மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் 3 திரைப்படங்கள்!
நவம்பர் 19ம் தேதி முருங்கைக்காய் சிப்ஸ், பார்டர், சபாபதி திரைப்படங்கள் வெளியாக உள்ளது
பொதுவாக தீபாவளி பண்டிகை என்றாலே முதலில் ஞாபகத்திற்கு வருவது விதவிதமான பலகாரங்கள்,பட்டாசுகள், புதுத்துணிகள் தான். ஆனால் இளைஞர்களின் மத்தியில் இவற்றைவிட முக்கியமானது எதுவென்று பார்த்தால் புது படங்களின் ரிலீஸ் தான்.
கடந்த வருடம் தீபாவளி கொரோனா காரணமாக அவ்வளவாக ஜொலிக்கவில்லை. ஆனால் இந்த தீபாவளியை ஜொலிக்கவைக்க பல படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.அதில் முக்கியமான ஒன்று பலரது எதிர்பார்ப்பான சூப்பர் ஸ்டார் நடிக்கும் 'அண்ணாத்தே'. இப்படத்தில் ரஜினியுடன் மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
நவம்பர்-4 அன்று 'அண்ணாத்தே' படம் வெளியாவதால் மற்ற படங்கள் வெளியீட்டு தேதியை தள்ளி வைத்துள்ளன. சிம்புவின் மாநாடு திரைப்படம் நவம்பர் 26ம் தேதி வெளியாக உள்ளது. அண்ணாத்த படம் வெளியான அடுத்த வாரம் எந்த ஒரு படங்களும் வெளியாக வில்லை. அதற்க்கு அடுத்த வாரம் 3 படங்கள் ஒரே நாளில் வெளியாக உள்ளன.
இயக்குனர் ஸ்ரீஜர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘முருங்கைக்காய் சிப்ஸ்’. சாந்தனு ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக அதுல்யா நடித்து உள்ளார். மேலும் கே.பாக்யராஜ், மனோபாலா, ஆனந்த்ராஜ், மயில்சாமி, மொட்ட ராஜேந்திரன், யோகி பாபு, ரேஷ்மா, மதுமிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
அடுத்ததாக, இயக்குனர் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் திரைப்படம் சபாபதி . இப்படத்தினை தயாரிப்பாளர் ரமேஷ் குமார் தயாரிக்க, இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.
மேலும், குற்றம் 23 படத்துக்குப் பின் அருண் விஜய் - அறிவழகன் மீண்டும் இணைந்து பணிபுரிந்துள்ள படம் 'பார்டர்'. இந்தப் படத்தில் ரெஜினா, ஸ்டெபி படேல், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் அருண் விஜய்யுடன் நடித்துள்ளனர். இந்த மூன்று படங்களும் நவம்பர் 19ம் வெளியாகும் என்று அறிவிப்பு வந்துள்ளது. மேலும் சில படங்கள் இந்த லிஸ்டில் சேரலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது.
ALSO READ நவம்பர் 1 முதல் தமிழக திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR