வீக்-எண்டில் போர் அடிக்கிதா? ஓடிடியில் வெளியான புதுப்படங்களை பார்த்து மகிழுங்கள்..!

தமிழ் சினிமாவின் பிரபல ஹீரோக்களின் 5 படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ளன. அவற்றை எந்த தளத்தில் எப்போது , எப்படி பார்க்கலாம்?  

Written by - Yuvashree | Last Updated : Jun 24, 2023, 06:12 PM IST
  • வீக் எண்டில் பார்க்க புது படங்கள்.
  • தீரா காதல் முதல் கழுவேர்த்தி மூக்கன் வரை.
  • லிஸ்டின் பல வகையான படங்கள் உள்ளன.
வீக்-எண்டில் போர் அடிக்கிதா? ஓடிடியில் வெளியான புதுப்படங்களை பார்த்து மகிழுங்கள்..! title=

பிரபல கோலிவுட் நடிகர்களான ஜெய், அருள்நிதி, வரலக்‌ஷ்மி சரத்குமார், காஜல் ஆகியோரின் படங்கள் சில ஓடிடியில் வெளியாகியுள்ளன. இவர்களுடைய இந்த படங்களை எந்த தளத்தில் எப்படி பார்க்கலாம்? முழு விவரம் இதோ. 

தீரா காதல்-நெட்ஃப்ளிக்ஸ்:

ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ், பரிணிதா போன்ற பலர் லீட் ரோலில் நடித்த படம், தீரா காதல். முடிந்து போன பழைய காதலை திருமணத்திற்கு பிறகு மீண்டும் தோண்டி எடுத்து புதுப்பிக்க முயற்சிக்கும் ஒரு பெண்ணிற்கும் அந்த காதலை ஏற்க மறுக்கும் ஆணிற்கும் இடையில் நடக்கும் கதைதான். தீராக்காதல். இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த நிலையில் இது பிரபல ஓடிடி தளமான் நெட்ஃப்ளிக்சில் வெளியாகியுள்ளது. இதை குடும்பத்துடன் அமர்ந்து ஜாலியாக பார்க்கலாம். 

மேலும் படிக்க | கமல் Vs மாரி செல்வராஜ்! அடுத்த கட்டத்துக்கு சென்ற மோதல்! முழு விவரம்!

கொன்றால் பாவம்-ப்ரைம்:

வரலக்‌ஷ்மி சரத்குமார், சந்தோஷ் பிரதாப், செண்ட்ராயன், சார்லி உள்ளிட்ட பலர் நடித்த த்ரில்லர் திரைப்படம், கொன்றால் பாவம். பணத்திற்காக ஆசைப்படும் ஒரு பெண் கொலை செய்யும் வரை செல்லும் கதைதான், இப்படம். இந்த படத்தின் ஒன் லைனிற்காகவும் நடிப்பிற்காகவும் இதில் பணிபுரிந்த கலைஞர்கள் ரசிகர்களிடம் பாராட்டு பெற்றனர். இந்த படம், அமேசான் ப்ரைம் தளத்தில் சப்டைட்டில்ஸ் உடன் வெளியாகியுள்ளது. இதையும் உங்கள் வீக்-எண்ட் வாட்ச் லிஸ்டில் சேர்த்து கொள்ளலாம். 

கருங்காப்பியம்-சிம்ப்ளி சவுத்:

சுதந்திரத்திற்கு முந்தைய காலக்கட்டத்தை வைத்து த்ரில்லர் பாணியில் எடுக்கப்பட்டிருக்கும் கதை, கருங்காப்பியம். இந்த படத்தில் காஜல் அகர்வால், ரெஜினா உள்ளிட்ட 4 கதாநாயகிகள் நடித்துள்ளனர். டேகே எனும் இயக்குநர் எழுதி இயக்கியுள்ள இப்படம் ட்ரைலர் வெளியான புதிதிலேயெ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேர்பினை பெற்றது. இந்த படத்தில் கலையரசன், யோகி பாபு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இப்படம், சிம்ப்ளி சவுத் தளத்தில் உள்ளது. த்ரில்லர், பேய்பட விரும்பிகள் இதை வீக்கெண்டில் பார்த்து மகிழலாம். 

கழுவேத்தி மூர்க்கன்-ப்ரைம்/டெண்ட்கொட்டா:

அருள்நிதி, துசாரா விஜயன் ஆகியோரின் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம், கழுவேத்தி மூர்க்கன். கிராமத்தை அடிப்படையாக வைத்து ஜனரஞ்சகமாக எடுக்கப்பட்டுள்ள படம் இது. இதனை கௌதமராஜ் இயக்கியிருந்தார். முனிஷ்காந்த் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம், அமேசான் ப்ரைம் தளத்தில் சமீபத்தில் வெளியானது. ரத்தம், சதை, வெறி, பகை, சண்டை என பல வகையான அம்சங்கள் நிரம்பியுள்ள இப்படத்தினை அமேசான் ப்ரைம் அல்லது டெண்ட்கொட்டா தளத்தில் பார்க்கலாம்.

காசேதான் கடவுளடா-சன் நெக்ஸ்ட்:

சின்னத்திரை பிரபலங்கள் பலர் நடித்துள்ள படம், காசேதான் கடவுளடா. இதில், நடிகர் சிவா மற்றும் நடிகை பிரியா ஆனந்த் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்லனர். இவர்கள் மட்டுமன்றி, யோகி பாபு, குக் வித் கோமாளி புகழ், சிவாங்கி, ஊர்வசி ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படம், சன் நெக்ஸ்ட் தளத்தில் வெளியாகியுள்ளது. குடும்பத்தினருடன் அமர்ந்து பார்க்க, ஏதுவான படம் இது. 

மேலும் படிக்க | ஆண் நண்பருடன் நெருக்கம் காட்டிய பிரபல நடிகை..! அட இவரா இப்படி செய்தது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News