Bigg Boss Tamil Season 5: தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் 4 சீசன்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் பிரம்மாண்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி கடந்த ஒரு வாரமாக கலகலப்பாக சென்றது. இது பார்வையாளர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது விறுவிறுப்பாக பிக் பாஸ் நிகழ்ச்சி (Bigg Boss Tamil) நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் நேற்று இரண்டாவது வாரமாக வெளியேற்றப்படும் போட்டியாளருக்கான நாமினேஷன் நடந்தது. இந்த போட்டியில் 10 போட்டியாளர்கள் நாமினேஷன் செய்யப்பட்டனர். முதல் வார நாமினேஷனில் தாமரைச்செல்வி, பாவனி ரெட்டி ஆகிய இருவரை தவிர 15 பேர் நாமினேஷன் செய்யப்பட்டிருந்தனர். மேலும் இந்த ௧௫ பேரில் நேற்று முன்தினம் நாடியா எலிமினேட் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. 


ALSO READ | பிக்பாஸ் ஐந்தாம் சீசனின் போட்டியாளர்களின் புகைப்படத் தொகுப்பு


இந்த நிலையில் நேற்றைய நாமினேஷன் படலத்தில் 10 பேர் சிக்கி உள்ளனர். இதில் அபிஷேக், பாவனி ரெட்டி, அக்சரா, இசைவாணி, சின்னப்பொண்ணு, ஸ்ருதி, ப்ரியங்கா, அபினய், ஐக்கி, தாமரை ஆகிய 10 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்த வார நாமினேஷனில் உள்ள 10 பேர்களில் யார் ஞாயிறு அன்று வெளியேற போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 


இதற்கிடையில் இந்த நிகழ்சியில் மிகப்பெரிய ட்விஸ்ட் ஒன்று உள்ளது. அதன்படி நாமினேஷனில் இடம்பெற்றுள்ள 10 பேர்களில் ஒருவர் இந்த வார நாமினேஷனில் இருந்து தப்பிக்கும் வாய்ப்பை பிக் பாஸ் கொடுத்துள்ளார். அதன்படி இன்றைய பஞ்சதந்திரம் டாஸ்க்கில் அதிக நாணயங்களை கைப்பற்றி நாமினேஷனில் இருந்து காப்பாற்றப்படுவார்கள் என்றும் பிக்பாஸ் அறிவிக்கிறார். அதன்படி அதிக நாணயங்களை கைப்பற்றி நாமினேஷனில் இருந்து தப்பிப்பது யார் என்பதை இன்று பார்ப்போம்.



ALSO READ | Biggboss 5: பிக்பாஸ் நிகழ்ச்சியில் திருநங்கை நமீதாவின் கண்ணீரும், கலைஞர் கருணாநிதியும்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR