ஆக்‌ஷன் கிங் என ரசிகர்களால் பட்ட பெயர் கொடுக்கப்பட்ட பிரபல நடிகர் அர்ஜுன். ஆரம்பத்தில் ஆக்‌ஷன் கிங் ஹீரோவாக இருந்த இவர், தற்போது பிரபல வில்லன் நடிகராகவும் வலம் வருகிறார். இவரது மகள் ஐஸ்வர்யா விஷாலுடன் பட்டத்து யானை படத்தில் நடித்து பிரபலமானார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அர்ஜுனின் மகள்:


கோலிவுட்டின் பல வாரிசு நடிகைகளும் நடிகர்களும் அவர்களது பெற்றோரை தொடர்ந்து திரையுலகிற்கு வருவது போல, அர்ஜுனின் மகளும் சினிமாவிற்குள் நுழைந்தார். 2013ஆம் ஆண்டு வெளியான பட்டத்து யானை படம்தான் இவர் நடித்த முதல் படம். இதில், இவர் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அர்ஜுனை ஏற்றுக்கொண்ட அளவிற்கு அவரது மகளை ஏற்றுக்கொள்ள திரையுலகம் தயாராக இல்லை. இதனால் இவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் வராமல் போனதாக கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | கமல் Vs மாரி செல்வராஜ்! அடுத்த கட்டத்துக்கு சென்ற மோதல்! முழு விவரம்!


விரைவில் திருமணம்? 


அர்ஜுன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் லியோ படத்தில் நடித்து வருகிறர். இந்த படத்தில் இவர் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இவரது மகளான ஐஸ்வர்யாவிற்கு திருமணம் ஆக இருப்பதாகவும் திரையுலக வட்டாரங்களில் பேசிக்கொள்கின்றனர். அதுவும் ஒரு பெரிய நடிகரின் மகனுடன் தான் இந்த திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. 


இவரது மகனா?


தமிழ் சினிமாவின் லெஜண்ட் குணச்சித்திர நடிகர்களுள் ஒருவர் தம்பி ராமையா. காமெடி கதாப்பாத்திரமாக இருந்தாலும் சரி, வில்லன் கதாப்பாத்திரமாக இருந்தாலும் சரி, அனைத்திலும் புகுந்து விளையாடி விடுவார். இவருக்கு உமாபதி ராமையா என்ற மகனும் விவேகா ராமையா என்ற மகளும் உள்ளனர். தம்பி ராமையாவின் மூத்த மகனான உமாபதி ராமையாவிற்கும் ஐஸ்வர்யாவிற்கும்தான் திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. உமாபதி, மனியார் குடும்பம், தண்ணி வண்டி, திருமணம் போன்ற சில படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். 


காதல் திருமணம்?


ஐஸ்வர்யாவும் உமாபதியும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும் தற்போது இதை வீட்டில் உள்ள பெரியவர்களிடம் கூறி தங்கள் திருமணத்திற்கு சம்மதம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இருவீட்டாரும் இணைந்து பேசி விரைவில் திருமணத்தை முடித்து வைக்க பேச்சு வார்த்தை நடைப்பெற்று வருவதாக கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | வீக்-எண்டில் போர் அடிக்கிதா? ஓடிடியில் வெளியான புதுப்படங்களை பார்த்து மகிழுங்கள்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ