டிக்கெட் கவுண்டரில் ஸ்பைடர்மேன்க்கு வந்த சோதனை - வைரல் வீடியோ!
ஸ்பைடர்மேன் முகமூடி அணிந்த ஒரு நபரிடம் கேஷியர் கேட்கும் கேள்வி வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்ற மார்வெல் படமான "ஸ்பைடர்மேன்; நோ வே ஹோம்" ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. இது ஸ்பைடர் மேன்; ஹோம்கமிங் (2017) மற்றும் ஸ்பைடர் மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம் (2019) ஆகியவற்றின் தொடர்ச்சியாகும், மேலும் இது மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸின்(MCU) 27வது படமாகும்.
ALSO READ | Spiderman No Way Home முதல் நாளிலேயே பாக்ஸ் ஆபிஸ் ஹிட்! அதிரடி கலெக்ஷன்
இப்படத்தில் டாம் ஹாலண்ட், ஜெண்டயா, பெனடிக்ட் கம்பெர்பாட்ச், ஜேக்கப் படலோன்,ஜான் ஃபாவ்ரூ, ஜேமி ஃபாக்ஸ், வில்லெம் டஃபோ, ஆல்ஃபிரட் மோலினா, பெனடிக்ட் வோங், டோனி ரெவோலோரி ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில் ஸ்பைடர்மேன் ரசிகர் ஒருவரின் கேளிக்கையான வீடியோ இணையத்தை வட்டமடித்து வருகிறது.
இன்ஸ்டாகிராம் பயனர் டிலான் இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார், அதில் ஒரு நபர் ஸ்பைடர்மேன் உடை அணிந்து திரையரங்கில் உள்ள டிக்கெட் கவுண்டருக்கு செல்கிறார். அவரின் முகம் முதலில் கேமராவில் அது சரியாக பதியவில்லை. அந்தக் கவுண்டரில் இருந்த கேஷியர் இந்த நபரை வரவேற்கிறார், பின்னர் பேசிய அவர் இரண்டு டிக்கெட்டுகளை தருமாறு கேட்கிறார். அதற்கு கேஷியர் எந்தப் படத்திற்கு? என்று கேட்கிறார்.
இந்த வீடியோ சாதாரணமாக தெரிந்தாலும் அனைவரிடம் கேளிக்கையாக ஒன்றாக மாறி வருகிறது. ஸ்பைடர்மேன் முகமூடி அணிந்திருக்கும் அந்த நபரிடம் கேஷியர் கேட்ட கேள்வி அர்த்தமற்றதாகும் கருதப்படுகிறது. இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களிலேயே 129,000 க்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது. இந்த வீடியோவை பார்த்த பலரும் தங்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை என்றும், இது அதிக லைக்குகளை பெறும் என்றும், பலரும் ரசிப்பதற்கு தகுதியான வீடியோ என்றும் பலவாறும் நெட்டிசன்கள் இந்த வீடியோவிற்கு கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
ALSO READ | பொதுவெளியில் டேட்டிங் செய்ய கூடாது! ஸ்பைடர்மேன் தயாரிப்பாளர் எச்சரிக்கை!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR