`குதிரையுடன் நான்` வந்தியதேவன் கார்த்தியின் வைரல் பதிவு!
நடிகர் கார்த்தியின் புகைப்படம் டுவிட்டரில் வைரலாகி வருகிறது.
2011 ஆம் ஆண்டு மனிரத்னம் நடிகர் விஜய், மகேஷ் பாபு ஆகியோரை வைத்து கல்கியின் "பொன்னியின் செல்வன்" கதையை இயக்கும் கனவு அப்போது பொய்த்து போனது. ஆனால் அதே கனவு தற்போது நிஜமாகியுள்ளது. படபிடிப்பு மற்றும் பட தயாரிப்பு பணிகள் கிட்டதட்ட முடித்த நிலையில் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி படம் திரைக்கு வரவிருக்கிறது.
இப்படத்தில் திட்டமிட்டதைவிட அதிகமானோர் இடம்பிடித்துள்ளனர். படத்தின் கதாபாத்திரங்களின் பர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன.
மேலும் படிக்க | ‘பீஸ்ட்’டை இவங்களாம் பாக்கக் கூடாதாம்! - ஏன் தெரியுமா?
முக்கிய கதாபாத்திரங்களாக வந்தியதேவன் - கார்த்தி, அருள்மொழி வர்மன் - ஜெயம் ரவி, குந்தவி - த்ரிஷா, ராஜராஜ சோழன் - சரத்குமார், கரிகால சோழன் விக்ரம், நந்தினி & மந்தாகினி(பொன்னி) - ஐஸ்வர்யா ராய் பட்சன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் கதாநாயக பாத்திரமாக கார்த்தியின் வந்தியதேவன் பாத்திரமே கருதப்படுகிறது. இவரது கதாபாத்திரம் முற்றிலும் பயணத்திலேயே இருக்கும் தன்மையுடையது என்பதால் நடிகர் கார்த்தி குதிரை சவாரியிலேயே இருக்கவேண்டும்.
இதற்கு முன்னதாக காஸ்மோரா படத்திற்காக கார்த்தி குதிரை சவாரி செய்து நடித்தார். அதிலும் சில காட்சிகளுக்காகவே குதிரை சவாரி தேவைப்பட்டது.
இந்நிலையில் கார்த்தி தனது இன்ஸ்டா மற்றும் டுவிட்டர் பக்கத்தில் தனது குதிரையுடனான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அப்புகைப்படத்துடன் தனது குதிரை சவாரியின் மீதான காதலையும் வெளிபடுத்தியுள்ளார்.
மேலும் அந்த பதிவில், எனக்கு எப்போதும் குதிரைகள் மீது அதீத ஈர்ப்பு இருக்கிறது. காஷ்மோரா படத்துக்காக குதிரை சவாரியைக் கற்றுக்கொண்டேன். பொன்னியின் செல்வன் படம் முழுக்க நான் குதிரையின் மேல் தான் இருந்தேன். குதிரைகளோடு இருக்கும்போது உண்டாகும் மகிழ்ச்சியை விவரிக்க இயலாது என்று கார்த்தி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க | இந்த இரண்டு ஸ்டார் ஜோடிகள் விரைவில் திருமணம்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR