ஜெயிலர் ஷூட்டிங் எப்போது?... ரஜினியே கொடுத்த அப்டேட்
ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் தொடர்பான அப்டேட்டை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சிவா இயக்கத்தில் ரஜினி நடித்த அன்ணாத்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனையடுத்து ரஜினிகாந்த் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிப்பாரென்று அறிவிக்கப்பட்டது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். ப்ரியங்கா அருள்மோகன், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடிப்பதாக தகவல் வெளியானது. இதற்கிடையெ விஜய்யை வைத்து நெல்சன் திலீப்குமார் இயக்கிய பீஸ்ட் படம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியானது.
ரசிகர்களால பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. குறிப்பாக நெல்சன் திலீப்குமாரை நெட்டிசன்கள் கடுமையாக ட்ரோல் செய்தனர். இதனையடுத்து, பீஸ்ட் பட ரிசல்ட்டால் ரஜினி தரப்பு அப்செட் ஆகிவிட்டதாகவும் நெல்சனுக்கு பதிலாக வேறு ஒரு இயக்குநர் இயக்குவிருப்பதாகவும் கூறப்பட்டது.
ஆனால், நெல்சனே ரஜினி படத்தை இயக்குவார் என உறுதியாக கூறப்பட்ட சூழலில் படத்துக்கு ஜெயிலர் என பெயரிடப்பட்டுள்ளது. இதனால் நெல்சன் இயக்குவது உறுதியாகியுள்ளது.ஆனால் ஷூட்டிங் எப்போது தொடங்குகிறது என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்தது.
மேலும் படிக்க | மீண்டும் தாத்தாவான ரஜினிகாந்த்! சூப்பர் ஸ்டார் வீட்டில் புதிய வாரிசு!
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், “ஆளுநரை சந்தித்து அரசியல் குறித்தும் பேசினேன். ஆனால் நான் அரசியலுக்கு வர வாய்ப்பில்லை” என்றார்.
அதனையடுத்து அவரிடம் ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் எப்போது என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ரஜினி, 15ஆம் தேதி அல்லது 22ஆம் தேதி ஷூட்டிங் தொடங்கும் என்றார்.
மேலும் படிக்க | 'தளபதி-67' படத்தில் இத்தனை வில்லன்களா? அடுக்கடுக்கடுக்காக வெளியான அப்டேட்டுகள்!
மேலும் படிக்க | புஷ்பா-2 படத்தில் விஜய் சேதுபதிக்கு மனைவியாக தேசிய விருது நடிகை?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ