Actor Premji Wife Indhu Viral Photos : நடிகரும் பாடகருமான பிரேம்ஜி, சில மாதங்களுக்கு முன்பு இந்து என்பவரை கரம் பிடித்தார். இதையடுத்து, இருவரும் தொடர்ந்து தங்களது சமூக வலைதள பக்கங்களில் போட்டோக்களை பதிவிட்டு வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரேம்ஜி-இந்து திருமணம்:


தமிழ் திரையுலகில், பல ஆண்டுகளாக சிங்கிளாக இருந்து வந்த நடிகர், பிரேம்ஜி. கங்கை அமரனின் இளைய மகனான இவர், தனது அண்ணன் வெங்கட் பிரபு இய்க்கிய பல படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். பல படங்களில் பின்னணி பாடகராகவும், ராப் பாடகராவும் இருந்திருக்கிறார். சிங்கிளாக-ஜாலியாக சுற்றி வந்து கொண்டிருந்த இவர், சில மாதங்களுக்கு முன்னர் இந்து என்பவரை கரம் பிடித்தார். இது, காதல் திருமணம் என்றும், இந்த திருமணத்திற்கு பிறகு பிரேம்ஜி ஆளே மாறிவிட்டதாகவும் தகவல்கள் வெளியானது. 


வயது வித்தியாசம்..


பிரேம்ஜிக்கு, தற்போது 45 வயது ஆகிறது. ஆனால், அவரது மனைவியின் வயது 25தான் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தன்னை விட வயது குறைந்தவர்களை திருமணம் செய்து கொள்வது சகஜம்தான் என்றாலும், இவர்களுக்குள் இருக்கும் 20 வயது வித்தியாசம் மக்களை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. 


பார்ப்பதற்கே ஹீரோயின் போல..


பிரேம்ஜியும், அவரது மனைவியும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த சில நாட்களாக காெஞ்சம் ஆக்டிவாகவே இருக்கின்றனர். இவர்கள் இருவரும் போடும் ரீல்ஸ்களுக்கு ரீச்சும் அதிகமாக இருக்கிறது.



இந்த நிலையில், இந்து சில புகைப்படங்கள் இன்ஸ்டாவில் வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் பார்ப்பதற்கு ஹீரோயின் போல இருப்பதாக சிலர் கமெண்ட் செய்து இருக்கின்றனர். 


மேலும் படிக்க | அதற்குள்ள பிரேம்ஜி வீட்டில் நடந்த இந்த சுப விசேஷம்.. வைரலாகும் போட்டோ


ஜோடியாக சாமி தரிசனம்..


நடிகர் விஜய் நடித்த கோட் படம் வெற்றி பெற்றதையடுத்து திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடிகர் பிரேம்ஜி தனது மனைவி இந்துவுடன் சுவாமி தரிசனம் செய்தார்.


முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். பக்தர்கள் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள், திரைப்பிரபலங்களும் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் பிரேம்ஜி தனது மனைவி இந்து வுடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்தனர். 


அவர்கள் திருச்செந்தூர் மூலவர், சண்முகர், வள்ளி தெய்வானை, தட்சிணாமூர்த்தி மற்றும் சத்ரு சம்ஹார மூர்த்தி ஆகியோரை வணங்கினர். கோவிலில் தரிசனம் முடித்து வெளியே வந்த நடிகர் பிரேம்ஜியுடன் பக்தர்கள் நின்று புகைப்படம் எடுத்தும், செல்பி எடுத்தும் கைக்கொடுத்தும் மகிழ்ந்தனர்.


விஜய் நடித்த கோட் படம் மிகப்பெரிய வெற்றியடைந்ததை கொண்டாடும் விதமாக முருகனை தரிசனம் செய்ய வந்ததாக பிரேம்ஜி கூறினார். தான் கோட் படத்தில் விஜய்யுடன் நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாதாக கூறிய அவர் அஜித் மற்றும் விஜய் இருவரும் ஒன்றாக நடித்தால் நிச்சயம் தானும் அந்த படத்தில் நடிக்க விருப்பம் உள்ளதாக தெரிவித்தார்.


மேலும் படிக்க | Premgi : பிரேம்ஜிக்கும் அவரது மனைவிக்கும் உள்ள வயது வித்தியாசம்! அம்மாடி..இவ்வளவா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ