ஆர்யா நடிப்பில் கடந்த 2010ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் 'பாஸ் என்கிற பாஸ்கரன்'.  எம்.ராஜேஷ் இயக்கத்தில் உருவான இந்த படத்தை கே.எஸ்.ஸ்ரீனிவாசன் தயாரித்து இருந்தார்.  காமெடி திரைப்படமான இப்படத்தில் நயன்தாரா, சந்தானம், சித்ரா லக்ஷ்மணன், லட்சுமி ராமகிருஷ்ணன், விஜயலக்ஷ்மி, ராஜேந்திரன், சுப்பு பஞ்சு போன்ற பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.  இந்த படம் சிறந்த பொழுதுபோக்கு படமாக அமைந்திருந்தது, பெரும்பாலும் இளைஞர்கள் மத்தியில் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து படம் மாபெரும் வெற்றியடைந்தது.  படம் வெளியாகி இத்தனை ஆண்டு காலம் ஆன போதிலும் பல ரசிகர்களின் விருப்ப பட்டியலில் இப்படம் இன்றளவும் இடம்பிடித்து இருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | போனி கபூர் தயாரிப்பில் ரஜினி... சந்திப்பின் பின்னணி என்ன?


'பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்தின் இரண்டாம் பாகம் உருவாகப்போவதாக சில உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வெளிவர தொடங்கியதும், எப்போது இப்படத்தின் உருவாகும் என்று பலரும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.  இரண்டாம் பாகத்தில் தமன்னாவும் இணையவுள்ளதாகவும் சில செய்திகள் வெளியானது, ஆனால் அதுபோன்று எதுவும் இதுவரை நடக்கவில்லை.  இந்நிலையில் 'பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்தின் இரண்டாம் பாகம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது, அதன்படி 'பாஸ் என்கிற பாஸ்கரன்-2' படத்திற்கான பணிகள் தொடங்கவிருப்பதாகவும், முதல் பாகத்தை இயக்கிய எம்.ராஜேஷ் தான் இப்படத்தை இயங்குவதாகவும், கே.எஸ்.ஸ்ரீனிவாசன் படத்தை தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது.



மேலும் படத்தில் ஆர்யா தான் கதாநாயகனாக நடிக்கிறார் என்றும் கூறப்பட்டுள்ளது, அதேசமயம் நயன்தாரா மற்றும் சந்தானம் இந்த படத்தில் இணைய போகிறார்களா என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.  தற்போது ஆர்யா சக்தி சவுந்தராஜன் இயக்கத்தில் 'கேப்டன்' படத்தில் நடித்து வருகிறார், அதனைத்தொடர்ந்து நளன் குமாரசாமி இயக்கத்தில் பெயரிடப்படாத படம் ஒன்றிலும், மிலிண்ட் ராவ் இயக்கத்தில் 'தி வில்லேஜ்' என்கிற வெப் தொடரிலும் நடிக்கிறார்.  மேலும் இயக்குனர் எம்.ராஜேஷ், ஜெயம் ரவியை வைத்து இயக்கம் புதிய படத்திற்கான ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகளை தொடங்கியுள்ளார்.


மேலும் படிக்க | 'குக் வித் கோமாளி 3' டைட்டில் வின்னருக்கு கிடைத்த பரிசு தொகை இவ்வளவா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ