Premgi : பிரேம்ஜிக்கும் அவரது மனைவிக்கும் உள்ள வயது வித்தியாசம்! அம்மாடி..இவ்வளவா?

Actor Premgi Wife Indu Age Difference : காமெடி நடிகரும் பாடகருமான பிரேம்ஜிக்கு, சமீபத்தில் திருமணம் நடைப்பெற்று முடிந்தது. இந்த நிலையில், இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே இருக்கும் வயது வித்தியாசம் குறித்த தகவல் வைரலாகி வருகிறது.   

Written by - Yuvashree | Last Updated : Jun 15, 2024, 07:41 AM IST
  • 45 வயதில் திருமணம் செய்துகொண்ட பிரேம்ஜி
  • இந்து என்பவரை கரம் பிடித்தார்
  • இவர்களுக்குள் இருக்கும் வயது வித்தியாசம் என்ன?
Premgi : பிரேம்ஜிக்கும் அவரது மனைவிக்கும் உள்ள வயது வித்தியாசம்! அம்மாடி..இவ்வளவா?  title=

Actor Premgi Wife Indu Age Difference : தமிழ் திரையுலகில், காமெடி நடிகராக வளம் வந்தவர் பிரேம்ஜி. கங்கை அமரனின் மகனான இவர், தனது தந்தை மற்றும் அண்ணன் வெங்கட் பிரபுவை தொடர்ந்து திரை உலகிற்குள் நுழைந்தார். 2000 காலங்களில் வெளிவந்த பல படங்களில் ராப் பாடல்கள் பாடியிருக்கிறார். 1997 ஆம் ஆண்டில் கோலிவுட்டில் அடியெடுத்து வைத்த இவரை பிரபலப்படுத்திய பாடல், லூசு பெண்ணே. சில நாட்கள், தனது தம்பி யுவன் சங்கர் ராஜாவிடம் உதவி இசையமைப்பாளராக இருந்த இவர், யுவன் இசையமைத்த வல்லவன் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். 

அண்ணன் மூலம் பிரபலமானார்! 

வெங்கட் பிரபு முதன் முதலாக இயக்கியிருந்த பலம் சென்னை 600028. 2007 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் பிரேம்ஜி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதில், இவர் பேசிய “என்ன கொடுமை சார் இது” என்ற டயலாக், பிற்காலங்களில் டீசர்ட்களில் பொறிக்கப்பட்டன. பாடல்களுடன் சேர்ந்து காமெடியும் வொர்க் அவுட் ஆக, தொடர்ந்து தன் சகோதரன் இயக்கிய சரோஜா, மங்காத்தா, கோவா உள்ளிட்ட படங்களில் நடித்தார். 2016 ஆம் ஆண்டு சென்னை 600028 படத்தின் அடுத்த பாகம் வெளியானது. இதில், இவரது நண்பர்கள் எல்லாம் திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டது போலவும், இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளாதது போலவும் காண்பிக்கப்பட்டிருந்தது. கடைசியாக வெளிவந்த மாநாடு படம் வரை இவரை அனைவரும் சிங்கிளாக தான் பார்த்தனர். 

திருமணம்:

பிரேம்ஜியின் திருமண செய்தி வந்தவுடன் அனைவரும் அது ஏதேனும் படத்திற்கான பிரமோஷன் ஆக இருக்கும் என்று நினைத்தனர். இந்த தகவல் உண்மைதான் என வெங்கட் பிரபு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்ட பிறகுதான் பலர் நம்பினர். இவருக்கும் இந்து என்ற பெண்ணுக்கும் திருத்தணியில் கடந்த ஜூன் 9 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. பிரேம்ஜி திருமணம் செய்து கொண்ட பெண், அவரது உறவினர் என்று கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | பிரேம்ஜி திருமணம்: பிரபலங்கள் பங்கேற்பு

வயது வித்தியாசம்: 

40 களை கடந்தும் சிங்கிளாக சுற்றிக் கொண்டிருக்கும் திரை பிரபலங்களில் ஒருவராக இருந்தார் பிரேம்ஜி. இவருக்கு திருமணம் ஆனபோது வயது 45. தன்னைவிட சிறிய வயது உடையவர்களை திருமணம் செய்து கொள்வது சகஜம் என்றாலும், பிரேம்ஜிக்கும் அவரது மனைவிக்கும் இருக்கும் வயது வித்தியாசம் பலரையும் மலைக்க வைத்துள்ளது. நடிகர் பிரேம்ஜியை திருமணம் செய்து கொண்ட இந்துவிற்கு தற்போது வயது 25தான் என கூறப்படுகிறது. தன் வயதில் பாதி இருக்கும் பெண்ணை திருமணம் செய்து கொண்ட பிரேம்ஜியை அனைவரும் வியப்புடன் பார்த்து வருகின்றனர். இந்த வயது வித்தியாசம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எங்கும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

எத்தனை நாட்களாக திருமணம் செய்து கொள்ளாதது ஏன்? 

நடிகர் பிரேம்ஜி இடம் இதற்கு முன்னர் திருமணம் குறித்து பேசிய போதெல்லாம் அவர் சிங்கிளாக இருப்பதை ஜாலியாக கூறி வந்தார். ஆனால் அதற்கு பின்னால் சோக கதை இருப்பதாக பேசப்படுகிறது. கவர்ச்சி நடிகை ஒருவரை இவர் காதலித்ததாகவும், இந்த காதல் உருவில் முடிந்ததால் அவர் திருமணத்தில் ஈடுபாடு காட்டவில்லை என்றும் கூறப்படுகிறது. தற்போது இவர் திருமணம் செய்து கொள்ள, அந்த நடிகை இன்னும் சிங்கிளாக இருப்பதாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | Actor Premji : 45 வயதில் நடிகர் பிரேம்ஜிக்கு திருமணம்! மணப்பெண் யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News