திரையுலகில் சில மாதங்களுக்கு முன்னர் பரபரப்பாக பேசப்பட்டு வந்த செய்து நாக சைதன்யா-சமந்தா மணமுறிவு தான்.  2017-ல் திருமண வாழ்க்கைக்குள் ஆனந்தமாய் அடியெடுத்து வைத்த இந்த நட்சத்திர தம்பதி சில கருது வேறுபாடுகள் காரணமாக தங்களுக்குள் இனி ஒத்து வராது என்று கடந்த ஆண்டு இருவரும் ஒருமனதாக முடிவெடுத்து மணவாழ்க்கையை முறித்துக்கொண்டனர்.  இவர்களது மணமுறிவிற்கு இதுதான் காரணம், அதுதான் காரணம் என்று பல வதந்திகள் அடுக்கடுக்காக வெளியாகி கொண்டே இருந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | கடுப்பாகி ட்வீட் செய்த சமந்தா! என்ன நடந்தது


இருப்பினும் இவர்கள் எதைப்பற்றியும் சிந்திக்காமல், அவர்களது கேரியரில் மட்டும் முழு கவனத்தை செலுத்த தொடங்கிவிட்டனர்.  தற்போது இருவரும் தனித்தனி பாதையில் வெற்றியை நோக்கி ஓடிக்கொண்டு இருக்கின்றனர்.  இந்நிலையில் நாக சைதன்யா இரண்டாவது திருமணத்திற்கு தயராகிவிட்டதாக சில செய்திகள் தீயாய் பரவி வருகிறது.  ஏற்கனவே நாக சைதன்யா ஒரு பிரபல நடிகையை மணக்க இருப்பதாக சில வதந்திகள் பரவியது.  தற்போது நாக சைதன்யாவின் பெற்றோர் இவருக்கு ஏற்ற ஒரு பெண்ணை தீவிரமாக தேடி வருகின்றனராம், பெற்றோரின் வற்புதலின் பேரில் இரண்டாவது திருமணத்திற்கு ஒப்புதல் நடிகர் கண்டிப்பாக நீங்கள் பார்க்கும் பெண் நடிகையாக இருக்கக்கூடாது என்று கண்டிஷன் போட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.



நாக சைதன்யாவை திருமணம் செய்துகொள்ள போகும் பெண் யார் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  தற்போது சமந்தா, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகியோரோடு காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து முடித்துள்ளார்.  இதனைத்தொடர்ந்து இவரது கைவசம் சாகுந்தலம், யசோதா, சிடாடெல் மற்றும் அரேஞ்ச்மென்ட்ஸ் ஆஃப் லவ் போன்ற படங்கள் உள்ளது.  மேலும் நடிகர் நாக சைதன்யா, வெங்கட் பிரபு இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகப்போகும் படத்தில் நடிக்கவுள்ளார்.


மேலும் படிக்க | சமூக வலைத்தளத்தை விட்டு விலகும் பிரபல நடிகர்! காரணம் இதான்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR