கே.ஜி.எஃப் 2 படத்தினால் பீஸ்ட் படத்திற்கு சிக்கல்!

பீஸ்ட் மற்றும் கே.ஜி.எஃப் 2 படங்கள் ஏப்ரல் 13, 14 தேதிகளில் வெளியாக உள்ளன.  

Written by - RK Spark | Last Updated : Mar 24, 2022, 03:35 PM IST
  • பீஸ்ட் ஏப்ரல் 13ம் தேதி வெளியாக உள்ளது.
  • பீஸ்ட் படத்துடன் கே.ஜி.எஃப் 2 வெளியாக உள்ளது.
  • இரண்டு படங்களுக்கும் தியேட்டர் கிடைப்பதில் சிக்கல்.
கே.ஜி.எஃப் 2 படத்தினால் பீஸ்ட் படத்திற்கு சிக்கல்! title=

கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு பெரிய பட்ஜெட் படங்கள் சரியான ரிலீஸ் தேதி கிடைக்காமல் தவித்து வருகின்றன.  சமீபத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு வெளியான வலிமை படமும், சரியான ரிலீஸ் தேதி கிடைக்காமல் தள்ளி போனது.  பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், திரையரங்குகளில் 50% மட்டுமே அனுமதிக்கப்பட்டதால் வெளியீடை தள்ளி வைத்தது.  பிறகு பிப்ரவரி 24ம் தேதி வெளியானது.  இதே போல, மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட RRR, ராதே சியாம் போன்ற படங்களும் முன்பு சொன்ன தேதிகளில் இருந்து மாறி வேறு தேதிகளில் வெளியாக உள்ளது.

மேலும் படிக்க | 'விஜய்' படத்தைத் தட்டித் தூக்கிய அனிருத்! - #Exclusive!

மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் ஏப்ரல் 13ம் தேதி வெளியாக உள்ளது.  அதற்கு அடுத்த நாளே கன்னட திரைப்படமான கே.ஜி.எஃப் 2 படமும் பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது.  கன்னட மொழி படம் என்றாலும், கே.ஜி.எஃப் படத்திற்கு இந்தியா முழுவதும் எதிர்பார்ப்பு உள்ளது.  இப்படமும்,  கடந்த ஆண்டே ரிலீஸ்க்கு பிளான் செய்து,  தேதி தள்ளி போய் தற்போது வெளியாக உள்ளது.  தமிழகத்தில் முன்னணி நடிகரான விஜய்யின் பீஸ்ட் படத்துடன் கே.ஜி.எஃப் 2 வெளியாக உள்ளது.  இதனால் இந்த இரண்டு படங்களுக்கும் திரையரங்கு கிடைப்பதில் தற்போது சிரமங்கள் ஏற்பட்டுள்ளது.  

தமிழகத்தில் தற்போது கிட்டத்தட்ட 1000 திரையரங்குகள் உள்ளன.  அதில் மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் போக, தனி திரையரங்கள் தான் அதிகளவில் உள்ளன.  எனவே, அந்த திரையரங்கை கைப்பற்ற இரண்டு படங்களும் போட்டி போட்டு வருகின்றன.  தமிழகத்தில் பீஸ்ட் படத்திற்கே அதிக திரையரங்கு கிடைக்கும் என்றாலும், அதிகமான திரையரங்கில் வெளியிட முடியாத சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது.  கே.ஜி.எஃப் 2 படத்திற்கு ஒருநாள் முன்பே பீஸ்ட் படம் வெளியாக உள்ளதால் அந்த நாளில் மட்டும் அதிக திரையரங்கு கிடைக்கும்.  முன்னதாக பிகில் மற்றும் கைதி படங்கள் ஒரே நாளில் வெளியானது.  அதில் முதலில் பிகில் படத்திற்கு அதிக தியேட்டர் கிடைத்தாலும், அடுத்தடுத்த நாட்களில் கைதி படத்திற்கு அதிக திரையரங்குகள் போடபட்டது.  

மேலும் படிக்க | விஜய்யின் ‘பீஸ்ட்’டில் கை வைத்த உதயநிதி! - என்ன ஆச்சாம்?!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News