தாராவியில் வாழும் தமிழர்கள் குறித்தும், அவர்கள் தங்கள் இருப்பிடத்தை மேம்படுத்தவும் பாதுகாக்கவும் போராடுவதை காட்சிப்படுத்தியிருந்த படம், காலா. தாராவி கூட்டத்திற்கே தலைவனாக விளங்கும் ‘காலா’ என்ற கதாப்பாத்திரத்தின் பெயரைத்தான் படத்தின் டைட்டிலாக வைத்துள்ளனர். இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து மணிகண்டன், ஹூமா குரேஷி, பிரபல பாலிவுட் நடிகர் பாலா படேகர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணனின் இசையில் படம் உருவாகியிருந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுதான் கதை..


தமிழர்கள் வாழும் மும்பை தாராவி பகுதியில், சிறு அசைவாக இருந்தாலும் அது ரஜினி (காலா சேட் என்கிற கரிகாலன்) சொல்படிதான் நடக்கிறது.  அடிப்படை வசதிகள் கூட இல்லாவிட்டாலும், மகிழ்ச்சியோடு வாழும் அப்பகுதி ஏழை மக்களின் குடிசைகளை அப்புறப்படுத்திவிட்டு அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி சம்பாதிக்க முயற்சிக்கிறார் நானா படேகர் (ஹரி தாதா). இதனால்  மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை உணர்ந்து, அந்தத் திட்டத்தை எதிர்க்கிறார் காலா. வில்லன், நவீன மையமாக்கும் திட்டத்தை காலாவின் முன்னாள் காதலியின் மூலம் காய்நகர்த்துகிறார். இறுதியில் சதி செய்பவர்களின் குட்டு வெளிபடுகிறது. இதற்கு, காலாவின் குடும்பத்தினர் பலியாகின்றனர். கடைசியில் தாராவியின் ஹீரோவான காலா தீ விபத்தில் உயிரிழப்பது போல காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். ஆனால், க்ளைமேக்ஸில் வில்லனை எதிர்கொள்வது பாேன்ற சீனும் இடம் பெற்றிருக்கும். இதைப்பார்த்த சிலர், “காலா செத்துட்டாரா இல்லையா?” என நீண்ட நாட்களாக குழம்பி வந்தனர். 


மேலும் படிக்க | Lust Stories 2: புது பட டீசரில் படு கவர்ச்சி காட்டிய தமன்னா..செம ஷாக்கில் ரசிகர்கள்..!


க்ளைமேக்ஸ் விளக்கம்..


காலா படம் முழுவதும் ரஜினியின் டச் இருக்கிறதோ இல்லையோ, பா.ரஞ்சித்தின் டச் நிறையவே இருக்கும். “கருப்பு உழைப்போட வண்ணம்..” “நிலம் எங்கள் உரிமை” போன்ற டைலாக்குகளினால் பிற்படுத்தப்பட்ட மக்களின் கோபத்தையும் ஆதங்கத்தையும் வலிமையாக காட்டியிருப்பார், ரஞ்சித். அப்படித்தான் கடைசி காட்சியிலும், இறந்து விட்டதாக நினைத்த காலா, கருப்பு உடையில் தன்னை துரத்துவது போல உணருவார், வில்லன். உண்மையில், தீ விபத்திலேயே காலா இறந்துவிடுவார். ஆனால், மக்களின் மனங்களில் காலா ஏற்படுத்திய தாக்கம்தான் அவரை வில்லன் பயந்து நடுங்கும் பிம்பமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். அம்பேத்கர், பெரியார், காமராஜர் போன்ற பெரும் தலைவர்கள், இறந்தாலும் அவர்கள் செய்த செயல்கள் மூலமாக மக்களின் மனங்களில் வாழ்ந்து கொண்டே இருப்பர் என்ற கூற்று உள்ளது. அதையேதான் காலாவிலும் ஃபாலோ செய்திருக்கிறார், பா.ரஞ்சித்.  


காலாவாக புது அவதாரம் எடுத்த ரஜினி..


‘நிலம் எங்கள் உரிமை’ என்பதை அடிப்படையாக வைத்து தனக்கான பார்வையோடு ரஜினி ரசிகர்களுக்காக மிரட்டல்  செய்திருக்கிறார் இயக்குநர் பா.இரஞ்சித். ரஜினி படமாக இருந்தாலும், தனது அரசியல் கருத்துகளை படம் முழுக்க நேர்த்தியாக தூவியிருக்கிறார்.  ஆக்சன், ஸ்டைல், ரொமான்ஸ் அனைத்திலும் சூப்பர் ஸ்டார் என்பதை நிரூபிக்கிறார். காலா  கதாபாத்திரத்தில் ரஜினி கருப்பு வேட்டி, நரைத்த தாடி, சுருங்கிய தோல், கண்கள் என்று வயதுக்கேற்ற கதாபாத்திரத்தில் செம மாஸ் நடித்திருப்பார். படம் முழுவதும்  காலா சேட்டாக கம்பீரம் காட்டுகிறார் கெத்து ரஜினி. மனைவி ஈஸ்வரி ராவிடம் அசடு வழியும்போதும், முன்னாள் காதலியான ஹியூமா குரேஷியை சந்திக்கும்போதும் பார்வையால் மென்மையான உணர்வுகளை அற்புதமாக வெளிப்படுத்தியிருந்தார்.


ஹிட் அடித்த கூட்டணி..


சூப்பர் ஸ்டார் என போற்றப்படும் ரஜினி, சில வருடங்கள் முன்பு வரை பிரம்மாண்ட இயக்குநர்களோடும், இசைக்கலைஞர்களாேடும்தான் கைக்கோர்த்து வந்தார். கபாலி மூலம் பா.ரஞ்சித்திற்கு கைகொடுத்தார். இப்படம், ஏற்கனவே உச்சத்தில் இருந்த ரஜினியை இன்னும் உயரத்திற்கு கொண்டு போனது. ரஞ்சித்திற்கு அடையாளம் தந்தது. அடுத்து இருவரும் காலா படத்தில் கைக்கோர்த்து வெற்றி பெற்றனர். இந்த தைரியம்தான், ரஜினியை கார்த்திக் சுப்புராஜ்ஜிற்கும் வாய்ப்பு கொடுக்க செய்தது. மேலும், ரஞ்சித்-ரஜினி கூட்டணியில் வெளியான இரண்டு படங்களுமே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றதால் இவர்களை “ஹிட் அடித்த கூட்டணி..” என்றே சில ரசிகர்கள் குறிப்பிட்டனர். 


வில்லனாக மிரட்டிய நானா படேகர்..


ஊரே நடுங்கும் அரசியல்வாதியாக இருந்தாலும் அமைதியாக வில்லத்தனம் செய்யும் மிரட்டல் கேரக்டர். அதிகாரத்தின் அதீத ருசி கண்ட ஒருவர், அதைத் தக்கவைக்க, என்ன செய்வார் என்பதை தன் உடல்மொழியால் உணர்த்துகிறார். ரஜினிக்கு இணையாக பல இடங்களில் மாஸ் காட்டுகிறார். ரஜினியும், நானாவும் வரும் சீன்கள் படத்தை உச்சபட்ச பரபரப்புக்கு எடுத்துச் சென்றன.
லெனினாக வரும் மணிகண்டன், அஞ்சலி பட்டேல், சம்பத், அருள்தாஸ் என யாரும் சோடை போகவில்லை. நேர்த்தியான திரைக்கதையால் சலிப்பில்லாமல் ரசிகர்களை க்ளைமேக்ஸ் வரை போரடிக்காமல் கரை சேர்த்தது படம்.


சந்தோஷ் நாராயணனின் அதிரடி இசை..


பாடல்கள் படத்தின் ஓட்டத்தோடு கலந்திருப்பது, ரசிகர்களை அந்த படத்தில் ஒரு கதாப்பாத்திரமாகவே உணர வைத்தது. பின்னணி இசை, பாடல்கள் என அனைத்திலும் மிரட்டி இருந்தார் சந்தோஷ் நாராயணன். குறிப்பாக, ரஜினி நடந்து வரும்போது ஒலிக்கும் தீம் மியூசிக்கில் அரங்கமே அதிர்ந்தது.


மும்பை கதைதான்..ஆனால் சென்னையில் செட்..


மும்பையில் உள்ள தாராவியை வைத்து எடுக்கப்பட்ட படம் என்பதால், படக்குழு அங்குதான் படப்பிடிப்பை நடத்த இருந்தனர். சில நாட்கள் குறிப்பிட்டது போல ஷூட்டிங்கும் நடைப்பெற்றது. ஆனால் மழை காரணமாக அது தொடர முடியாமல் போனது. இதனால், சென்னையில் தாராவி பாேலவே செட் போட்டு படம்பிடிக்க ஆரம்பித்தனர். படம் முழுக்க வரும் தாராவி பகுதி, ‘செட்’ என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? அவையனைத்தும் செட் என்பதே தெரியாத அளவிற்கு இருந்தது, கலை இயக்குநர் ராமலிங்கத்தின் கலை இயக்கம். மகிழ்நன், ஆதவன் தீட்சண்யா, ரஞ்சித் மூவரும் இணைந்து எழுதி இருக்கும் வசனங்கள் படத்தின் மிகப்பெரிய பலம். 


மேலும் படிக்க | Shaktimaan: 90’s குழந்தைகளுக்கு ஜாக்பாட்..மீண்டும் வருகிறார் சக்திமான்..ஹீரோ யார் தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ