சென்னை: நடிகர் அஜித்தின் சென்னை வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்த காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று (மே 31) மாலை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசி அழைப்பில், நடிகர் அஜித் வீட்டில் சில நிமிடங்களில் வெடிகுண்டு வெடிக்க உள்ளதாகத் கூறப்பட்டது.


உடனே வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாயுடன் அஜித் வீட்டுக்கு சென்ற காவல்துறையினர் சோதனை நடத்தினர். சோதனையில் வெடிகுண்டு ஏதும் இல்லை, அது வெறும் வெற்று மிரட்டல் என்று தெரியவந்தது.


Also Read | சகுனி கதாநாயகின் ரகசிய திருமணத்திற்கு காரணம் என்ன?


காவல்துறையினரின் தீவிர விசாரணையில், புரளியை கிளப்பிய நபர் வழக்கமாக இதுபோல் மிரட்டல் விடுக்கக்கூடிய மரக்காணத்தைச் சேர்ந்த புவனேஷ் என்பது தெரியவந்தது.


சற்று மனநலம் பாதிக்கப்பட்ட இந்த நபர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நடிகர் ரஜினி உட்பட பலரது வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர் என்பது தெரியவந்தது.


தலா என்று அன்பாக அழைக்கப்படும் அஜித்குமாரின் வீட்டிற்கு இதற்கு முன்னரும் இதேபோல வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன.பிரபல நட்சத்திரங்கள் தொடர்பாக பரபரப்பு தகவல்களை ஏற்படுத்தும் வேலையற்றவர்களின் வேலையாக இது இருக்கலாம்.


Also Read | தனுஷின் ‘ஜகமே தந்திரம்’; நாளை வெளியாகிறது ட்ரைலர்..!!


ஆனால், எந்தவொரு விஷயத்தையும் மிகவும் எளிதாகவும் எடுத்துக் கொள்ள முடியாது. இதுபோன்ற மிரட்டல்கள் காவல் துறையின் நேரத்தையும் வீணடிக்கும் என்றாலும், அவர்கள் இந்த மிரட்டலை விசாரித்தாக வேண்டிய கட்டாயம் உண்டு.


நேர்கொண்ட பார்வை திரைப்படம் தான் அஜித் நடித்து கடைசியாக வெளியான திரைப்படம்.  
தற்போது வலிமை திரைப்படத்தை அஜித் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.


கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக திரைப்படத் தயாரிப்பு தள்ளி போய்க் கொண்டே இருக்கிறது.


Also Read | "மேயாத மான்” பட இயக்குனர் குடும்பத்தில் 14 பேரை மேய்ந்து தீர்த்த கொரோனா!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR