Actor Ajith Kumar Birthday Movie Re-Releases :  கோலிவுட்டின் டாப் ஹீரோவாக இருக்கும் அஜித்குமார், கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக தமிழ் திரையுலக ரசிகர்களின் மனங்களில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார். 1990 ஆம் ஆண்டு பால்ய வயதில் ‘என் வீடு என் கணவர்’ படத்தில் அறிமுகமான இவர், பின்னர் தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஹீரோவாக மாறுவார் என யாருக்கும் தெரியாது. காதல் மன்னனாக, ஆக்ஷன் ஹீராேவாக, வில்லனாக, கபட நாடகனாக, இவர் ஏற்று நடித்த வேடங்கள் பல உள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அஜித்தின் பிறந்தநாள், வரும் மே 1 ஆம் தேதியன்று கொண்டாடப்படுகிறது. படங்களில் நடிக்கும் நாட்களை தவிர, பிற நாட்களில் கேமராவின் கண்களில் இருந்து விலகியே இருக்கும் அஜித், அந்த நாளின் போதும் எதுவும் தனது ரசிகர்களுக்கு தெரிவது போல செய்ய மாட்டார். ஆனால் அவரது ரசிகர்களோ, தனக்கு பிடித்த நடிகரின் பிறந்தநாளை கொண்டாட பல விஷயங்களை தயார் செய்திருக்கின்றனர். அப்படிப்பட்ட விஷயங்களில் ஒன்றுதான், அவரது படங்களின் ரீ-ரிலீஸ். மே 1 ஆம் தேதி, தமிழகத்தில் உள்ள ஒரு சில திரையரங்குகளில் மட்டும் அவரது ஹிட் படங்கள் வெளியாக இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா? 


காதல் மன்னன்:


1998ஆம் ஆண்டு, அஜித் நடிப்பில் வெளியான படம் காதல் மன்னன். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக மனு என்பவர் நடித்திருந்தார். படம் மட்டுமன்றி, இதில் இடம் பெற்றிருந்த பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தன. விவேக், எம்.எஸ்.விஸ்வநாதன், கரண் உள்ளிட்ட பலர் இதில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். தமிழில் வெளியான சூப்பர் காதல் படங்களில், இதுவும் ஒன்று. இந்த படத்தை சில திரையரங்குகளில் மே 1ஆம் தேதியன்று பார்க்கலாம். 



பில்லா:


அஜித்திற்கு, புதிதாக கேங்க்ஸ்டர் தோற்றத்தை பூசி, அது அவருக்கு அச்சாக பொருந்தி போன படம் பில்லா. இது, ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பில்லா படத்தின் ரீ-மேக் ஆகும். இந்த படத்தை விஷ்ணுவர்தன் இயக்க, யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைத்திர்ந்தார்.  இந்த படம், முன்னர் 2007ஆம் ஆண்டில் வெளியான போது, மாபெரும் ஹிட் அடித்தது. அதே போல, அஜித்தின் பிறந்தநாளன்று மீண்டும் மே 1ஆம் தேதி சில திரையரங்குகளில் வெளிவர இருக்கிறது.


மேலும் படிக்க | ‘கில்லி’யை தொடர்ந்து வெளியாகும் விஜய்யின் இன்னொரு சூப்பர் ஹிட் படம்! எது தெரியுமா?


மங்காத்தா:


அஜித்தின் திரை வாழ்க்கையிலேயே மிகவும் நல்ல படம் என்று புகழப்படும் படம், மங்காத்தா. இது, அஜித்தின் 50வது படமாகும். வெங்கட் பிரபு இயக்கியிருந்த இந்த படத்தில் அவரது தம்பி பிரேம் ஜி அமரன் முக்கிய தோற்றத்தில் நடித்திருந்தார். கோவா, சென்னை 28 உள்ளிட்ட படங்களில் அவருடன் பயணித்த சில நடிகர்களும் இதில் இடம் பெற்றிருந்தனர். அஞ்சலி, ஆண்ட்ரியா, அர்ஜுன் சார்ஜா, த்ரிஷா உள்ளிட்ட பலர், இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களாக வந்தனர். ஹீஸ்ட் த்ரில்லரான இந்த படம், முழுமையாக அஜித்தின் வேறு ஒரு முகத்தை காண்பித்தது. இதுவரை வெளியான படங்களில், அஜித் கேஷுவலாக பேசிய டைலாக்குகள் மிக மிக குறைவு. பல நாட்களுக்கு பிறகு அவரை அப்படி டைலாக் பேச வைத்த படம், மங்காத்தா.  


இதில் அவர், “நானும் எவ்வளவு நாள்தான் நல்லவனாவே நடிக்கிறது..” எனும் வசனம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. படம் முடிந்தவுடன் காட்டப்பட்ட ப்ளூப்பர்ஸ் காட்சியில் அஜித் படக்குழுவினருடன் நகைச்சுவையாக நேரம் செலவிட்ட தருணங்கள் காண்பிக்கப்படும். அதை பார்க்கவே ஒரு கூட்டம் தியேட்டருக்கு படையெடுத்தது. இப்படி, அவருக்கு பெறும் திருப்புமுணையை ஏற்படுத்திக்கொடுத்த ‘மங்காத்தா’ படமும் மே 1ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படம், ரிலீஸான போது ரூ.100 கோடி பாக்ஸ் ஆபிஸ் கலக்‌ஷன் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ரீ-ரிலீஸை தமிழகத்தின் ஒரு சில திரையரங்குகளில் மட்டும் பார்க்கலாம். 


மேலும் படிக்க | Rathnam Review : ‘ஆக்‌ஷன் சீன்ஸ் மட்டும் தேறும்..’ விஷாலின் ரத்னம் படம் எப்படியிருக்கு? ட்விட்டர் விமர்சனம்..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ