தி கேரளா ஸ்டோரியை தடை செய்ய கோரும் மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்!

‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க மறுத்த கேரள உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை மே 15-ம் தேதி விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 9, 2023, 02:05 PM IST
  • ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க மறுத்த கேரள உயர் நீதிமன்றம்.
  • எந்தவொரு குறிப்பிட்ட சமூகத்தையும் புண்படுத்தும் வகையில் டிரெய்லரில் எதுவும் இல்லை.
  • இஸ்லாத்திற்கு எதிரான படம் அல்ல, இது ISIS பயங்கரவாத அமைப்பிற்கு எதிரானது.
தி கேரளா ஸ்டோரியை தடை செய்ய கோரும் மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க  உச்சநீதிமன்றம் ஒப்புதல்! title=

 

தி கேரளா ஸ்டோரி திரைப்படம் கேரளாவில் இந்துப் பெண்களை இஸ்லாம் மதத்துக்கு மதம் மாற்றி, ஐஎஸ் போன்ற பயங்கரவாத இயக்கங்களுக்கு பாலியல் அடிமைகளாக அனுப்புகின்றனர் என்பதை சொல்லுகிறது தி கேரளா ஸ்டோரி திரைப்படம். உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கபப்ட்ட இப்படத்தை, கேரளாவில் மட்டுமல்ல நாட்டின் பெரும்பாலான மாநிலங்களிலும் உள்ள இஸ்லாமிய சமுதாயத்தினர் எதிர்ப்பை காட்டி வருகின்றனர். முன்னதாக, கேரள உயர்நீதிமன்றம், கடந்த வாரம்  'தி கேரளா ஸ்டோரி' படத்தின் வெளியீட்டைத் தடை செய்ய மறுத்ததோடு, ஒட்டுமொத்தமாக எந்தவொரு குறிப்பிட்ட சமூகத்தையும் புண்படுத்தும் வகையில் டிரெய்லரில் எதுவும் இல்லை என்றும் கூறியது. மேலும், இந்த படம் இஸ்லாத்திற்கு எதிரான படம் அல்ல, இது ISIS பயங்கரவாத அமைப்பிற்கு எதிரானது தான் எனவும் கூறியது

‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க மறுத்த கேரள உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை மே 15-ம் தேதி விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது. சுதிப்தோ சென் எழுதிய 'தி கேரளா ஸ்டோரி', கேரளாவைச் சேர்ந்த இந்துப் பெண்கள் எப்படி இஸ்லாமிய மதத்துக்கு மாற நிர்ப்பந்திக்கப்பட்டார்கள் மற்றும் இஸ்லாமிய அரசு (IS) என்ற பயங்கரவாதக் குழுவால் அவர்கள் எப்படி மூளை சலவை செய்யப்பட்டு, பாலியல் அடிமைகளாக்கப்பட்டனர் எனவும் கூறுகிறது. மே 5 ஆம் தேதி வெளியான இந்தப் படத்தின் முதல் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியானதிலிருந்து பல இடங்களில் புயலை கிளப்பியது.

‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை வெளியிட இஸ்லாமிய சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, பல மாநிலங்களில் வன்முறை வெடிக்கும் சூழ்நிலை உருவானதால் திரைப்படத்தை வெளியிட மறுப்பும் தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் திரைப்படம் வெளியிட தடை விதிக்கப்படவில்லை என்றாலும்,  திரையரங்கு உரிமையாளர்கள் இத்திரைப்படத்தை திரையிட மறுத்தனர்.

‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு வரி விலக்கு அளித்த உத்திர பிரதேசம்

உத்தரபிரதேச அரசு "தி கேரளா ஸ்டோரி"-க்கு மாநிலத்தில் வரிவிலக்கு கொடுக்கப்படும் என அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வெளியிட்டார். உத்தரபிரதேசத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ வரிவிலக்கு அளிக்கப்படும் என்று ஆதித்யநாத் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இயக்குனர் தகவல் ஷிஷிர் இது குறித்து கூறுகையில், வெள்ளிக்கிழமை லக்னோவில் நடைபெறும் படத்தின் சிறப்புக் காட்சியில் உத்திர பிரதேசத்தில் முதல்வர் கலந்து கொள்கிறார் என்றார்.

மேலும் படிக்க | தீவிரவாதத்துக்கு துணை நிற்கும் காங்கிரஸ்! ‘தி கேரளா ஸ்டோரி’ படத்துக்கு ஆதரவாக பேசிய பிரதமர்!

கல்லூரிப் பெண்களுக்காக திரையிடப்படும் தி கேரளா ஸ்டோரி

உத்தரப்பிரதேச பாஜக செயலாளர் அபிஜத் மிஸ்ரா சனிக்கிழமையன்று நகரில் சுமார் 100 கல்லூரிப் பெண்களுக்காக தி கேரளா ஸ்டோரி படத்தை திரையிட ஏற்பாடு செய்தார். பாஜக தலைவர் ஒரு தியேட்டரை முன்பதிவு செய்து, 'லவ் ஜிகாத்' சதியில் சிக்குவதை தடுக்க இளம் பெண்களுக்கு இந்த படம் காட்டப்பட வேண்டும் என்று கூறினார்.'லவ் ஜிஹாத்' என்பது வலதுசாரி ஆர்வலர்களால் இந்துப் பெண்களை திருமணம் மூலம் மதமாற்றம் செய்ய முஸ்லீம் ஆண்களின் சூழ்ச்சியைக் குற்றம் சாட்டுவதற்காக அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் என்றும், ஏமாற்றும் பெண்கள் எப்படிக் கையாளப்பட்டு, பின்னர் மதமாற்றம் செய்யப்படுகிறார்கள் என்பதைக் காட்டுகிறது என்றும் மிஸ்ரா கூறினார்.

படத்திற்கு ஆதரவு அளித்த  பிரதமர் நரேந்திர மோடி

படம் வெளியான அன்று, பிரதமர் நரேந்திர மோடி, கர்நாடகாவில் தேர்தல் பிரசாரத்தின் போது, தி கேரள ஸ்டோரி படத்திற்கு ஆதரவாக பேசியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி கூறுகையில், " தீவிரவாதம் எப்படி ஊடுருவியிருக்கிறது என்பதை தி கேரள ஸ்டோரி படம் காட்டுகிறது. இந்த படத்தை தான் தடை செய்ய காங்கிரஸ் கட்சி போராடி வருகிறது. இந்த படத்தை தடை செய்ய முயற்சிப்பதன் மூலம் பயங்கரவாதத்தை பாதுகாக்கும் சக்திகளுக்கு காங்கிரஸ் ஆதரவு ஆதரவளிக்கிறது" என்றார்.

மேற்கு வங்கத்தில் திரையிட தடை

இதற்கிடையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, 'எந்தவொரு வெறுப்பு மற்றும் வன்முறைச் சம்பவத்தைத் தவிர்க்கும் வகையில், 'தி கேரளா ஸ்டோரி' படத்தை, மாநிலத்தில் திரையிட உடனடியாக தடை விதித்து உத்தரவிட்டார். தமிழகம் முழுவதும் உள்ள மல்டிபிளக்ஸ்கள், சர்ச்சைக்குரிய படத்தின் காட்சிகளை ரத்து செய்துள்ளன. 

மேலும் படிக்க | தி கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு தடை விதிக்க வழக்கு! அதுவும் இந்த காரணத்திற்காகவா?

கேரளாவில் மத மாற்றம், தீவிரவாதம்
 
அதா ஷர்மா நடித்த "தி கேரளா ஸ்டோரி" வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியிடப்பட்டது, முதலில் கேரளாவில் இருந்து காணாமல் போனதாகக் கூறப்படும் "சுமார் 32,000 பெண்கள்" பின்னால் உள்ள நிகழ்வுகளை "விவரிப்பதாக" சித்தரிக்கப்பட்டது. இதை சுதிப்தோ சென் இயக்கிய நிலையில், விபுல் அம்ருத்லால் ஷாவின் சன்ஷைன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

மேலும் படிக்க | தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தமிழ்நாட்டில் தடையா... உளவுத்துறை கொடுத்த அலர்ட் என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News