன்னதாக முன்பதிவு மாற்றப்பட வேண்டும். அதுமட்டுமின்றி, ஒவ்வொரு விற்பனைக் கட்டண முன்பதிவுக்கும் ரூ. 500 மதிப்புள்ள காம்ப்ளிமெண்டரி விமான வவுச்சரையும் ஸ்பைஸ்ஜெட் வழங்குகிறது. இதை பயணிகள் தங்கள் அடுத்த பயணத்தில் பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும், SpiceMax, விருப்பமான இருக்கைகள் மற்றும் முன்னுரிமை சேவைகள் போன்ற ஏட்-ஆன்களுக்கு கூடுதல் 25 சதவீத உடனடி தள்ளுபடி கிடைக்கும்”
ALSO READ | CORBEVAX , COVOVAX தடுப்பு மருந்துகளுக்கு மத்திய அரசு அனுமதி..!!
இது தவிர, ஏர் ஏசியா (AirAsia) இந்தியா தனது 'புத்தாண்டு, புதிய இடங்கள்' விற்பனையை அறிவித்தது. இதில், சென்னை-பெங்களூரு, பெங்களூரு-சென்னை மற்றும் சென்னை-ஹைதராபாத் போன்ற வழித்தடங்களுக்கான கட்டணங்கள் ரூ.1,122 இல் தொடங்குகிறது. மேலும், அதன் நெட்வொர்க் முழுவதும் இதே போன்ற தள்ளுபடி விற்பனைக் கட்டணங்கள் கிடைக்கின்றன.
"ஜனவரி 15, 2022 முதல் ஏப்ரல் 15, 2022 வரையிலான பயணக் காலத்திற்கு, டிசம்பர் 27 முதல் 2021 டிசம்பர் 31 வரையிலான முன்பதிவுகளுக்கு இந்தச் சலுகை பொருந்தும். மேலும் விமானம் புறப்படுவதற்கு குறைந்தபட்சம் 72 மணிநேரத்திற்கு முன்னர் செய்யப்பட்ட மாற்றங்களுக்கான தேதி மாற்றக் கட்டணத் தள்ளுபடியும் (date change fee waiver) இதில் அடங்கும்" என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
ALSO READ | Kanpur Metro: கான்பூர் மெட்ரோவின் கட்டணம் மற்றும் பிற விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR