முதலீடு செய்ய 6 சிறந்த அரசு முதலீட்டு திட்டங்கள் குறித்து தெரிந்துக் கொள்ளுங்கள்!
நீங்கள் வரும் காலத்தில் வருமானத்தை பெற பாதுகாப்பான முதலீட்டைத் தேடுகிறீர்களா? அதுவும் அரசாங்கத்தின் உதவியுடன் ஆபத்து இல்லாத பாதுகாப்பான போர்ட்ஃபோலியோவில் முதலீடு செய்ய விரும்பிக்கிறீர்களா? உங்களுக்கான சிறந்த சில திட்டங்கள் குறித்து தகவலை இங்கே வழங்கியுள்ளோம்.
Best Government Investment Plans in India: நீங்கள் வரும் காலத்தில் வருமானத்தை பெற பாதுகாப்பான முதலீட்டைத் தேடுகிறீர்களா? அதுவும் அரசாங்கத்தின் உதவியுடன் ஆபத்து இல்லாத பாதுகாப்பான போர்ட்ஃபோலியோவில் முதலீடு செய்ய விரும்பிக்கிறீர்களா? உங்களுக்கான சிறந்த சில திட்டங்கள் குறித்து தகவலை இங்கே வழங்கியுள்ளோம். நீண்ட கால முதலீடுகள், சிறந்த நன்மைகள், ஓய்வூ கால திட்டமிடல், நிலையான வருமானம், வரியில் இருந்து விடுதலை, குழந்தைகள் நலன், குடும்ப நலன் போன்ற சலுகைகளை அடங்கிய திட்டங்களை பார்ப்போம்.
இந்திய அரசின் சிறந்த திட்டங்கள்:
1. சுகன்யா சமிர்தி யோஜனா (எஸ்.எஸ்.ஒய்):
கன்யா சம்ரிதி யோஜனா தங்கள் மகள்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க பெற்றோரை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. 2014 அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி "பேட்டிபச்சாவ் பேட்டி படாவ்” (பெண்குழந்தையைக் காப்போம், கற்பிப்போம்) என்ற பிரச்சாரத்தின் கீழ் தொடங்கினார். இந்த திட்டம் மைனர் பெண் குழந்தையை இலக்காகக் கொண்டது. சிறுமியின் பிறப்பு முதல் 10 வயது வரை எந்த நேரத்திலும் எஸ்.எஸ்.ஒய் (Sukanya Samriddhi Yojana) கணக்கைத் திறக்க முடியும். இந்த திட்டத்திற்கான குறைந்தபட்ச முதலீட்டு தொகை ஆண்டுக்கு 1,000 முதல் அதிகபட்சம் 1.5 லட்சம் ரூபாய் வரை. இது பெண்கள் மற்றும் குழந்தைகள் முன்னேற்ற அமைச்சகம், உடல்நலம் மற்றும் குடும்பநல அமைச்சகம், மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஆகியவற்றின் கூட்டுமுயற்சியினால் தொடங்கப்பட்டுள்ளது.
2. தேசிய ஓய்வூதிய திட்டம் (என்.பி.எஸ்):
தேசிய ஓய்வூதிய திட்டம் அல்லது என்பிஎஸ் இது இந்திய அரசு வழங்கும் புகழ்பெற்ற திட்டங்களில் ஒன்றாகும். இது அனைத்து இந்தியர்களுக்கும் முதலீடு செய்ய ஒரு சிறந்த ஓய்வூதிய சேமிப்பு திட்டமாகும். ஆனால் இது அனைத்து அரசு ஊழியர்களுக்கும் கட்டாயமாகும். இந்திய குடிமக்களுக்கு ஓய்வூதிய வருமானத்தை வழங்குவதை என்.பி.எஸ் நோக்கமாகக் கொண்டுள்ளது. 18 முதல் 60 வயதுக்குட்பட்ட இந்திய குடிமக்கள் மற்றும் என்.ஆர்.ஐ.க்கள் (வெளிநாடு வாழ் இந்தியர்கள்) இந்த திட்டத்தில் சேரலாம். ஓய்வூதியத் திட்டங்கள் மக்களுக்கு வழக்கமான வருமானம் இல்லாதபோது வயதான காலத்தில் நிதி ஸ்திரத்தன்மையையும் பாதுகாப்பையும் உறுதி செய்கின்றன. என்.பி.எஸ் (National Pension System) திட்டத்தின் கீழ், பிரிவு 80 சிசிடி (1 பி) இன் கீழ் வரி விலக்கு அளிக்கப்படுகின்றன.
3. பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்):
பொது வருங்கால வைப்பு நிதி அல்லதுபொது வருங்கால வைப்பு நிதி இது இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட பழமையான ஓய்வூதிய திட்டங்களில் ஒன்றாகும். இந்த திட்டத்தில் முதலீடு செய்யப்பட்ட தொகை, சம்பாதித்த வட்டி மற்றும் திரும்பப் பெறப்பட்ட தொகை அனைத்துக்கும் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன. எனவே, பொது வருங்கால வைப்பு நிதியம் பாதுகாப்பானது மட்டுமல்ல, அதே நேரத்தில் வரிகளைச் சேமிக்கவும் உதவும். பிபிஎஃப் திட்டத்தில் செய்யப்பட்ட வைப்புத்தொகைக்கு வருமான வரிச் சட்டத்தின் 80 சி பிரிவின் கீழ் 1,50,000 ரூபாய் வரை வரி விலக்குகளை கோரலாம்.
4. தேசிய சேமிப்பு சான்றிதழ் (என்.எஸ்.சி):
தேசிய சேமிப்பு சான்றிதழ் அல்லது என்எஸ்சி இந்தியர்களிடையே சேமிப்பு பழக்கத்தை மேம்படுத்துவதற்காக இந்திய அரசால் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்திற்கான குறைந்தபட்ச முதலீட்டு தொகை 100 ரூபாய் மற்றும் அதிகபட்ச முதலீட்டு தொகைக்கு வரம்பு இல்லை. ஒவ்வொரு ஆண்டும் என்.எஸ்.சியின் வட்டி விகிதம் மாறுகிறது. இந்தியாவில் உள்ள எந்தவொரு தபால் நிலையத்திலிருந்தும் வயது வந்தவர் முதலீடு செய்யலாம். இவை ஐந்து மற்றும் பத்து ஆண்டு முதிர்வு காலத்திற்கு வழங்கப்படுகின்றன. வருமான வரிச் சட்டம், 1961இன் பிரிவு 80சிஇன் வரிச் சலுகையும் பெறலாம். இந்த திட்டத்தில் முதலீடு செய்ய இந்தியாவில் வசிப்பவர்கள் மட்டுமே தகுதியுடையவர்கள்.
5. அடல் ஓய்வூதிய யோஜனா (APY):
அடல் ஓய்வூதிய திட்டம் அல்லது APY என்பது அமைப்புசாரா துறையில் உள்ள ஊழியர்களுக்காக இந்திய அரசு தொடங்கிய ஒரு சமூக பாதுகாப்பு திட்டமாகும். 18-40 வயதுக்குட்பட்ட ஒரு இந்திய குடிமகன் ஏபிஒய் (Atal Pension Yojana) விண்ணப்பிக்க தகுதியானவர். இந்த திட்டத்தின் கீழ், முதலீடு குறைந்தது 20 ஆண்டுகளுக்கு தொடர வேண்டும். திட்டத்தில் முதலீடு செய்ய, நீங்கள் ஆதார் உடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு வைத்திருக்க வேண்டும். இந்த திட்டத்தில் 5 வகைகள் உள்ளன. இந்த திட்டத்தின் ஒரே நிபந்தனை என்னவென்றால், 60 வயது வரை பங்களிப்பு செய்யப்பட வேண்டும். 60 வயதை அடைந்தவுடன் ஓய்வூதியத்தைப் பெறலாம்.
6. பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (பி.எம்.ஜே.டி.ஒய்):
பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (Pradhan Mantri Jan Dhan Yojana) திட்டத்தின் அடிப்படை வீட்டுக்கு ஒரு சேமிப்பு வங்கி கணக்கு திறக்கப்பட வேண்டும் என்பதே நோக்கமாகும். இத்திட்டத்தின் கீழ், வங்கி கணக்கு தொடங்குவதற்கு ஆதார் அட்டை இருந்தால் போதும், வேறு ஆவணங்கள் தேவை இல்லை. ஏழைகளுக்காக துவங்கப்பட்ட, இந்த திட்டத்தில் குறைந்தபட்ச வயது வரம்பு 10 ஆண்டுகள் ஆகும். மேலும் 18 வயதுக்கு மேற்பட்ட எந்தவொரு இந்திய குடியிருப்பாளரும் இந்த கணக்கைத் திறக்க தகுதியுடையவர். ஒரு நபர் 60 வயதை எட்டிய பின்னரே இந்தத் திட்டத்திலிருந்து வெளியேற முடியும். மத்திய, மாநில அரசுகள் அளிக்கும் நிதி உதவிகளை, வங்கிக் கணக்கு மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR