நடிகர் ரஜினிகாந்தை பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் சந்தித்து பேசினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம், ஐந்து முறை உலகச்சாம்பியன் பட்டம் வென்றவர். பெண் பாக்சர்களில் இவர் ஒருவர் மட்டுமே ஆறுமுறை உலக குத்துச் சண்டை சாம்பியன் போட்டியில் வென்றவர் ஆவார்.


உலக அளவில் பிரபலமான மேரிகோம் குழந்தைகளுக்காக சென்னையில் லதா ரஜினிகாந்த் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொள்ள சென்னை வந்தார். சிறப்பு விருந்தினராக வந்த மேரிகோம் சென்னையில் போயஸ்தோட்ட வீட்டில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேசினார்.


பின்னர் கிளம்பும்போது ரஜினிக்கு குத்துச்சண்டை பயிற்சி அளித்திருக்கிறார். இருவரும் குத்துச்சண்டைப் போடுவதுபோன்று புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளது வலைதளங்களில் வைரலாகி வருகிறது.