ஃப்ரீவேர் கிளவுட் அடிப்படையிலான உடனடி செய்தி மென்பொருள் மற்றும் பயன்பாட்டு சேவை டெலிகிராம் ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பயனர்களின் உரையாடல் வரலாற்றை WhatsApp-லிருந்து Telegram-க்கு மாற்ற செய்ய முடியும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

WhatsApp விட்டு வெளியேறும் பயனர்களுக்கு Telegram ஒரு புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. டெலிகிராம் பயனர்கள் இப்போது தங்கள் வாட்ஸ்அப் உரையாடல்களை டெலிகிராம் பயன்பாட்டிற்கு எளிதாக மாற்றலாம். புதிய அம்சம் iOS மற்றும் Android-ல் சமீபத்திய Telegram புதுப்பிப்புடன் கிடைக்கிறது. வாட்ஸ்அப்பைத் தவிர, இந்த அம்சம் Line மற்றும் KakaoTalk ஆகியவற்றிலிருந்தும் உரையாடல்களை மாற்ற உதவுகிறது.


இந்த புதிய அம்சம் Telegram-ன் சமீபத்திய பதிப்பில் பிற அம்சங்களுடன் வருகிறது. எல்லா நேரங்களிலும் எப்போது வேண்டுமானாலும் ரகசிய உரையாடல்கள் (Chat), குழுக்கள் மற்றும் Call வரலாற்றை நீக்கும் திறனும் இதில் அடங்கும். Telegram குரல் உரையாடல்கள் மற்றும் ஆடியோ பிளேயரையும் மேம்படுத்தியுள்ளது, மேலும் புதிய புதுப்பிப்பில் புதிய Android அனிமேஷன்களையும் சேர்த்துள்ளது. WhatsApp உரையாடலை டெலிகிராமிற்கு நகர்த்துவது மிகவும் பயனுள்ள அம்சமாகும், அதை நீங்கள் எப்படி செய்ய முடியும் என்பதை இங்கே பார்க்கலாம்.


ஆன்ட்ராய்டு


- உங்கள் வாட்ஸ்அப்பில் ஒரு உரையாடலை திறந்து, More என்பதை கிளிக் செய்யவும். அடுத்து Export என்பதை தேர்ந்தெடுக்கவும்.


- Share செய்வதற்கான விருப்பங்களில் இருந்து டெலிகிராமைத் தேர்வுசெய்க.


- பின்னர் ஒரு டெலிகிராம் உரையாடலை தேர்ந்தெடுக்கவும் அல்லது நீங்கள் உரையாடலை விரும்பும் இடத்தில் Import செய்து கொள்ளலாம்.


ALSO READ | முடக்கபட்ட BSNL எண்ணை ஆக்டிவேட் செய்வது எப்படி? - இதோ முழு விவரம்!


iOS 


- உரையாடலின் Contact Info அல்லது Group Info வை திறக்கவும்.


- Export Chat என்பதை தேர்ந்தெடுக்கவும், அங்கு காண்பிக்கப்படும் share பட்டியலில் இருந்து டெலிகிராமைத் தேர்வு செய்யவும்.


- உரையாடலை இடதுபுறமாக ஸ்வைப் செய்து Export Chat விருப்பத்தைப் பெறலாம்.


- கடைசியாக Telegram பயன்பாட்டில் இந்த உரையாடலை எங்கு வேண்டுமானாலும் நீங்கள் Import செய்துக் கொள்ளலாம்.


டெலிகிராமில் Import செய்யப்பட்ட செய்திகள் தற்போதைய நாளில் வந்த செய்திகளாக புதுப்பிக்கப்படும், ஆனால் அவற்றின் அசல் நேர முத்திரைகளும் (TimeStamps) இதில் அடங்கும். டெலிகிராம் பயன்பாடும் இந்த செய்திகளை உரையாடலில் “Imported” என்று காண்பிக்கும். புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் உள்ளிட்ட செய்திகளையும் டெலிகிராமில் Import செய்யலாம்.


Telegram மற்றும் Signal போன்ற பிற பயன்பாடுகளுக்கு WhatsApp பயனர்கள் மாறி வரும் நேரத்தில் இந்த புதிய அம்சம் கிடைத்துள்ளது. WhatsApp-ன் புதிய தனியுரிமைக் கொள்கை, Facebook உடனான நிறுவனத்தின் தரவு பகிர்வு முறைகள் போன்றவை பயனர்களை பாதித்தது. இதனால், WhatsApp தனது கொள்கை மாற்றத்தை பிப்ரவரி முதல் ஜூலை வரை தள்ளி வைத்துள்ளது. ஆனால், மக்கள் தொடர்ந்து வேறு பயன்பாட்டிற்கு மாறி வருகின்றனர்.


உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR