Frequent ITR Mistakes: தனிப்பட்ட வரி செலுத்துவோர் பெரும்பாலும் தங்கள் வருமான வரி கணக்கை (ITR) தாங்களாகவே தாக்கல் செய்ய விரும்புகிறார்கள்.  வருமான வரிச் சட்டத்தின் சில பகுதிகள் சிக்கலாக இருப்பதாலும், அதில் நிபுணத்துவம் பெறுவது அனைவருக்கும் கைவந்த கலை அல்ல என்பதால், ஆன்லைனில் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்யும்போது பலருக்கு தவறுகள் ஏற்படுகிரது. இதனால், சில சமயம், உரிய நேரத்தில் ஐடிஆர் தாக்கல் செய்யப்படாமல் போவதுடன், அபராதம் கட்டும் சூழ்நிலையும் ஏற்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொதுவாக, வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும்போது ஏற்படும் தவறுகள் என்ன என்று தெரிந்து கொண்டால், அந்த தவறுகளைத் தடுக்கலாம். உங்கள் ITR ஐ ஆன்லைனில் தாக்கல் செய்யும் போது தவிர்க்க வேண்டிய பிழைகள் இவை.


தவறான ITR படிவத்தைப் பயன்படுத்துதல்:
தவறான ஐடிஆர் படிவத்தைப் பயன்படுத்துவது பல வரி செலுத்துவோர் செய்யும் ஒரு பொதுவான பிழையாகும், இதனால், அவர்களது வரி தாக்கல் செய்யும் விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது. எனவே,  ITR படிவத்தை கவனமாக தேர்வு செய்ய வேண்டும்.


மேலும் படிக்க | ITR Filing: ஆன்லைனில் ஐடிஆர் தாக்கல் செய்வது எப்படி? எந்தெந்த ஆவணங்கள் தேவை?


யார் எந்த ஐடிஆர் படிவத்தை பயன்படுத்தவேண்டும்?
ஐடிஆர் படிவம் 1: சம்பளம் பெறும் நபர்கள்
ஐடிஆர் படிவம் 2: முதலீட்டு மூலதன ஆதாயத்திலிருந்து பணம் சம்பாதிக்கும் சம்பளக்காரர்கள்
ஐடிஆர் படிவம் 3: சுயதொழில் செய்து வணிக லாபத்தில் வருமானம் பெறும் நபர்கள்


படிவம் 26AS ஐச் சரிபார்ப்பது
ஒரு முக்கியமான ஆவணம், படிவம் 26AS உங்கள் வருமானத்தைப் பற்றிய தகவல்களைக் கொண்டுள்ளது, இதில் முன்கூட்டியே செலுத்தப்பட்ட வரி, மூலத்தில் கழிக்கப்பட்ட வரி (டிடிஎஸ்), செலுத்தப்பட்ட சுய மதிப்பீட்டு வரி மற்றும் ஏதேனும் இருந்தால் வரி வரவுகள். படிவம் 26AS மற்றும் படிவம் 16 இல் உள்ள தகவல் எப்போதாவது பொருந்தாமல் போகலாம். எனவே, வருமான வரி தாக்கல் செய்வதற்கு முன்னதாக, படிவம் 16ல் உள்ள விவரங்களை, படிவம் 26AS இன் விவரங்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது நல்லது.


சேமிப்புக் கணக்குகளின் விவரம்
பலருக்கு, ஒன்றுக்கும் அதிகமான வங்கிக் கணக்குகள் உள்ளன, உங்களிடம் ஏதேனும் வெளிநாட்டு வங்கிக் கணக்குகள் இருந்தால், அந்தக் கணக்குகளின் விவரங்களை ஐடிஆரில் தெரிவிக்க வேண்டும். நிதியாண்டில் மூடப்பட்ட வங்கிக் கணக்குகள் பற்றிய தகவல்களையும் வெளியிட வேண்டும். இந்த தகவலை வெளியிடுவதன் மூலம், பணமோசடி மற்றும் தொடர்புடைய நடவடிக்கைகள் குறைக்கப்படுகின்றன.


வருமான ஆதாரங்களை வெளியிடுவது
ஊதியம் மற்றும் வணிகத்தைத் தவிர, கூடுதல் பணத்திற்கான பிற ஆதாரங்கள் இருக்கலாம். குடியிருப்பு அல்லது வணிகச் சொத்தின் வாடகை, நிலையான வைப்புத்தொகையின் வட்டி, மூலதன ஆதாயம் போன்றவை இதில் அடங்கும். வரி செலுத்துவோரில் பலர், தங்களின் அனைத்து வருமான ஆதாரங்களையும் தெரிவிக்காமல், அவர்களின் ஊதியங்கள் அல்லது முக்கிய வணிக வருமானத்தை மட்டுமே தெரிவிக்கின்றனர்.


வருவாய் ஆதாரங்கள் அனைத்தையும் பட்டியலிட சட்டப்படி கடமைப்பட்டிருக்கிறோம் என்பது பலருக்கு தெரிவதில்லை. அதேபோல, குறிப்பிட்ட நிதியாண்டில் நீங்கள் வேலை மாறியிருந்தால், உங்களின் முந்தைய வேலையின் வருமானத்தையும் வெளிப்படுத்த வேண்டும்.


மேலும் படிக்க | பென்ஷன் கவலையை போக்கி வரி சேமிப்பையும் தரும் NPS திட்டம்!


ITR-V CPCக்கு அனுப்புதல்
உங்கள் வருமான வரிக் கணக்கை மின்னணு முறையில் தாக்கல் செய்து 120 நாட்களுக்குப் பிறகு,பெங்களூரில் உள்ள IT துறையின் மையப்படுத்தப்பட்ட செயலாக்க மையத்திற்கு (CPC) ITR-V இன் கையொப்பமிடப்பட்ட நகலை வழங்க வேண்டும். ITR-V CPCக்கு அனுப்பப்படாவிட்டால் உங்கள் கோப்பு அங்கீகரிக்கப்படாது.  நீங்கள் ஆதார் அடிப்படையிலான சரிபார்ப்பு மற்றும் டிஜிட்டல் கையொப்பத்தைப் பயன்படுத்தாவிட்டால், இந்த விவரத்தை கவனிக்கவும்.
 
வரி செலுத்தவது
சம்பளத்திற்கு வேலை பார்ப்பவர்களின் சம்பளத்தில் இருந்து பொருத்தமான வரியை உங்கள் முதலாளி TDS வடிவில் எடுத்துக்கொள்வார், எனவே நீங்கள் முன்கூட்டிய வரியைச் செலுத்த வேண்டியதில்லை. ஆனால், சுயதொழில் செய்பவராக இருந்தாலோ அல்லது உங்கள் சம்பளத்தைத் தவிர வேறு மூலங்களிலிருந்து வருமானம் பெற்றிருந்தாலோ, நீங்கள் முன்கூட்டியே சரியான நேரத்தில் வரி செலுத்த வேண்டும். அதிக வரி செலுத்தியிருந்தால், செலுத்தப்பட்ட அதிக வரியானது, வட்டியும் திரும்பக் கிடைக்கும்.


திருத்தப்பட்ட ITR ஐ சமர்ப்பிப்பு
முறையற்ற அல்லது தவறான தனிப்பட்ட அல்லது நிதித் தகவல்கள், தவறான விலக்குகள் போன்ற ஐடிஆர் தாக்கல் செய்வதில் ஏற்படும் பிழைகள் அல்லது தவறுகளை சரிசெய்ய ஐடி துறையிடம் திருத்தப்பட்ட ஐடிஆரை நீங்கள் தாக்கல் செய்யலாம். உங்கள் ஐடிஆரைச் சரிபார்க்கும் போது, தவறுகள் ஏதேனும் இருப்பது தெரிந்தால், திருத்தப்பட்ட வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். பலர் இதை செய்வதில்லை.


மேலும் படிக்க | வருமான வரி செலுத்துவோருக்கு முக்கிய செய்தி: இந்த படிவங்கள் முக்கியம்!! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ