MK Stalin: அன்பு செலுத்திடும் அன்னைருக்கு Mothers day வாழ்த்துகள்-முதல்வர் மு.க ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தாய்மார்கள் அனைவருக்கும் தனது ட்விட்டர் பக்கத்தில் அன்னையர் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.  

Written by - Yuvashree | Last Updated : May 14, 2023, 12:01 PM IST
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்னையர் தின வாழ்த்து.
  • கனிமொழி எம்.பி தனது அன்னையர் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
  • பல அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
MK Stalin: அன்பு செலுத்திடும் அன்னைருக்கு Mothers day வாழ்த்துகள்-முதல்வர் மு.க ஸ்டாலின் title=

உலகம் முழுவதும் இன்று அன்னையர் தினம் கொண்டாடப்படுவதை ஒட்டி, அரசியல் கட்சி தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை பலரும் அன்னையர் தின வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

முதல்வர் வாழ்த்து: 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில் தனது அன்பு அன்னைக்கும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “உடலுக்குள் இன்னொரு உயிராய் நம்மைச் சுமந்து, உயிருக்கும் மேலாய் அன்பு செலுத்திடும் அன்னையர் அனைவர்க்கும் #MothersDay வாழ்த்துகள். அன்பினால் அவனியை நிறைக்கும் தாயின் எதிர்பார்ப்புகளையும் விருப்பங்களையும் மதிப்போம், நிறைவேற்றுவோம்! என்று தெரிவித்துள்ளர். 

மகனுக்கு அன்பு முத்தம்:

அனைத்து அன்னையர் தினங்களுக்கும் தனது தாயை சந்தித்து அவரிடம் ஆசி பெறுவது முதல்வரின் வழக்கம். அதன்படி, இன்றும் தனது அம்மாவிற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளர் முதலமைச்சர். 

“அன்னையின் அன்பு” என்ற கேப்ஷனுடன் இரண்டு புகைப்படங்களை முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ஸ்டாலினின் தாய் தயாளு அம்மாள், மகனுக்கு அன்பு முத்தம் கொடுக்கும் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. தி.மு.க எம்.பி கனிமொழியும் முதல்வருடன் இந்த புகைப்படங்களில் இடம் பெற்றுள்ளார். 

கனிமொழி வாழ்த்து:

தி.மு.கவின் துணை பொது செயலாளரும் மக்களவை உறுப்பினருமான கனிமொழியும் தனது அன்னையர் தின வாழ்த்துகளை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில், “அம்மாக்களின் அளவிட முடியாத அன்பாலும், அசைத்திட முடியாத மனவலிமையாலும் இயங்கிக் கொண்டிருக்கிறது இவ்வுலகம்! அன்னையர் நாள் வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார். 

தனது வாழ்த்து பதிவுடன், தாய் ராஜாத்தி அம்மாளுடன் தந்தை மு.கருணாநிதி உள்ள புகைப்படத்தையும் இணைத்துள்ளார், கனிமொழி. 

அண்ணாமலை வாழ்த்து:

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, தனது அன்னையர் தின வாழ்த்துகளை சமூக வலைதளம் மூலம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தாயின் அன்பையும் தாய்மையின் பெருமையையும் போற்றும் அன்னையர் தினமான இன்று, குடும்பத்தில் அனைவரையும் இணைக்கும் மையப்புள்ளியாக விளங்கும் தாயின் கடின உழைப்பு, தியாகங்கள், நம் வாழ்வில் அவர்கள் வகிக்கும் முக்கிய பங்கினை போற்றுவோம். இனிய அன்னையர் தின வாழ்த்துகள்” என கூறியுள்ளார். 

மேலும் படிக்க | கர்நாடக வெற்றி கலங்கரை விளக்கம்... மக்கள் மாற்றத்துக்கு தயாராகிட்டாங்க - கனிமொழி ரியாக்ஷன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News