White Carpet Films சார்பில், K விஜய் பாண்டி தயாரிப்பில், அறிமுக இயக்குநர் வெங்கி இயக்கத்தில், சதீஷ் நாயகனாக நடிக்கும், வித்தியாசமான ஹெய்ஸ்ட் திரைப்படம்  “வித்தைக்காரன்”. ப்ளாக் காமெடியில் உருவாகியுள்ள இப்படம் பிப்ரவரி 23 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில்,  திரைப்படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில்  நடைபெற்றது.  இந்நிகழ்வினில், தயாரிப்பாளர் K விஜய் பாண்டி பேசியதாவது, எங்களின் இந்த திரைப்படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் என் நன்றிகள். என் முதல் படம் தேஜாவு அதற்கு நல்ல ஆதரவு தந்தீர்கள். அதே போல் இந்த படத்திற்கும் நல்ல  ஆதரவு தாருங்கள் நன்றி. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஹாலிவுட் பட விருதுகளில் இடம் பெற்றுள்ள அட்லீயின் ஜவான்!


நடிகர் சதீஷ் பேசியதாவது, என் படங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு நன்றி. தமிழக மக்கள் என்னை ஹீரோவாக ஏற்றுக்கொண்டு படம் பார்த்ததற்கு நன்றி. தளபதி விஜய் சார் தான் இந்த படத்தை துவங்கி வைத்தார். அவருக்கு என் முதல் நன்றி. என்னைச் சமீபத்தில் சந்தித்த போது கான்ஜூரிங் கண்ணப்பன் பார்த்ததாகச் சொன்னார். அவர் பாராட்டியது மிகப்பெரிய சந்தோஷம். இயக்குநர் வெங்கி தளபதி விஜய்யின் தீவிர ரசிகர். ‘V’ செண்டிமெண்ட் எங்களுக்கு ஒர்க் அவுட் ஆகி வருகிறது. படம் ஆரம்பித்து வைத்த விஜய் சார், இயக்குநர் வெங்கி, பட டைட்டில் வித்தைக்காரன் என எல்லாம் ‘V’ தான். 


இப்படம் வெற்றியாக அமையுமென நம்புகிறேன். ஆனந்தராஜ் சார், இயக்குநர் சுப்பிரமணிய சிவா என எல்லோரும் நல்ல ரோல் செய்திருக்கிறார்கள். ஆனந்தராஜ் சாரை எல்லாம் சின்ன வயதில் பார்த்து பயந்திருக்கிறேன். இப்போது அவருடன் நடிப்பது மகிழ்ச்சி. சிம்ரன் குப்தா தமிழே தெரியாமல், டயலாக் மக்கப் பண்ணி அத்தனை அர்ப்பணிப்புடன் நடித்தார், அவருக்கு வாழ்த்துக்கள். இந்தப் படம் நல்ல ஒரு முயற்சியாக செய்துள்ளோம். எங்களை நம்பிய தயாரிப்பாளருக்கு நன்றி. தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது. அனைவருக்கும் நன்றி. 


இயக்குநர் வெங்கி பேசியதாவது, இந்தக் கதையை வைத்துக் கொண்டு, நிறைய தயாரிப்பாளரிடம் அலைந்திருக்கிறேன். ஆனால் தயாரிப்பாளர் விஜய் சாரிடம் கதை சொன்ன உடனே ஓகே சொல்லி விட்டார். அவருக்கு நன்றி. தயாரிப்பாளர் நான் கேட்ட அனைத்தையும் தந்தார். படம் பார்த்தால் உங்களுக்கு தெரியும். சதீஷ் பல காலமாக நண்பர், ஹீரோவாகிவிட்டார். இந்தக் கதை சொன்னேன் அவருக்குப் பிடித்திருந்தது. உடனே ஒத்துக் கொண்டார். நண்பன் யுவாவுடன் மாஸ்டர் படத்தில் வேலை செய்தேன். இந்தப் படம் செய்கிறேன் என்றேன் வந்துவிட்டார். இந்தப் படத்திற்காக நிறைய உழைத்துள்ளார். இந்தப்படத்திற்கு ஐடியா தந்ததிலிருந்து நிறையப் பங்கெடுத்த நண்பன் கார்த்திக்கு நன்றி. சிம்ரன் குப்தா என் படத்தின் கதாபாத்திரத்திற்கு மிகச்சரியாக இருந்தார். 


சுத்தமாக தமிழ் தெரியாது ஆனால் டயலாக்கை தயார் செய்து கொண்டு மிக அர்ப்பணிப்போடு செய்தார்.  நடித்த அனைவரும் நன்றாக செய்துள்ளனர். நானும் இந்த படத்தில் ஒரு சின்ன கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளேன். இந்த படத்தில் நிறையப் புதுமுகம் தான் வேலை செய்துள்ளனர். அனைவருக்கும் என் நன்றிகள். என் டைரக்சன் டீம், 10பேர் என் கோபத்தைப் பொறுத்துக்கொண்டு வேலை செய்தனர். அனைவருக்கும் நன்றி. படம் உங்களுக்கு பிடிக்குமென நம்புகிறேன். நன்றி. 


நடிகை சிம்ரன் குப்தா பேசியதாவது, தயாரிப்பாளர் விஜய் சார், இயக்குநர் வெங்கி ஆகியோருக்கு நன்றி. வித்தைக்காரன் எனக்கு முக்கியமான படம். எனது திறமையை நிரூபிக்க கிடைத்த வாய்ப்பாக கருதுகிறேன். எனக்கு ஆதரவு தந்த சதீஷ்க்கு நன்றி. வித்தைக்காரன் கண்டிப்பாகச் சிறந்த வெற்றி படமாக இருக்கும்; நன்றி.   ஒரு கொள்ளையும் அதன் பின்னணியில் நடக்கும் சம்பவங்களுமாக, முழுக்க முழுக்க ப்ளாக் காமெடி கலந்த திரைக்கதையில், வித்தியாசமான காமெடித் திரைப்படமாக இப்படத்தை இயக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் வெங்கி. காமெடி நடிகராக அறிமுகமாகி வெற்றிகரமான நாயகனாக வலம் வரும் சதீஷ் இப்படத்தில் நாயகானாக நடித்துள்ளார். நாயகியாக சிம்ரன் குப்தா நடித்துள்ளார். இவர்களுடன் ஆனந்த்ராஜ், மதுசூதனன் ராவ், சுப்பிரமண்ய சிவா, ஜான் விஜய், ஆஷிஃப் அலி, பாவெல், ஜப்பான் குமார், சாம்ஸ், சாமிநாதன், மாரிமுத்து முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். 


மேலும் படிக்க | ரசிகரின் போனை பிடுங்கி விசிறியடித்த பிரபல பாடகர்..வைரல் வீடியோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ