30 வருட திரையுலக வாழ்க்கை! ரசிகர்களுக்கு அஜித் கடிதம்!
கடந்த வருடம் அஜித் வெளியிட்ட செய்தி குறிப்பை மீண்டும் வெளியிட்டு சிறு நினைவூட்டல் என்று பகிர்ந்துள்ளார் சுரேஷ் சந்திரா.
கடந்த வருடம் நடிகர் அஜித்குமார் திரையுலகிற்கு வந்து 29 ஆண்டுகள் நிறைவு பெற்று 30வது ஆண்டில் அடியெடுத்து வைத்தார். இதனையொட்டி ரசிகர்களுக்கு அஜித் கடிதம் எழுதினார். அஜித் வெளியிட்ட செய்தி குறிப்பை மீண்டும் வெளியிட்டு சிறு நினைவூட்டல் என்று பகிர்ந்துள்ளார் சுரேஷ் சந்திரா. அதில் "ரசிகர்கள், வெறுப்பாளர்கள் மற்றும் நடுநிலையாளர்கள் ஆகியோர் ஒரு நாணயத்தின் 3 பக்கங்கள். ரசிகர்களின் அன்பையும், வெறுப்பாளர்களின் வெறுப்பையும், நடுநிலையாளர்களின் சார்பற்ற கருத்துக்களையும் நான் மனதார ஏற்றுக்கொள்கிறேன். வாழு வாழவிடு!. அளவற்ற அன்பு எப்போதும்.. அஜித் குமார்" என்று கூறியுள்ளார்.
மேலும் படிக்க | அஜித் 61 படத்தின் தலைப்பு இதுவா?! பாரதியை ஃபாலோ செய்யும் அஜித்
1990-ம் ஆண்டு என் வீடு என் கணவர் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் அஜித். பின்பு கதாநாயகனாக 1993-ம் ஆண்டு வெளியான அமராவதி படத்தின் மூலம் களம் இறங்கினார். இப்படம் தொடங்கி தற்போது வெளியான வலிமை வரை மொத்தமாக இதுவரை 60 படங்களில் நடித்துள்ளார். 1995ம் ஆண்டு வெளியான ஆசை திரைப்படம் அஜித்தை திரும்பி பார்க்க வைத்தது. பின்பு, எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் அஜித் நடித்த வாலி திரைப்படம் இவரது திரையுலக பயணத்தில் முக்கிய திருப்பமாக அமைந்தது.
அஜித்குமார் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதிலும், ரசிகர்களை சந்திப்பதையும் தவிர்த்து வருகிறார். வேதாளம், விவேகம், விஸ்வாசம் என தொடர்ந்து மூன்று படங்கள் சிவாவின் இயக்கத்தில் நடித்த அஜித், தற்போது நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் ak61 என அடுத்த மூன்று படங்களை வினோத்தின் இயக்கத்தில் நடிக்கிறார். சமீபத்தில் அஜித் அரசியலுக்கு வருவார் என்று ஜெயலலிதாவின் உதவியாளர் கூறியிருந்த நிலையில், அஜித் அதனை மறுத்து இருந்தார். தற்போது வலிமை திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது.
மேலும் படிக்க | அஜித் அரசியலுக்கு வர தயாராகிறார் - ஜெயலலிதாவின் உதவியாளர்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR