லைகா புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.ரஹமான் இசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷ்ய் குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டகளின் பிரம்மாண்டமாகக் கருதப்படும் 2.0 படத்தின் இசை வெளியீடு விழா துபாயில் வரும் நாளை வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இசை வெளியீடு நிகழ்ச்சியின் சிறப்பம்சங்கள்:-


* 2.0 படத்தின் இசை வெளியீடு burj park என்ற இடத்தில் நடைபெறுகிறது. இப்படிப்பட்ட நிகழ்வு நடத்த துபாய் அரசாங்கம் முதன் முறையாக உத்தரவு வழங்கியுள்ளது.


* இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹமான் 125 சிம்போனி கலைஞர்களுடன் இணைந்து இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளார். மேலும் 2.0 படத்திலிருந்து ஒரு பாடலை இந்நிகழ்ச்சியில் நேரலையாக இசையமைக்கவுள்ளார்.


* பாஸ்கோ நடனக்குழு சூப்பர்ஸ்டார் ரஜினி - இயக்குனர் ஷங்கர் - இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹமான் கூட்டணியில் உருவான பாடல்களுக்கு சிறப்பு நடனவிருந்து அளிக்கவுள்ளனர்.


* இந்நிகழ்ச்சியைப் காண 12000 பேர் இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


* துபாயில் உள்ள பெரிய மால்களில் ரூபாய் 2 கோடி செலவில் பிரம்மாண்ட LED போடப்பட்டு இந்நிகழ்ச்சியை நேரலையாகக் காண்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 


* துபாய் அரசர் இந்தப் பிரம்மாண்ட நிகழ்வில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகமே எதிர்நோக்கும் இந்நிகழ்வைப் பார்க்க பல பிரபலங்கள் துபாய் விரைந்த வண்ணமுள்ளனர்.