வெளியானது ‘இரும்பு திரை’ பர்ஸ்ட்லுக்!
நடிகர் விஷால் நடிப்பில் வெளிவரும் ‘இரும்பு திரை’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது!
நடிகர் விஷால் நடிப்பில் வெளிவரும் ‘இரும்பு திரை’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது!
நடிகர் விஷால் நடிப்பில், தற்போது உருவாகி வரும் படம் ‘இரும்பு திரை’. பி.எஸ்.மித்ரன் இந்த படத்தை இயக்குகிறார். விஷாலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ இப்படத்தினை தயாரித்து வருகிறது. படத்திற்கு இசை யுவன் ஷங்கர் ராஜா அமைத்திருக்கிறார்.
‘இரும்பு திரை’ படத்தில் விஷால், சமந்தா, அர்ஜுன், ரோபோ ஷங்கர், டெல்லி கணேஷ், வின்சென்ட் அசோகன் மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த படத்தில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் வில்லன் வேடம் ஏற்கிறார்.
‘இரும்பு திரை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று (நவ்.,18-ம்) தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியிடப்படும் என முன்னதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் தற்போது படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது!