Actor Sathyaraj in Narendra Modi Biopic : பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகுவதாகவும் அதில் நடிகர் சத்யராஜ் நாயகனாக நடிப்பதாகவும் தகவல்கள் வெளியானது. இதைத்தொடர்ந்து அவரே இதற்கு பதில் அளித்திருக்கிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மோடியின் பயோபிக்கில் சத்யராஜ்?


இந்திய திரையுலகில் கடந்த சில ஆண்டுகளாக வாழ்க்கை வரலாறு திரைப்படங்களும் உண்மை சம்பவங்களை தழுவி எடுக்கப்படும் திரைப்படங்களும் எடுக்கப்பட்டு ஹிட் அடித்து வருகின்றனர். இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் பாலிவுட்டில் உருவாக இருப்பதாக தகவல்கள் பரவி வந்தது. இந்த நிலையில், இந்தியாவில் இத்தனை நடிகர்கள் இருக்கும் போது ஏன் சத்யராஜ் அதில் நடிக்க வேண்டும் என்று கேள்வி எழுந்தது. 


அது மட்டுமன்றி, பெரியாரிஸ்டான சத்யராஜ் பெரியாரை வைத்து 2007ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட படத்தில் பெரியாரின் கதாப்பாத்திரத்திலேயே நடித்திருக்கிறார். இதனால், மோடியாக அவர் நடிக்க வாய்ப்பே இல்லை என்றும், அப்படி அவர் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருந்தால் அது வதந்தியாக இருக்கும் என்றும் கூறப்பட்டது. கூடவே, ஒரு சிலர் சத்யராஜ் மோடியாக நடிக்க பணத்திற்காக ஒப்புக்கொண்டதாகவும் கூறினர். இந்த நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்து சத்யராஜ் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.


சத்யராஜ் பேச்சு:


தனியார் ஊடக சேனல் ஒன்றிற்கு அவர் கொடுத்துள்ள பேட்டியில்,  பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தான் நடிக்கப்போவதில்லை என்றும் தான் ஒரு பெரியாரிஸ்ட் என்றும் கூறியிருக்கிறார்.  மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் மோடியாக நடிக்க நடிகர் சத்யராஜ் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், பாலிவுட்டில் பிரமாண்டமாக தயாராக உள்ளளதாகவும் வெளியான தகவலுக்கு  நடிகர் சத்யராஜ் மறுப்பு தெரிவித்திருக்கிறார். இதனால் தமிழ் ரசிகர்கள் கொஞ்சம் நிம்மதி அடைந்திருக்கின்றனர். 


ரியல் லைஃப் அமவாச..


சத்யராஜுக்கு பெரிய பெயரை தேடித்தந்த படங்களுள் ஒன்று, அமைதிப்படை. இந்த படத்தில் அவர் ஒரு அரசியல்வாதியிடம் பிச்சைக்கார கோலத்தில் வந்து, அரசியல் கட்சியில் சேருவார். இறுதியில் அந்த அரசியல்வாதியே இவரது காலை பிடிக்கும் அளவிற்கு மாறிவிடுவார். விலத்தனமான ஹீரோயிசத்தை இப்படத்தில் வெளிப்படுத்தியிருந்த இவர், அதில் பல விதமான நக்கலான நடிப்பை வெளிப்படுத்தி, பலர் மனங்களை கவர்ந்தார். இதையடுத்து, நரேந்திர மோடியின் உண்மையான கேரக்டருடன் ஒப்பிட்டு பேசிய ரசிகர்கள், “இது அவருக்கு சரியான ரோல்தான்” என்று கூறினர். இதையடுத்து, சத்யராஜ் மோடியாக நடிக்கிறார் என்ற செய்தி காட்டுத்தீ போல பரவ ஆரம்பித்தது. 


மேலும் படிக்க | அண்ணாமலையின் வாழ்க்கை வரலாறு படமாகிறது! ஹீரோவாக நடிப்பது யார் தெரியுமா?


வைரலான கார்த்திக் சிதம்பரத்தின் ட்வீட்:


சத்யராஜ், மோடியாக நடிக்க இருக்கும் செய்தியை கேள்விப்பட்ட காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகி கார்த்திக் சிதம்பரம், ஒரு ட்வீட்டை வெளியிட்டார். 



இதில், அமாவாசை கேரக்டரை நடிக்க இவர்தான் கச்சிதமான நடிகர் என்று குறிப்பிட்டிருந்தார். இவரது பதிவும் தற்போது வைரலாகி வருகிறது. 


மேலும் படிக்க | நரேந்திர மோடி பயோபிக் உருவாகிறது!? ஹீரோவாக நடிக்கும் தமிழ் நடிகர்..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ