'2018 Everyone Is A Hero' என்ற மலையாள திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் அதிக வசூல் பெற்று பிளாக்பஸ்டர் சாதனை பெற்றுள்ளது. அனைத்து இடங்களில் இருந்தும் இந்த படத்திற்கு வரும் அபரிவிதமான பாராட்டுக்கள் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது எனலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்படம் கேரளாவில் மட்டும் 9ஆவது நாளில் சுமார் ரூ. 5.18 கோடி வசூல் செய்து மாலிவுட் வரலாற்றில் சாதனை படைத்துள்ளதாகவும் தகவல்கள் கூறப்படுகின்றன. உலக அளவில் முதல் 9 நாட்களில் ரூ. 80 கோடி வசூல் செய்து 100 கோடி ரூபாய் வசூலை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. 


ஒரு திரைப்படம் வெளியான நாளில் இருந்தே இந்த அளவுக்கு வரவேற்பைப் பெறுவது மாலிவுட் வரலாற்றில் இதுவே முதல் முறையாகும் என ரசிகர்களால் கூறப்படுகிறது. மேலும் பிற மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்து மலையாளத் திரையுலகிற்கு ஒரு புதிய முகத்தை அளித்து வருகிறது என்றும் கூறப்படுகிறது. இந்த படம் திரையரங்குகளில் பெரும் வரவேற்பை பெற்று வரும்நிலையில், இதுதான் உண்மையான கேரளா ஸ்டோரி என ரசிகர்கள் படத்தை கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.


மேலும் படிக்க | 15 நாள்களில் திருமணம் டூ பிரிவு... சம்யுக்தா - விஷ்ணுகாந்த் பிரச்சனைக்கு என்ன காரணம்?


பாலிவுட்டில் 'தி கேரளா ஸ்டோரி' என்ற பெயரில் வெளிவந்த படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளானது. இது கேரள மண்ணை தவறாக சித்தரிப்பதாகவும், சிறுபான்மையினர் மீது வெறுப்பை உருவாக்கும் வகையிலும் உள்ளது என முதலமைச்சர் பினராயி விஜயன் தொடங்கி பல்வேறு அமைப்புகள் தங்களின் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து இங்கு நினைவுக்கூரத்தக்கது. இந்த சர்ச்சைக்கு இடையில் வெளியான '2018' திரைப்படம் கேரள ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. 


ஜூட் அந்தனி ஜோசப் இயக்கத்தில் மே 5ஆம் தேதி வெளியான மாலிவுட்டின் மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படம் 2018 Everyone Is A Hero. படத்தின் மேக்கிங்கும் மிரட்டலாக உள்ளது. இதில் டோவினோ தாமஸ், ஆசிப் அலி, குஞ்சாகோ போபன், லால், நரேன், வினீத் ஸ்ரீனிவாசன், அபர்ணா பாலமுரளி, தன்வி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  இயக்குனர் ஜூட், 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கேரளா மாநிலம் முழுவதும் ஏற்பட்ட வெள்ளத்தை இந்த படத்திற்குள் உருவாக்கி பார்வையாளர்களுக்கு அந்த பயங்கரமான தருணங்களை மீண்டும் வழங்கி வெற்றி பெற்றுள்ளார். கதை தத்ரூபமாக இருக்க கலை இயக்குநர் சிறப்பான உழைப்பை கொடுத்துள்ளார்.


காவ்யா பிலிம் கம்பெனி மற்றும் பிகே பிரைம் புரொடக்ஷன்ஸ் ஆகியவற்றின் கீழ் வேணு குன்னப்பிள்ளி, சி கே பத்மகுமார் மற்றும் ஆண்டோ ஜோசப் ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர். மாளிகைப்புறத்திற்குப் பிறகு காவ்யா பிலிம் கம்பெனியின் 2ஆவது மற்றும் அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் படம் இது ஆகும். 


மற்ற தொழில்நுட்ப வல்லுநர்கள் தயாரிப்பு வடிவமைப்பாளர் மற்றும் கலை இயக்குனர்: மோகன்தாஸ், DOP: அகில் ஜார்ஜ், எடிட்டர்: சமன் சாக்கோ, லைன் தயாரிப்பாளர்: ஹோபகுமார் ஜி.கே, தயாரிப்பு கட்டுப்பாட்டாளர்: ஸ்ரீகுமார் சென்னிதலா, தலைமை இணை இயக்குனர்: சைலக்ஸ் ஆபிரகாம், PRO & சந்தைப்படுத்தல்: வைசாக் சி வடக்கேவீடு: டிஜிட்டல் தனய் சூர்யா. 


மேலும் படிக்க | Upasana Kamineni: “இதனால்தான் தாமதமாக தாயாக முடிவு செய்தேன்” அன்னையர் தினத்தில் உண்மையை உடைத்த உபாசனா!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ