புஷ்பா-2 படத்தில் விஜய் சேதுபதிக்கு மனைவியாக தேசிய விருது நடிகை?

புஷ்பா-தி ரூல் படத்தில் விஜய் சேதுபதியின் மனைவியாக தேசிய விருது பெற்ற பிரபலமான நடிகை பிரியாமணி நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Aug 6, 2022, 10:51 AM IST
  • இந்த ஆண்டு தொடங்குகிறது புஷ்பா 2 படம்.
  • வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார்.
  • மற்றோரு வில்லனாக பகத் பாசில் நடிக்கிறார்.
புஷ்பா-2 படத்தில் விஜய் சேதுபதிக்கு மனைவியாக தேசிய விருது நடிகை? title=

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரது நடிப்பில் கடந்த 2021-ல் வெளியான 'புஷ்பா:தி ரைஸ்' படம் பிளாக்பஸ்டர் ஹிட்டடித்த வசூலை வாரி குவித்தது.  இந்த படத்திற்கு கிடைத்த வெற்றியினை தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகம் 'புஷ்பா:தி ரூல்' படம் உருவாகவிருக்கிறது.  ரசிகர்கள் பலரும் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தை திரையில் காண ஆர்வமுடன் காத்திருக்கின்றனர், அவர்களின் ஆர்வத்தை தூண்டும் விதமாகவும் அடிக்கடி ஊடங்கங்களில் 'புஷ்பா-2' படம் குறித்த பலவித செய்திகள் வெளியாகிக்கொண்டே வருகின்றன.  இப்படத்தின் படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடத்தப்பட போவதாகவும், இரண்டாம் பாகத்தில் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகாவிற்கு திருமணம் நடப்பதாகவும் பல செய்திகள் வெளியானது.

மேலும் இந்த படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா ஆகியோருடன் இணைந்து விஜய் சேதுபதியும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.  தற்போது தெலுங்கு திரையுலக தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் செய்து வருவதன் காரணமாக 'புஷ்பா-2' படத்தின் படப்பிடிப்பில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது.  ஆனால் இந்த நேரத்தை பயன்படுத்தி நடிகர் அல்லு அர்ஜுன் அவரது கதாபாத்திரத்திற்காக தன்னை தயார்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.  இந்நிலையில் புஷ்பா-2 படம் குறித்து லேட்டஸ்டாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது, அதாவது இந்த படத்தில் தேசிய விருது பெற்ற கதாநாயகி பிரியாமணி நடிக்கப்போகிறார் என்று கூறப்பட்டுள்ளது.  மேலும் விஜய் சேதுபதியின் மனைவியாக பிரியாமணி நடிப்பார் என்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளது. 

மேலும் படிக்க | வடசென்னை-2 படம் எப்போது? உறுதிப்படுத்திய இயக்குனர் வெற்றிமாறன்!

இருப்பினும்ம் 'புஷ்பா-2' படத்தில் பிரியாமணி நடிப்பது குறித்து படத்தின் தயாரிப்பாளர் குழு இன்னும் எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்ப்பிடத்தக்கது.  புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் அமைந்த ஊ சொல்றியா மாமா, ஸ்ரீவள்ளி மற்றும் சாமி சாமி போன்ற பாடல்கள் இன்றுவரை ரசிகர்களிடத்தில் பிரபலமாக இருந்து வருவதால் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்திலும் அமையக்கூடிய பாடல்கள் முதல் பாகத்தை காட்டிலும் பிரபலமாக வேண்டும் என்பதில் படக்குழு கவனம் செலுத்தி வருகின்றது.

pushpa

மேலும் படிக்க | புஷ்பா 2: கெட்டப்பை வெளியிட்டு ஆழம் பார்க்கும் அல்லு அர்ஜூன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News