தயாராகிறது வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2! ஹீரோ சிவகார்த்திகேயன் இல்லை-வேறு யார்?
Varuthapadatha Valibar Sangam 2 : பொன்ராம் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெறிய வெற்றியை பெற்ற படம், வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்திருந்தார். தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
Varuthapadatha Valibar Sangam 2 : டார்க் காமெடி, ஹைஸ்ட் காமெடி, வில்லனின் குணம் பொறுந்திய ஹீரோவின் காமெடி என இப்போது வேண்டுமானால் தமிழ் சினிமாவின் ட்ரெண்ட் மாறியிருக்கலாம். ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, நல்ல காமெடி-காதல் படங்களை சிரித்து பார்த்து வந்தவர்கள் “அதே போன்ற படங்கள் மீண்டும் வராதா” என காத்துக்கொண்டிருக்கின்றனர். அப்படி, ரசிகர்களை வயிறு குலுங்க சிரித்து ரசிக்க வைத்த படங்களுள் ஒன்று, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’. வாழ்வில் எந்த பொறுப்பும் இல்லாமல் சுற்றித்திரியும் இளைஞனுக்கு, அந்த ஊரின் பெரிய தலையின் மகள் மீது காதல் வந்தால் எப்படியிருக்கும்? இந்த கதையைத்தான் இப்படத்தில் காமெடியாக கூறியிருப்பர்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம்:
கிராமப்புற கதைகளை இயக்கி, தமிழ் மக்களை கவர்ந்த இயக்குநர் பொன்ராம். இவருக்கு முதல் ப்ளாக் பஸ்டராக அமைந்த படமே, வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம்தான். திரையுலகில் அப்போதுதான் வளர்ந்து வரும் கதாநாயகனாக இருந்த சிவகார்த்திகேயனுக்கு பெரிய திருப்புமுணையாக அமைந்த படம் இது. இணையதளம் பெரிதாக வளராத அந்த நேரத்தில் கூட, “ஊதா கலரு ரிப்பன்” பாடல் வைரலாக பரவியது. இதற்கு காரணம், படத்தின் இசையமைப்பாளர் டி.இமான். இந்த படத்தின் மூலமாகத்தான் சிவகார்த்திகேயன் பாடகராகவும் உருவெடுத்தார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்திருந்தார். இவர்களின் கெமிஸ்ட்ரி நன்றாக வர்க்-அவுட் ஆக, படமும் ஹிட் அடித்தது. சிவகார்த்திகேயனும் சூரியும் சேர்ந்து செய்யும் காமெடி, ரசிகர்களை இன்னும் கவர்ந்திழுத்தது.
இரண்டாம் பாகம் உருவாகிறதா?
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும், ரசிகர்கள் இந்த தகவல் வெளியானதில் இருந்து மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.
ஹீரோ யார்?
இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க, கவினிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. தற்போது வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் கவின், ஸ்டார் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து வெற்றிமாறன் தயாரிப்பில் ஒரு படத்திலும் நடிக்க கமிட் ஆகியிருக்க பொன்ராமும் அவரை வைத்து ஒரு கிராமிய கதை ஒன்றை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம், ஒரு வேலை வருத்தப்படாத வாலிபர் சங்கம் படமாக இருக்குமோ என்று ரசிகர்கள் பேசிக்கொண்டிருக்கின்றனர்.
மேலும் படிக்க | கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா.. சம்பளத்தையும் உயர்த்தினார்
அடுத்த சிவகார்த்திகேயனாக மாறுவாரா?
நடிகர் கவினும், சிவகார்த்திகேயனை போலவே சின்னத்திரையில் இருந்து வந்தவர். இவருக்கும், சிவகார்த்தகியேனை பாேலவே இவருக்கும் இளம் ரசிகர்கள் பலர் இருக்கின்றனர். இது குறித்து கவனிடமே நேரடியாக ஒரு முறை கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், சினிமாவில் சாதிப்பது 16 வருட கனவு என்றும், இது போன்ற கேள்விகளை கேட்டு அதை கெடுத்துவிட வேண்டாம் என்றும் கூறிவிட்டார்.
கவின், தற்போது நெல்சன் தயாரிப்பில் ப்ளடி பெக்கர் படத்தில் நடித்து வருகிறார். கடைசியாக அவர் நடித்திருந்த ஸ்டார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது.
மேலும் படிக்க | ‘ஸ்டார்’ படத்தில் நடிக்க கவின் வாங்கிய சம்பளம் எவ்வளவு? இவ்ளோ பெரிய அமவுண்டா!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ