உதயநிதியைத் தொடர்ந்து கார்த்தி?! - வைரலாகும் புதிய தகவல்..!
நடிகர் கார்த்தி சர்தார் எனும் படத்தில் நடித்துவரும் நிலையில் அவர் நடிக்கவுள்ள அடுத்த படம் பற்றி புதிய தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் கார்த்தி இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கும் சர்தார் படத்தில் தற்போது நடித்துவருகிறார்.
இது தவிர இயக்குநர் முத்தையா இயக்கத்தில் விருமன் படத்தையும் அவர் நடித்துமுடித்துள்ளார். இயக்குநர் ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர் இப்படத்தின் வாயிலாக கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார். மற்றொரு புறம் மணிரத்னம் இயக்கத்தில் மல்ட்டி ஸ்டாரர் திரைப்படமாக உருவாகிவரும் பொன்னியின் செல்வன் படத்திலும் முக்கிய ரோலில் கார்த்தி நடித்துவருகிறார்.
இந்நிலையில் கார்த்தி நடிக்கவுள்ள மற்றொரு படம் குறித்துப் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி கார்த்தி அடுத்ததாக அருண்ராஜா காமராஜ் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளாராம். கனா படத்தின் வாயிலாக இயக்குநராக அறிமுகமான அருண்ராஜா இரண்டாவது படமாக உதயநிதியை வைத்து நெஞ்சுக்கு நீதி எனும் படத்தை எடுத்துவருகின்றார். போனி கபூர் தயாரிக்கும் இப்படம் 2019ஆம் ஆண்டு இந்தியில் வெளியான ஆர்ட்டிகிள் 15 படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகிவருகிறது.
மேலும் படிக்க | KGF-2 படத்தால் நின்றுபோன புஷ்பா-2: காரணம் தெரிஞ்சா ‘ஷாக்’ ஆகிடுவீங்க!
உதயநிதியின் இப்படம் வெளியான பின்னர் கார்த்தி நடிக்கவுள்ள புதிய படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கவுள்ளாராம். கார்த்திக்கு இக்கதை மிகவும் பிடித்துப்போய் சம்மதமும் கூறிவிட்டாராம். இந்தப் புதிய படத்தை சர்தார் படத்தின் தயாரிப்பு நிறுவனமான பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க | ரஜினியின் இடத்தில் விஜய்- பின்னணியில் கமல்ஹாசன்?! கசிந்த புதிய தகவல் இதோ!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR