அஜித் பற்றி பேச யாருக்கும் அருகதை இல்லை.- ஆர்.கே.சுரேஷ் ஆவேசம்..!
நடிகர் அஜித் பற்றி பேச யாருக்கும் அருகதை இல்லை என நடிகர் ஆர்.கே.சுரேஷ் ஆவேசமாக பேசியுள்ளார்.
சென்னையில் ‘மாயன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் நடிகர்கள் ஜான் விஜய், ஆர்.கே.சுரேஷ், இயக்குநர்கள் பிரபு சாலமன் மற்றும் ராஜேஷ் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய ஆர்.கே.சுரேஷ், தமிழ் சினிமாவில் 500 படங்களுக்கு மேல் வெளியாக முடியாமல் தவிப்பதாக தெரிவித்தார். பெரிய நடிகர்களின் படங்களை வெளியிடுவதற்கு முக்கியத்துவம் கொடுப்பது போல, நல்ல திரைப்படங்களை தேர்ந்தெடுத்து வெளியிட வேண்டும் எனக் கேட்டுக் கொண்ட அவர், இப்படத்திற்கு பத்திரிகையாளர்கள் ஆதரவளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
மேலும் படிக்க | ஐபிஎல் 2022: சென்னை vs கொல்கத்தா! யார் பலம்?
மேலும், நடிகர் அஜித் பற்றி பேசுவதற்கு யாருக்கும் தகுதி கிடையாது எனக் கூறிய ஆர்.கே.சுரேஷ், சினிமாவில் இருந்துகொண்டே இங்கு இருப்பவர்களைப் பற்றி தரகுறைவாக பேசி விமர்சிப்பது தவறு எனக் கூறினார். மாயன் படத்தின் இயக்குனர் ராஜேஷ் ஒரு குட்டி ராஜமௌலி என்றும் புகழாராம் சூட்டினார். மாயன் படத்தை ராஜமௌலி பார்த்து பாராட்டியிருப்பதாகவும் சுரேஷ் கூறினார். அவரைத் தொடர்ந்து பேசிய இயக்குநர் பிரபுசாலமன், இயக்குநர் ராஜேஷ் குழுவினர் பிரம்மாண்டமாக மாயன் படத்தை உருவாக்கி இருப்பதாக கூறினார். பாகுபலி போல் தமிழ் படங்களும் பிற மொழிகளுக்கு செல்ல வேண்டும் என தன்னுடைய விருப்பத்தை தெரிவித்த அவர், மாயன் படக்குழுவினருக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இடம் காத்திருப்பதாக பாராட்டினார்.
மேலும் படிக்க | "ஐபிஎல் திருவிழா 2022" - புதிய மாற்றமும் புதிய வியூகமும்..!
படத்தின் இயக்குநர் ராஜேஷ் பேசும்போது, "பல ஆராய்ச்சிகளை செய்து இப்படத்தை எடுத்துள்ளோம். வரும் சந்ததிகளுக்கு பல விஷயங்களை இப்படம் கற்றுத் தரும். இந்தப் படத்தில் பணியாற்றியவர்களின் அனைவருடைய உழைப்பும் பேசப்படும்" என்று கூறினார். ஜாக்குவார் தங்கம் பேசும்போது, படக்குழுவினருக்கு தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்தார். மேலும், இப்படத்தின் இசையமைப்பாளர் ஜோன்ஸ் அடுத்த இளையராஜாவாக வருவார் என்றும் புகழாரம் சூட்டினார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR