இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப்போகும் பிரபல நடிகர்?
நடிகர் பிரசாந்த் சில காலங்களாக ஒரு பெண்ணுடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வருவதாகவும், அவரையே இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் கூறப்படுகிறது.
பிரபல இயக்குனர் தியாகராஜனின் மகனும், பிரபல தமிழ் நடிகருமான பிரசாந்த் பலருக்கும் பிடித்த ஒருவர், இவரை பற்றி எவருக்கும் புதிதாக அறிமுகம் செய்யத்தேவையில்லை. தமிழில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர், அதிலும் குறிப்பாக இவருக்கு பெண் ரசிகர்கள் அதிகம் உள்ளனர். தமிழ் ரசிகர்களை மகிழ்வித்தது மட்டுமல்லாது இவர் தற்போது தொடர்ந்து தெலுங்கு ரசிகர்களையும் மகிழ்வித்து வந்தார். இவர் நடித்த 'தோலி முத்து', 'டோங்கா டோங்கா', 'ஜீன்ஸ்', 'பிரேம காவியம்' போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. பின்னர் தெலுங்கு திரையுலகிற்கும் லீவ் விட்ட இவர் ' வினய விதேய ராமா ' படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார், ஆனால் இப்படம் எதிர்பார்த்த அளவு இவருக்கு வெற்றியை அளிக்கவில்லை.
மேலும் படிக்க | கே.ஜி.எஃப் 2 படத்தினால் பீஸ்ட் படத்திற்கு சிக்கல்!
அதனையடுத்து நடிகர் பிரசாந்த் தமிழில் தொடர்ந்து சில படங்களை தயாரித்து வந்தார், இதிலும் அவர் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி கிட்டவில்லை. சில காலங்கள் ஓய்வில் இருந்து வந்த இவர் தற்போது படங்களில் நடிக்க முடிவு செய்துவிட்ட நிலையில், பாலிவுட்டில் ஹிட் அடித்த‘அண்டாடுன்’ என்கிற படத்தின் தமிழ் ரீமேக்கில் தற்போது பிரசாந்த் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் இவரை பற்றிய முக்கிய செய்தி ஒன்று திரையுலகில் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. அந்த ஹாட் டாப்பிக் என்னவென்றால் இவருடைய இரண்டாவது திருமணம் தான்.
நடிகர் பிரசாந்த் ஏற்கனவே விவகாரத்தானவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2005ம் ஆண்டு இவருக்கும், விடிஜி லட்சுமி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது, அடுத்த ஆண்டிலேயே இவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்தது. ஆனால் இவர்கள் இருவருக்குள்ளும் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகள் காரணமாக திருமணமான மூன்றே ஆண்டுகளில் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். இந்நிலையில் இவர் சில காலங்களாகவே சென்னையை சேர்ந்த ஒரு பெண்ணுடன் லிவிங் ரிலேஷனில் இருந்து வருவதாக சில தகவல்கள் தெரிவிக்கிறது.
பிரசாந்துடன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் பெண்ணும் ஏற்கனவே விவாகரத்து பெற்றவர் என்று கூறப்படுகிறது. மேலும் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்து பின்னர் காதலித்து வந்த நிலையில் தற்போது திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து இருக்கின்றனராம். விரைவில் இவர்களின் திருமணம் தேதி குறித்த தகவலை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நடிகர் பிரசாந்திற்கு 48 வயது ஆகிறது. தொடர்ந்து திரையுலகினரின் விவாகரத்து செய்திகளே அதிகமாக வந்துகொண்டிருந்த நிலையில் இவர்களின் திருமணம் குறித்த செய்தி ஆறுதல் அளிப்பதாக அமைந்துள்ளது.
மேலும் படிக்க | ‘வலிமை’ வசூல் எவ்வளவு? - சீக்ரெட்டை உடைத்த போனிகபூர்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR