மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூர் பகுதியை சேர்ந்த இளம் ஜல்லிக்கட்டு வீரர், சரவணன். மாடிபிடி வீரரான இவர், அவரது பகுதியில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்வார். ஜல்லிகட்டுவீரரான சரவணன் என்ற வாலிபர்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜல்லிக்கட்டு காளை பரிசு:


மாடுபிடி வீரர் சரவணனின் சகோதரி உள்ளார். அந்த சகோதரியின் மகனுக்கு காதணி விழா நடைப்பெற்றது. சகோதரியின் பிள்ளைக்கு காதணி விழா நடைபெருகையில் தாய்மாமன் சீர் கொடுக்க வேண்டும் என்ற வழிமுறையை சரவணனும் கடைபிடித்துள்ளார். ஆனால் மற்றவர்களை போல தங்கம், வெள்ளி, வைரம், மொய் என சீர் செய்யாமல் வித்தியாசமான சீர் ஒன்றை செய்துள்ளார். சரவணன், தங்கள் குடும்பத்தினர் 5 ஆண்டுகளாக வளர்த்த வந்த, ஜல்லிகட்டு காளையை அவரது சகோதரி மகனின் காதணி விழாவிற்கு சீதனமாக வழங்கியுள்ளார். 


பாரம்பரியத்தை காக்கும் முயற்சி


வீரமிகு ஜல்லிக்கட்டு விளையாட்டின் மீது அதீத ஆர்வம் கொண்டவர் சரவணன். இதன் காரணமாகவே இவர், ஜல்லிக்கட்டின் பாரம்பரியத்தை காக்கும் விதமாகவும் ஜல்லிகட்டு காளையை போற்றும் விதமாகவும் ஒரு பரிசை தனது சகோதரியின் மகனின் காதணி விழாவில் வழங்க வேண்டும் என முடிவு செய்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து, இன்று அலங்காநல்லூரில் நடைபெற்ற சரவணன் தனது சகோதரியின் இல்ல காதணி விழாவிற்காக ஜல்லிகட்டு காளையை அலங்கரித்து ஊர்வலமாக அழைத்து சென்றுள்ளார். மேளதாளங்கள் முழங்க தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் புடை சூழ விழா நடைபெறும் பகுதிக்கு அழைத்து சென்றார் சரவணன்.


ஆரத்தி எடுத்து வரவேற்பு


ஜல்லிகட்டு காளையுடன் வந்த மாடுபிடி வீரர் சரவணனுக்கு அவரது தங்கை ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பிறகு, தாய்மாமன் சீராக சரவணன் கொண்டு வந்திருந்த காளையை அன்போடு பெற்றுக்கொண்டார் அவரது தங்கை. இந்த சம்பவம், விழாவிற்கு வந்திருந்த உறவினர்கள் மற்றும் சரவணனின் குடும்பத்தினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 


மேலும் படிக்க | MK Stalin: அன்பு செலுத்திடும் அன்னைருக்கு Mothers day வாழ்த்துகள்-முதல்வர் மு.க ஸ்டாலின்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ